இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மிகக்கொடிய போரின் அழிவுகளின் தாக்கம் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வாழும் என்னையும் எனது குடும்பத்தையும் பாதிக்கும் என நான் நினைத்திருக்கவில்லை என அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்ஸ் மாநில அவை உறுப்பினர் கியு மக்டேமைற் இன்று புதன்கிழமை மாநில அவையில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். அவரது உரையின் முக்கிய விடயங்கள் வருமாறு: கடந்த மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய கொடிய இனவழிப்பின் நினைவு நாள் தொடர்பான எனது உரை தொடர்பாக கடுமையான மிகவும் அதிர்ச்சியாக இருக்ககூடிய செய்தி என்னவென்றால், இந்த கொடுமையான அச்சுறுத்தல்கள் அனைத்தும் ...
Read More »செய்திமுரசு
நியூசிலாந்து தேர்தலில் களமிறங்கும் ஈழப்பெண்
ஈழத் தீவில் புகழ்பெற்ற அரசியல் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த வனுஷி வோல்ட்டேர்ஸ் எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி நியூசிலாந்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார். இவரை வேட்பாளராகக் களமிறக்குவதற்கான அங்கீகாரத்தை தொழிற்கட்சி வழங்கியுள்ளது. ஆக்லான்டில் போட்டியிடவுள்ள இவர், தேர்தலில் தெரிவு செய்யப்பட்டால் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இலங்கையில் பிறந்த முதலாவது உறுப்பினர் என்ற பெருமையைப் பெறுவார். வனுஷி நியூசிலாந்து அரசாங்கத்திலும், சர்வதேச ரீதியாகவும் பல்வேறு பொறுப்புவாய்ந்த உயர் பதவிகளை வகித்ததன் மூலம் பரந்த நிபுணத்துவ அறிவையும், அனுபவத்தையும் ...
Read More »வெடிபொருள் நிரப்பிய பொம்மை! பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணை!
யாழ்ப்பாணம், வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக வெடிபொருள் நிரப்பிய பொம்மை ஒன்றை வீசிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் நீர்வேலியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டு கோப்பாய் காவல் துறை ஊடாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக பொம்மை ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. அந்தப் பொம்மையை ஆராய்ந்த போது வெடித்ததில் படைச் சிப்பாய்கள் இருவர் காயமடைந்தனர். அவர்கள் பலாலி படைத்தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர். வல்லை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் வெடிப்புச் ...
Read More »சீன தலைநகரில் கொத்து கொத்தாக பரவத்தொடங்கிய கொரோனா
பீஜிங்கில் கொரோனா வைரஸ் கொத்து கொத்தாக பரவத்தொடங்கிய நிலையில் அங்கு 90 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகிறது. சீன தலைநகர் பீஜிங்கில் கொரோனா எட்டிப் பார்க்கவில்லை. அது பாதுகாக்கப்பட்ட நகரமாகவே, அரணாக அனைவருக்கும் தோன்றியது. சீனாவின் உகான் நகரத்தில் தோன்றி, தலைநகர் பீஜிங் வரை அந்த நாட்டையே உலுக்கிய கொரோனா 5 மாத கால பேராட்டத்துக்கு பிறகு ஏப்ரல் மாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அது சீன மக்களுக்கு நிம்மதியைத்தந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு ...
Read More »யுத்தம் நிறைவடைந்ததுக்கு பின்பு எந்தனை விதவைகள்?
வடகிழக்கில் யுத்தம் நிறைவடைந்ததுக்கு பின்பு எந்தனை விதவைகள் இருக்கின்றார்கள் என மக்கள் ஆணை பெற்றவர்கள்தான் சரியான தரவுகளை கொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ் தெரிவித்துள்ளார். விதவைகள் 87 ஆயிரம் பேர் இருக்கின்றார்கள் என இன்னும் 25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா என உமாச்சந்திரா பிரகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்றையதினம்(16) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட உமாச்சந்திரா பிரகாசிடம் வடகிழக்கில் இருக்கும் விதவைகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ...
Read More »காக்கா எச்சமா, காக்கைக் கூடா?
