2019ஆம் ஆண்டு தமிழீழ மாவீரர் நாள் மெல்பேணில் உணர்வுபூர்வமாக நினைவுகொள்ளப்பட்டது. ஒவ்வோராண்டும் வழமையாக நிகழ்வு நடைபெறும் ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் 27/11/2019 புதன்கிழமை மாலை 6 மணிக்கு நிகழ்வு தொடங்கியது. மணியொலியுடன் தொடங்கிய நிகழ்வை பவித்திரன் சிவநாதன். சிரேக்சனா நந்தகரன் ஆகிய இருவரும் தொகுத்து வழங்கினர். பொதுச்சுடரினை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு ரகுலேஸ்வரன் கிருஸ்ணபிள்ளை அவர்கள் ஏற்றியதை தொடர்ந்து, தேசியக் கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. அவுஸ்திரேலியத் தேசியக்கொடியையும் தமிழீழத் தேசியக் கொடியையும் முறையே செயற்பாட்டாளர்களான ஹரிதாஸ் ஞானகுணாளன், ரமேஸ் பாலகிருஷ்ணர் ஆகியோர் ஏற்றினர். தொடர்ந்து ...
Read More »செய்திமுரசு
மாவீரர் நாள் 2019 – அடேலையிட்
அவுஸ்திரேலியாவின் அடேலையிட் பெருநகரத்திலும், தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதன்கிழமை 27-11-2019 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டு மாவீரர் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்வணக்கம் செய்தனர். தேசியக்கொடியேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மாவீரர் நாள் நினைவுரைகள் கவிதை மற்றும் மாவீரர் நினைவு சுமந்த நடன நிகழ்வு என்பனவும் நடைபெற்றுள்ளன. வழமையை விட இம்முறை அதிகளவான மக்கள் கலந்துகொண்டமையும் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Read More »மாவீரர் நாள் 2019 – கான்பரா
அவுஸ்திரேலியாவின் கான்பராவிலும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதன்கிழமை 27-11-2019 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டு மாவீரர் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்வணக்கம் செய்தனர். இந்நிகழ்வில் மாவீரர் நாள் நினைவுரைகள் மற்றும் தாயகமக்களுக்கான உதவித்திட்டம் தொடர்பிலான தமிழ் மூத்தோர்களின் நாடகம் என்பனவும் நடைபெற்றுள்ளன.
Read More »மாவீரர் நாள் 2019 – பேர்த்
அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநிலத்திலும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதன்கிழமை 27-11-2019 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டு மாவீரர் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்வணக்கம் செய்தனர். தேசியக்கொடியேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மாவீரர் நாள் நினைவுரைகள் மற்றும் மாவீரர் நினைவு சுமந்த நடன நிகழ்வு என்பனவும் நடைபெற்றுள்ளன. வழமையை விட இம்முறை அதிகளவான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Read More »மாவீரர் நாள் 2019 – குயின்ஸ்லாந்து
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு, குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Darra என்னும் இடத்தில் 27-11-2019 புதன்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது. திரு அஜந்தன் நிகழ்வை தொகுத்து வழங்க, பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. பொதுச்சுடரினை மருத்துவர் ராமலிங்கம் மாவீரர் குடும்பத்தை சேர்ந்த திருமதி சசி, மூத்த சமூக செயற்பாட்டாளர் திருமதி கலா சுப்ரமணியம் ஆகியோர் ஏற்றினர். அவுஸ்ரேலியக் தேசியக்கொடியினை பொறியியலாளர் குணறாஜா அவர்கள் ஏற்றிவைக்க, பூர்வீக மக்கள் கொடியினை திரு பிறேமானந்தன் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசிய கொடியினை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் ...
Read More »ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள சர்வதேச டென்னிஸ் போட்டியில் சானியா பங்கேற்கவுள்ளார்!
குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்திய சானியா ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மீண்டும் பங்கேற்க இருப்பதாக சானியா நேற்று அறிவித்தார். இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவில் 6 பட்டங்களை வென்ற சாதனையாளர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானியா மிர்சா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்திய அதே வேளையில், உடல்தகுதியை மேம்படுத்துவதற்கான பயிற்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ...
Read More »ரோயல் பார்க் கொலை குற்றவாளி ; வெளிநாடு செல்ல பயணத் தடை!
ரோயல் பார்க் கொலை ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமைக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கடந்த 13 ஆம் திகதி நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந் நிலையில் குறித்த மனுவானது இன்றைய தினம் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் ...
Read More »ஊடகவியலாளர் துஷாரா விசாரணையின் பின் விடுவிப்பு!
வொய்ஸ் ரியூப் எனப்படும் யூ ரியூப் அலைவரிசையின், செம்மைப்படுத்துனரான துஷாரா விதானகே சி.ஐ.டி. விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை 8.30 மணிக்கு சி.ஐ.டி.யின் கணனிக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவில் ஆஜரான அவரிடம் அங்கு பல மணி நேரம் சிறப்பு விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னரே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். துஷாரா விதானகேவுக்கு எதிராக சிங்கள அமைப்பொன்று செய்த முறைப்பாட்டை மையப்படுத்தி இந்த விசாரணைகள் இடம்பெற்றதாகவும் அவர் அவரது த லீடர் வலைத்தளத்தில் பதிவிட்ட விடயம் ஒன்றினை ...
Read More »முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட குண்டு ஆற்றிலிருந்து மீட்பு!
அமெரிக்காவின் கிராண்ட் ஆற்றில் முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஜேர்மன் நாட்டு கையெறிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேக்னட் பிஷ்சிங் எனப்படும் ஆழமான நீர்நிலைகளில் புதையுண்டு கிடக்கும் பழங்கால பொருட்களை சேகரிக்கும் நபரொருவரின் தேடலின் விளைவாக இந்த ஜேர்மன் நாட்டுத் தயாரிப்பான கையெறிகுண்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் கிராண்ட் எனப்படும் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே பிரதேசத்தை சேர்ந்த மேக்னட் பிஷ்சிங்யில் ஈடுபடும் ஜோசப் அலெக்சாண்டர், என்பவரால் குறித்த கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் நேற்றுமுன்தினம் குறித்த ஆற்றில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது நீருக்குள் தொங்கவிடப்பட்டிருந்த ...
Read More »ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்கு சீனா இணங்குமா?
கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் சர்ச்சைக்குரிய அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகைக்காலம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய சாத்தியம் குறித்து சீனாவிற்கு ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற முறையில் தெரியப்படுத்தப்பட்டிருக்கக்கூடும். அல்லாவிட்டால் சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் குத்தகைக் காலத்தை மீள் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தும் திட்டம் குறித்து பகிரங்கமாக ஜனாதிபதி கோத்தபாய கூறியிருக்க மாட்டார் என்று அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரமொன்று தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு விவகார சஞ்சிகையான பாரத் சக்தியின் பிரதம ஆசிரியர் நிதின் கோகலேவிற்கு அளித்த நேர்காணலில் ஜனாதிபதி ராஜபக்ஷ 99 வருடக் குத்தகையை இலங்கை மக்கள் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal