நியூஸிலந்தின் ஆக்லந்து நகரில் COVID-19 நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு இடைவெளிக் கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் நெருக்கமாகவும் முகக்கவசங்கள் அணியாமலும் இருந்தனர்.
உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
நியூஸிலந்தில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நோய்த்தொற்று கடந்த மாதம் மீண்டும் தலைதூக்கியது.
அதைத் தொடர்ந்து சில இடங்களில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டது.
நியூஸிலந்தில் தற்போது ஓர் இடத்தில் 10-க்கும் அதிகமானோர் கூடக்கூடாது; பொதுப் போக்குவரத்தில் முகக்கவசங்கள் அணியவேண்டும்.
தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் நோய்த்தொற்றால் 1,444 பாதிக்கப்பட்டுள்ளனர். 24 பேர் மாண்டனர்.