செய்திமுரசு

தியாகதீபம் திலீபனுக்குஅஞ்சலி- சிவாஜிலிங்கம் கைது

நீதிமன்ற தடையை மீறி தியாகதீபம்திலிபனின் நினைவுதினத்தை அனுஸ்டித்த குற்றச்சாட்டின் கீழ் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் காவல்துறையினரால் கைதுசெய்ய்பட்டுள்ளார். கோண்டாவில் பகுதியில் திலீபனுக்கு சிவாஜிலிங்கம் இன்று காலை அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அவர்கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More »

யாழ். பொம்மைவெளி வீடமைப்புப் பிரச்சினை இந்திக்க அநுருத்த நேரில் ஆய்வு

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவை குறித்த பகுதிக்கு சென்று, விடயங்களை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். பொம்மைவெளி பகுதியில் வெள்ளப் பெருக்கு அபாயம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும், தமக்கான வீடமைப்பு திட்டத்தை அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அந்த பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். ...

Read More »

செய்தியாளர்கள் சட்டத்தைத் தவிர்த்தனர் என்ற சீனாவின் குறைகூறலை ஆஸ்திரேலியா மறுத்துள்ளது

சீனாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு செய்தியாளர்கள் இருவர் தூதரகப் பாதுகாப்போடு வந்ததை அடுத்து, அவர்கள் மீதான சீன விசாரணையைத் தடுக்கவில்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. தனது தூதரக அதிகாரிகள் முறையாக நடந்துகொண்டார்கள் என்றும் அது குறிப்பிட்டது. செய்தியாளர்கள் பில் பிர்டல்ஸ் (Bill Birtles), மைக் ஸ்மித் (Mike Smith) இருவரும் சீனாவின் விசாரணையைத் தவிர்க்க, ஆஸ்திரேலியத் தூதரக அதிகாரிகள் உதவியதாக பெய்ச்சிங் கூறியது. அதற்குப் பதிலளித்த ஆஸ்திரேலிய அமைச்சர் ஒருவர், அவர்கள் இருவரும் நாட்டை விட்டு வெளியேற சீனா ஒப்புக்கொண்டதாகச் சொன்னார். சீனாவின் காவல்துறை அதிகாரிகள் அவர்களை ...

Read More »

தடம் மாறி ஆஸ்திரேலிய நதிக்குள் வந்த அண்டார்டிகா திமிங்கிலங்கள்

அண்டார்டிகாவில் காணப்படும் Humpback திமிங்கிலங்கள் தடம் மாறி ஆஸ்திரேலியாவின் நதியை அடைந்துள்ளன. இந்த வாரம் 3 Humpback திமிங்கிலங்கள் வட ஆஸ்திரேலியாவில் உள்ள நதியில் காணப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். அந்த நதியில் முதலைகள் அதிகமாக உள்ளன. 2 திமிங்கிலங்கள் பாதுகாப்பாகக் கடலுக்குச் சென்றுவிட்டன என்றும் எஞ்சிய ஒன்று இருக்குமிடம் விசாரிக்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் கூறினர். திமிங்கிலம் காணப்பட்ட பகுதியில் படகு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் Humpback திமிங்கிலங்கள் காணப்படுவது இதுவே முதல்முறை.

Read More »

சுமந்திரன் கட்சியிலிருந்து……….தவராஜா விரிவான கடிதம்

“கட்சியின் நலனை முதன்மைப்படுத்தி திட்டங்களை வகுப்பதும் செயற்படுத்துவதும் கட்சியின் மீது பற்றுக் கொண்ட அனைவரதும் கடப்பாடாகும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரான ஆப்பிரகாம் மதியாபரணம் சுமந்திரன் தொடர்ந்தும் தமிழ்மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்தியதுடன் தன்னிச்சையாக செயல்பட்டமை தமிழ் தேசிய கூட்டமைப்பை பாரிய பின்னடைவுக்கு எடுத்துச் சென்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சித் கொழும்புக் கிளைத் தலைவரும், அரசியல் உயர்மட்டக் குழு உறுப்பினருமான கே.வி.தவராஜா, “சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்படலாம். இது தொடர்பில் தலைமைத்துவம் உடனடியாக செயல்படாவிடின் ஜக்கிய ...

Read More »

ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியின் ஆலோசர், பிராண்ட் தூதராக……

ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராகவும், பிராண்ட் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஷேன் வார்னோ. ஐபிஎல் அறிமுகம் தொடரில் இவரது தலைமையில்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த வருடமும் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அணியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஷேன் வார்னே கூறுகையில் ‘‘இரண்டு பணியுடன் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ், என்னுடைய ...

Read More »

நியூஸிலந்தில் பாதுகாப்பு இடைவெளிக் கட்டுப்பாடுகளை எதிர்த்துப் போராட்டம்

நியூஸிலந்தின் ஆக்லந்து நகரில் COVID-19 நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு இடைவெளிக் கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் நெருக்கமாகவும் முகக்கவசங்கள் அணியாமலும் இருந்தனர். உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. நியூஸிலந்தில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நோய்த்தொற்று கடந்த மாதம் மீண்டும் தலைதூக்கியது. அதைத் தொடர்ந்து சில இடங்களில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. நியூஸிலந்தில் தற்போது ஓர் இடத்தில் 10-க்கும் அதிகமானோர் ...

Read More »

பூஸா கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்கிறார் கமல் குணரத்ன

பூஸா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் கண்டியில் வைத்து ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிலரது கோரிக்கைகள் நிறைவேற்றக்கூடியதாக இருக்கின்றபோதிலும், சிறைச்சாலைகளுக்குள் இருந்து கைதிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் நடவடிக்கைக்கு அச்சமடைந்து இந்த பதவியை வகிக்க முடியாது. உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் குறித்த சிலரே நாட்டில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட பாரிய குழுவினராவர் என ...

Read More »

தமிழில் ஒரு சர்வதேச நாவல்

சென்ற நூற்றாண்டில் தமிழில் பிரதானப் போக்காக இருந்த நவீன நாவல் வடிவம், நவீன எழுத்துகளோடு சேர்த்துப் பார்க்க முடியாத தனித்துவமான எழுத்து ப.சிங்காரத்துடையது. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தொன்மை கொண்ட தமிழர் வரலாறு, மெய்யியல், பண்பாடு, வாழ்க்கைப் பார்வை, மொழி மரபின் குணங்கள் சேர்ந்த வெளிப்பாடு ப.சிங்காரம். உலகப் போரின் பின்னணியில் தென்கிழக்காசிய நாடுகளின் ஒரு காலகட்டத்து அரசியல், வெகுஜனப் பண்பாட்டை விரிவாகவும் நுட்பமாகவும் அவர் தனது இரண்டு நாவல்களிலும் படைத்துள்ளார். அதிலும், ‘புயலில் ஒரு தோணி’ நாவலானது லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ ...

Read More »

அவுஸ்திரேலியா விக்டோரியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி

விக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் Murray ஆற்றுக்குச் சென்ற இவ்விளைஞர் நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது. இவரைத் தேடும்பணி வெள்ளி பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டுவந்தநிலையில் குறித்த இளைஞரின் சடலம் Murray ஆற்றிலிருந்து மீட்கப்பட்டதாக  காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர். மெல்பேர்னில் கல்விகற்றுவரும் இலங்கையைச் சேர்ந்த21 வயது தமிழ் இளைஞரே இவ்வாறு மரணமடைந்ததாகவும், தொழில்நிமித்தம் தனது நண்பர்களோடு அவர் Mildura-வுக்கு சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

Read More »