2021 மார்ச் மாதம் 25ஆம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்திய தனது முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டில் மக்களாட்சி நாடுகள் தனியொருவராட்சி நாடுகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என அறைகூவல் விடுத்தார். தனியொருவராட்சியின் கீழ் உள்ள நாடுகள் உலகின் முன்னணி நாடுகளாக, செல்வந்தமிக்க நாடுகளாக, வலிமை மிக்க நாடுகளாக உருவெடுக்க முயல்கின்றன. நான் பதவியில் இருக்கும்வரை அதை நடக்க அனுமதிக்கமாட்டேன் என்று சூழுரைத்தார் பைடன். சீனாவின் பொருளாதார மேம்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சி, படைவலிமைப் பெருக்கம் ஆகியவை அடக்கப்பட வேண்டும்என அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் ...
Read More »செய்திமுரசு
வங்காளதேசத்தில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பு
வங்காளதேசத்தில் இன்று 6,830 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், முன்னெச்சரிக்கை காரணமாக ஒரு வாரம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததால், கடந்த ஆண்டு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு திரும்பப் பெற்றது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் அதேநிலையில், வங்காளதேசத்திலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 6,830 பேர் கொரோனா ...
Read More »திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினம்
இராயப்பு யோசப் ஆண்டகை தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், குறித்த நாளை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் இணைந்து வெளியிட்டள்ள அறிக்கையில்,”மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆயரின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு ...
Read More »ஐ.நாவில் போர்க்கொடி தூக்கத் தயாராகும் ரணில்
அரசாங்கத்தின் வன அழிப்பிற்கு எதிராக கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் சிங்கராஜ வனம் உள்ளிட்ட தேசிய வன வளத்தை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ் – சிங்கள புத்தாண்டில் பச்சை நிற ஆடையணிய வேண்டும் என கேட்டுக்கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.மேலும் அவர் குறிப்பிடும் போது; உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள அழிவு குறித்து செவ்வாய்க்கிழமை கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் முறைப்பாடளிப்பதோடு நீதிமன்ற ஊடக நடவடிக்கை ...
Read More »புலமைப்பரிசில் ஆசிரியர் அன்பழகன் காலமானார்!
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான தனியார் கல்வி நிலையங்களை யாழ்ப்பாணத்தில் நடத்திவந்த யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபல ஆசிரியரான அன்பொளி கல்வியகத்தின் நிர்வாகி வே.அன்பழகன் இன்று காலை கொழும்பில் காலமானார். உடல் நிலைப் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த அவர் கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அன்பொளி கல்வியகத்தில் கல்விபயில்வதற்காக ஆண்டு தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அன்பொளி புலமைப்பரிசில் மாதிரி மற்றும் வழிகாட்டிகள் நாடளாவிய ரீதியில் ...
Read More »பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நிதியத்தினால் (CEWET) புலமைப் பரிசில்கள் வழங்கப்படுவதற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தப் புலமைப் பரிசில்கள் க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில் அல்லது தொழில்நுட்பக் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கானவையாகும் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரத்தில் (குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன்) சித்தியடைந்த அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்தவர்கள் இந்தப் புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர்கள். பூர்த்தி ...
Read More »யாழ். திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார்
யாழ். திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார் இறைபதமடைந்தார். அவருக்கு வயது 82 இளவாலையைச் சேர்ந்த அவர் ஆரம்பக் கல்வியை இளவாலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் அதன் பின்னர் சென் ஹென்றிஸ் கல்லூரியிலும் கற்றார். இவர் தன் வாழ்வைக் குருத்துவப் பணியில் அர்ப்பணிக்கும் பொருட்டு 1952 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மருதனார் குருமடத்தில் சேர்ந்து சென் பற்றிக்ஸ் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1956 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி.பரீட்சையில் சித்தியடைந்து, குருத்துவ மேல் நிலைப்படிப்பைக் கண்டி அம்பிட்டிய குருமடத்தில் தொடர்ந்தார். இவர் ...
Read More »திருமறைக் கலாமன்ற இயக்குநர் மரிய சேவியர் அடிகளார் காலமானார்
திருமறைக் கலாமன்ற இயக்குநர் நீ.மரிய சேவியர் அடிகளார் இன்று(1) காலமானார். இவர் யாழ்ப்பாணத்தில் திருமறைக் கலா மன்றம் என்ற ஒரு கலை அமைப்பை 1965 ஆம் ஆண்டளவில் ஆரபித்தார். 1965 ஆம் ஆண்டு உரும்பிராயில் மரிய சேவியர் அடிகள் பணி செய்த காலத்தில் ‘திருமறைக்கலாமன்றம்’ எனும் பெயருடன் இவ் அரங்க இயக்கம் செயற்படத் தொடங்கியது. உரும்பிராய், சுன்னாகம், மல்லாகம் என ஒன்றிணைந்த கலைஞர்களைக் கொண்டு மரியசேவியர் அடிகள் திருப்பாடல்களின் நாடகங்களை மட்டுமன்றி பல்வேறு விவலிய நாடகங்கள், இலங்கை வானொலிக்கான நாடகங்கள், கூத்துக்கள் எனப் பலவற்றையும் ...
Read More »அவுஸ்திரேலியாவில் இலங்கை சிறுவனுக்கு நேர்ந்த துயரம்- மன்னிப்புக் கோரிய பள்ளி நிர்வாகம்
தெற்கு அவுஸ்திரேலியாவின் Coober Pedy பகுதியில் பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஓட்டுநர், இலங்கைப் பின்னணி கொண்ட 5 வயதுச்சிறுவனை உரிய இடத்தில் இறக்கிவிடத் தவறியதுடன் பணிமுடிந்து பேருந்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு சென்றதையடுத்து குறித்த சிறுவன் தனியாக நீண்டதூரம் நடந்துசென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டுச் சென்றபின்னர், நீண்ட நேரம் பேருந்தினுள்ளேயே காத்திருந்த சிறுவன், பேருந்தைவிட்டு இறங்கி தனியாக Stuart நெடுஞ்சாலையை நோக்கி நடக்கத்தொடங்கியிருக்கிறார். புத்தகப்பையையும் சுமந்தபடி சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் நடந்துசென்ற இச்சிறுவன் அவ்வீதியால் சென்ற பெண்மணி ...
Read More »மூன்றாவது கொவிட் அலை ஏற்படலாம் – அசேல குணவர்தன
மூன்றாவது கொவிட் அலை ஏற்பட கூடிய ஆபத்து காணப்பட்டுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குண வர்தன தெரிவித்துள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்றைய தினம் வெளியிடப் படும் என வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் நடவடிக்கைகள் மூலம் மூன்றாவது கொவிட் அலை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
Read More »