பருத்தித்துறைக் கடலில், சிறப்புப் பூஜைகள் நடத்தி, வெளி மாவட்ட மீனவர்கள், கடலட்டை பிடிக்க ஆரம்பித்து உள்ளனர். திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நீலியம்மன் ஆலயம் அழிக்கப்பட்டு, அவ்விடத்தில் விகாரை அமைக்கப்பட்டு, அதற்குப் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு உள்ளதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இவை, கடந்த வாரப் பத்திரிகைச் செய்திகள் ஆகும். தமிழர் ஒருவர், கொழும்பில் மத்திய அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக இருந்த போதிலும், வெளி மாவட்ட மீனவர்கள், தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிக் கடற்றொழில் செய்வதைத் தடுக்க முடியவில்லை. அடுத்து, அந்நியர் ...
Read More »ஆஸ்திரேலியாவை நோக்கி படகில் பயணித்த வியாட்நாமியர்கள் !
ஆஸ்திரேலியாவை நோக்கி படகில் சென்ற 11 வியாட்நாமியர்கள் மற்றும் அவர்களை அழைத்துச் சென்ற 2 இந்தோனேசியர்கள் கிழக்கு திமோரில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போது உலகெங்கும் கொரோனா கிருமித்தொற்று குறித்த அச்சம் நிலவுவதால், இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கிழக்கு திமோரின் ஜாகோ தீவு அருகே தடுத்து நிறுத்தப்பட்ட 11 வியாட்நாமியர்களில் 8 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தீவு அருகே படகு பழுதானதால் உதவியை நாடி அத்தீவில் படகை நிறுத்திய நிலையில், திமோர் நாட்டு அதிகாரிகளால் படகில் இருந்தவர்கள் கைது ...
Read More »குடும்ப அரசியல் எனும் தொற்று நோய்
ஔவையின் அறிவுறைகள் எக்காலத்துக்கும் பொருந்தும். அவரது நல்வழி நூலின் 22 ஆவது வெண்பா பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டுங்(கு) ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம் தெற்காசியா ஒரு வித்தியாசமான பிராந்தியம். எளிமையாக இப்பகுதியை இந்த நாடுகள் அனைத்திலும் அறியப்படும் கிச்சிடிக்கு ஒப்பிடலாம். உப்புமா அல்லது கிச்சிடி என்பதற்கு இதுதான் இலக்கணம் என்று எதுவும் இல்லை. எதுவும் எதனுடனும் எப்படியும் தேவைக்கேற்ப சேர்ந்து கொள்ளும். அதன் பொருள் கலவை என்பது. எனினும் கிச்சிடிக்கும் குடும்ப அரசியல் ...
Read More »தீயணைப்பு வாகனம் விபத்து: ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்கு விரைந்த தீயணைப்பு வாகனம் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தீயணைப்பு வாகனம் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி தோட்டத்திற்குள் பாய்ந்துள்ளது. சம்பவத்தில் தீயணைப்பு பணியில் ஈடுபடுபவர்கள் மூவர் படுகாயமடைந்தனர். அவர்கள் மூவரும் அம்புலன்ஸ் வண்டியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். ...
Read More »நான் சந்தித்ததில் இவர்தான் மிகவும் திறமையான பந்து வீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்
நான் சந்தித்ததில் பாகிஸ்தானைச் சேர்ந்த இவர்தான் மிகவும் திறமையான பந்து வீச்சாளர் என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். எந்த ஆடுகளம், எந்த நாடு என்றெல்லாம் இவருக்கு கவலை இல்லை. உலகின் எந்த திசையில் களம் இறக்கப்பட்டாலும் வேகப்பந்து வீச்சை மிகவும் சுலபமாக எதிர்கொள்ளக் கூடியவர். தொழில்முறை கிரிக்கெட்டிற்கான ஷாட்டுகளை இவர் ஆடவில்லை என்றாலும், பந்தை துல்லியமாக கணித்து விளையாடுவதில் கில்லாடி. இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் இவரை எளிதில் சாய்த்து விட இயலாது. இந்நிலையில் ...
Read More »