அவுஸ்திரேலியாவின் அடேலையிட் பெருநகரத்திலும், தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
புதன்கிழமை 27-11-2019 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டு மாவீரர் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்வணக்கம் செய்தனர்.
தேசியக்கொடியேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மாவீரர் நாள் நினைவுரைகள் கவிதை மற்றும் மாவீரர் நினைவு சுமந்த நடன நிகழ்வு என்பனவும் நடைபெற்றுள்ளன.
வழமையை விட இம்முறை அதிகளவான மக்கள் கலந்துகொண்டமையும் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal













