செய்திமுரசு

‘‘காலனியாதிக்க மனநிலை’’- வளர்ந்த நாடுகள் மீது உலக சுகாதார நிறுவனம் சாடல்

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை சரியாக பாதுகாக்கும் நல்ல கட்டமைப்பு இல்லை என வளர்ந்த நாடுகள் கூறுவது காலனியாதிக்க மனநிலையை காட்டுகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வளர்ந்த நாடுகளிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வளர்ந்து வரும் நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் வழங்குவதற்காக கோவேக்ஸ் என்ற திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் இதுவரை 132 ...

Read More »

ஆஸ்திரேலியாவின் பிரபல ‘Spelling Bee’ ஆங்கில போட்டியில் வென்ற தமிழ்ச்சிறுமி!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் Prime Minister’s Spelling Bee தேசிய போட்டியில் தமிழ்ச் சிறுமியான தீக்சிதா கார்த்திக் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு வயது 11.

Read More »

சிறிலங்கா ஜனாதிபதியாலும் பிரதமராலும் ஏன் முடியாது?

அமைச்சரால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும் என்றால், ஏன் ஜனாதிபதியாலும் பிரதமராலும் விடுவிக்க முடியவில்லை? என  ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பினார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அனந்தி சசிதரன் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார். மேலும், நீண்ட காலமாக சிறைகளில் இருந்த  அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுவொரு மகிழ்ச்சியான விடயமாகும். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வருடக்கணக்கில் போராட்டங்கள் நடைபெற்று ...

Read More »

பங்காளிகளின் பற்களை பிடுங்க மந்திராலோசனை?

ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கும் அதன் பங்காளிக் கட்சிகள் சிலவற்றுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த கருத்து முரண்பாடுகள் நீண்டுகொண்டே செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்காளிகள் சில தாம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் உடும்புப்பிடியாக இருப்பதால் மாற்று வழியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் ஆலோசித்துள்ளனர் என அறியமுடிகின்றது. அதன் முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்குள் கொண்டுவந்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறிய விடுமுறையில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்ஷ நேற்று முன்தினம் (24) நாடு திரும்பினார். அவர் ...

Read More »

“கோபிகா-தருணிகாவுக்கு பதிலாக Jane-Sally என்றிருந்தால் அரசு விசா தந்திருக்கும்”

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களான பிரியா-நடேஸ் தம்பதியரின் இரு மகள்களான கோபிகா மற்றும் தருணிகாவுக்கு Jane மற்றும் Sally என்ற பெயர்கள் இருந்திருந்தால் ஆஸ்திரேலிய அரசு அவர்களை வேறுவிதமாக நடத்தியிருக்கும் என முன்வைக்கப்பட்ட விமர்சனத்தை குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். ஆஸ்திரேலிய National கட்சியின் தலைவராகவும் துணைப் பிரதமராகவும் மீண்டும் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னதாக கருத்துவெளியிட்ட Barnaby Joyce, பிரியா குடும்பத்தை அரசு நடத்தும் விதம் தொடர்பில் விமர்சனத்தை வெளியிட்டதுடன், ஆஸ்திரேலியாவில் பிறந்த இரு பெண் குழந்தைகளுக்கும் Jane மற்றும் Sally என்ற பெயர்கள் இருந்திருந்தால் அவர்களை வேறொரு ...

Read More »

நகங்களின் மீது ஒளித்து வைக்கப்படும் ‘மைக்ரோ சிப்’

துபாயில் சமீப காலமாக அழகு நிலையங்களில் நகங்களின் மீது நெயில் பாலீஷ் உதவியுடன் ஒளித்து வைக்கப்படும் மைக்ரோ சிப் பிரபலமடைந்து வருகிறது. ஆங்கிலத்தில் நியர் பீல்டு கம்யூனிகேசன் டெக்னாலஜி என்பதன் சுருக்கம் என்.எப்.சி. என்று அழைக்கப்படுகிறது. தற்போது வெளிவரும் புதிய ரக ஸ்மார்ட் போன்களில் இந்த தொழில்நுட்பம் இருப்பதை காணலாம். பொதுவாக தகவல்களை ஒரு ஸ்மார்ட் போனிலிருந்து மற்றொரு போனுக்கு பரிமாற்றி கொள்ள இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. என்.எப்.சி.யை பொறுத்தவரையில் உணரும் கருவி அல்லது செல்போனை பக்கத்தில் வைத்தாலே போதும் தகவல் பரிமாற்றம் செய்து ...

Read More »

நடுக்கடலில் பற்றியெறியும் மற்றுமொரு கப்பல்

MSC MESSINA என்ற கொள்கலன் கப்பல் நடுக்கடலில் தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மற்றும் மலாக்கா ஜலசந்திக்கு இடையில் இந்திய பெருங்கடலில் பயணிக்கும் போது குறித்த கப்பலின் இயந்திர அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கப்பல் கொழும்பிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் உள்ளதாக கூறப்படுகின்றது. லிபேரியா நாட்டு கொடியுடன் குறித்த கொள்கலன் கப்பல் பயணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More »

மஹர – வெலிக்கடை மரண தண்டனைக் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது

மஹர மற்றும் வெலிக்கடை சிறைகளில் கைதிகள் குழு ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் தொடர்வதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவினரே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகள் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையில் ஒரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Read More »

பொதுமன்னிப்புக்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார் ?

அரசியலமைப்பின் 34(1) ஆம் சரத்தின் கீழ் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார் ? என்று கேள்வியெழுப்பியுள்ள ; இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இது தொடர்பில் மேலும் பல கேள்விகளை ஜனாதிபதியிடம் முன்வைத்து அவைகுறித்த விபரங்களைப் தமக்கும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது. இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று இந்த கேள்விகளுக்கான பதில்கள் திருப்திகரமானவையாக அமையாதபட்சத்தில், துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு நியாயமற்றது என்றும் அது சட்டத்தின் ஆட்சியும் நீதித்துறையின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் சீர்குலைவதற்கே வழிவகுக்கும் ...

Read More »

விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் விபரம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றையதினம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் 16 பேர் உள்ளிட்ட, 93 கைதிகள், பொசன் பெளர்ணமி தினத்தையொட்டி, விடுதலை செய்துள்ளார். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ள 16 தமிழ் அரசியல் கைதிகளின் விபரமும் வெளிவந்துள்ளது. இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் நடராஜா சரவணபவன், புருஷோத்தமன் அரவிந்தன், இராசபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், நளன் சிவலிங்கம், சூரியமூர்த்தி ஜீவோகன், சிவப்பிரகாசன் சிவசீலன், மயில்வாகனம் மாடன், சூர்யகுமார் ஜெயச்சந்திரன் மன்னார் மாவட்டம் சைமன் சந்தியாகு, ...

Read More »