செய்திமுரசு

யாழில் மனித உரிமைகள் அலுவலகம் மூடப்பட்டது!

கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரும்வரைக்கும் மூடக்பட்டுள்ளது. அலுவலகம் மூடப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளை 1996 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார். கொவிட்-19 கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் பீடித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களையும் ...

Read More »

“சீன வைரஸ்” – வர்ணனைக்கு அதிகரிக்கும் கண்டனங்கள்!

சீனாவை அவமதிப்பதற்காக கொவிட் — 19 கொரோனாவைரஸை வௌநாட்டவரகள் மீதான வெறுப்புணர்வின் தொனியில் ‘ சீன வைரஸ் ‘ என்று அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் செய்த வர்ணனைக்கு பரவலாக கடுமையான கண்டனங்கள் கிளம்பியிருக்கின்றன. கொரோனாவைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அந்த வைரஸ் பரவலுக்கு சீனா மீது பழியைச் சுமத்துகின்ற ஒரு சில அமெரிக்க அரசியல்வாதிகள் அதை ‘ சீன வைரஸ் ‘ அல்லது ‘ அந்நிய வைரஸ்’ என்று நாமகரணம் சூட்டியிருக்கிக்கிறார்கள். சீன வைரஸ் என்ற பதம் ...

Read More »

இலங்கை முழுவதும் ஊரடங்கு!

இலங்கை ரீதியில் காவல் துறை ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், நடளாவிய ரீதியில் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கை அமுல்படுத்தபடவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

Read More »

நியூசிலாந்தில் இனி கருக்கலைப்பு குற்றம் அல்ல!

நியூசிலாந்தில் கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சைகளில், குற்றமாக கருதப்பட்டு வந்த கருக்கலைப்பு குற்றம், தற்போது குற்றம் அல்ல என்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. நியூசிலாந்து நாட்டில் கருக்கலைப்பு என்பது குற்றம். இதற்கு அங்கு 1977-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம் வழிவகுத்து இருந்தது. இந்த நிலையில், அந்த நாட்டின் குற்றவியல் சட்டத்தில் இருந்து, கருக்கலைப்பு குற்றம் என்று கூறப்பட்ட பிரிவை நீக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக ...

Read More »

ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் 14 நாட்கள் தனிமை

ஆஸ்திரேலியா சென்று திரும்பிய நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள கிரிக்கெட் வீரர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நியூசிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் கொரோனா வைரஸ் காரணமாக முதல் ஆட்டம் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டது. எஞ்சிய ஆட்டங்கள் ரத்து செய்யப்பபட்டன. ஆஸ்திரேலியாவில் இருந்து அவசரமாக நாடு திரும்பிய நியூசிலாந்து வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்ஸ் உத்தரவின்படி 15 ...

Read More »

வன்னி வாக்குகளை பிரிக்கும் பலகட்சி அரசியல்!

அடம்பன்கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்பது வெறும் வார்த்தை ஜாலங்களாகவே, தமிழ் அரசியல் தரப்பில் காணப்படுகின்றது என்பது, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்படையாகி உள்ளது. தமிழர் தரப்பு அரசியல் நிலைப்பாடுகள், பலதரப்பட்ட விடயங்களை உள்ளடக்கி உள்ளன. தீர்வுகள் கிடைக்கப் பெற வேண்டிய, அவர்களது பிரச்சினைகள், நிறைந்ததே உள்ளன. இந்தச் சூழலில், தமிழர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் உள்ளதா என்ற ஐயப்பாடு காணப்படுகின்றது. பல தசாப்தங்களாகத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான நகர்வுகள், கைகூடாத நிலையிலேயே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆட்சேர்ப்பில், கட்சிகள் ...

Read More »

பரசிட்டமோலை பயன்படுத்துங்கள் – ஆனால் அந்த மருந்து வேண்டாம்!

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை ஐப்யூபுரூபெனை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது. ;ஐப்யூபுரூபென் உட்பட சில மருந்துகள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை மேலும் ஆபத்தானதாக மாற்றலாம் என லான்செட் சஞ்சிகையில் கட்டுரையொன்று வெளியாகியுள்ள நிலையிலேயே உலக சுகாதார ஸ்தாபனமும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. பிரான்சின் சுகாதார அமைச்சரும் நோயாளிகள் ஐப்யூபுரூபென் ;அஸ்பிரின் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐப்யூபுரூபென் போன்ற மருந்துகளை ஏற்படுத்துவதே நோய் தாக்கம் அதிகரிப்பதற்கு காரணமாகயிருக்கலாம் என தெரிவித்துள்ள அமைச்சர் உங்களிற்கு காய்ச்சல் இருந்தால் ...

Read More »

வவுனியாவில் விஷேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்பு!

வவுனியாவில் பலத்த பாதுகாப்பு நடைமுறை படுத்தப்பட்டுள்ளதுடன் விஷேட அதிரடிப்படையினர் காவல் துறையுடன் இணைந்து வீதி பாதுகாப்பு நடவடிக்கையில் மேற்கொண்டதுடன்  320 காவல் துறையினர்  பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். வவுனியாவில் இன்று பலத்த பாதுகாப்பு நடைமுறை படுத்தப்பட்டுள்ளதுடன் வன்னி பிராந்திய பிரதிப் காவல் துறை மா அதிபர் தம்மிக்க பிரியந்த, சிரேஸ்ர காவல் துறை  அத்தியட்சகர் திஸ்சலால் த சில்வா வவுனியா தலைமை காவல் துறை  நிலைய பொறுப்பதிகாரி மானவடு ஆகியோரின் தலைமையின் கீழ் விஷேட அதிரடிப்படையினர் காவல் துறையுடன் இணைந்து வீதி பாதுகாப்பு ...

Read More »

கட்டுநாயக்க விமான நிலைய பணிகள் இன்றுடன் நிறுத்தம்!

கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை கட்டுபடுத்தும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணிகள் விமானங்கள் வருகைத்தருவது இன்று அதிகாலை 4 மணிமுதல் எதிர்வரும் 25 ஆம் திகதி நள்ளிரவு வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமானங்கள் வருகை தருவது இடைநிறுத்தப்படுவதற்கு முன்னதாக நான்கு விமானங்கள் நாட்டை வந்தடைந்தன தம்பதிவ யாத்திரைக்கு சென்றவர்கள் உள்ளிட்ட இந்தியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் அந்த விமானங்களில் நாட்டை வந்தடைந்தனர். சென்னை, புதுடில்லி, மும்பை உள்ளிட்ட இடங்களிலிருந்து குறித்த விமானங்கள் நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

வெளியில் நடமாடுவதை குறையுங்கள்!

யாழில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , இரண்டு வார காலமாவது வர்த்தக நிலையங்களை மூடி மக்கள் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுங்கள் என அரச வைத்திய அதிகாரி சங்க பிரதிநிதிகள் கூட்டாக கோரியுள்ளனர் யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தனர். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் பலாலியில் வந்திறங்கிய 60 பேரை தேடுகிறோம். இதுவரையில் யாழ்ப்பாணத்தில் எந்த நோயாளியும் இனம் காணப்படவில்லை. பலாலி விமான நிலையம் மூலம் எமது ...

Read More »