NSW மாநிலத்தில் வாகனம் ஓட்டுபவர்கள், விரைவில் டிஜிட்டல் ஓட்டுனர் உரிமங்களை (drivers license) பெற இருக்கிறார்கள் என்று NSW அரசு அறிவித்துள்ளது. இது குறித்த சட்ட முன்வடிவு அடுத்த இரண்டு வாரங்களில் NSW நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். கடந்த நவம்பர் மாதத்திலிருந்து டப்போ (Dubbo) நகரில் டிஜிட்டல் லைசன்ஸ் பரீட்சித்துப் பார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இனி மாநிலம் முழுவதும் அதை அறிமுகம் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஒருவரின் அடையாள அட்டையாகவும், ஆதார பத்திரமாகவும், Pubs மற்றும் Clubகளில் நுழைவதற்கும், காவல்துறையின் சாலைச் சோதனைகளுக்கும் டிஜிட்டல் லைசன்ஸ் ...
Read More »செய்திமுரசு
அமெரிக்க ரகசிய அறிக்கையில் சிறிலங்கா தொடர்பில் வெளியான தகவல் !
ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட வேலைத்திட்டங்களின் ஊடாக சிறிலங்காவால் சீனா கடன் வலையில் வீழ்த்தி இருப்பதாக, அமெரிக்காவின் இரகசிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவார்ட் ஆய்வாளர்கள் குழு ஒன்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்காக மேற்கொண்ட இரகசிய ஆய்வு அறிக்கை ஒன்று, அவுஸ்திரேலியாவின் பினன்ஸ் ரிவீவ் என்ற ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், சிறிலங்காவில் சீனாவின் கடன்வலையில் சிக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறிலங்காவில் விமான நிலையம் மற்றும் துறைமுகம் போன்ற உட்கட்டுமான அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக முன்னைய அரசாங்கத்தினால் 8 பில்லியன் டொலர்கள் சீனாவிடம் இருந்து கடன்பெறப்பட்டது. இந்தகடன் தொகையை ...
Read More »மீண்டும் பரவும் எபோலா நோய்!
எபோலா நோய் மீண்டும் பரவி இருப்பது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளையும் உஷாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 2013-ம் ஆண்டு ‘எபோலா’ நோய் பரவியது. முதலில் கினியா நாட்டில் பரவிய நோய் பின்னர் சிரியாலோன், லைபிரியா, காங்கோ குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் பரவியது. 2016-ம் ஆண்டு வரை இந்த நோய் தொடர்ந்து பரவி வந்தது. இதில் 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 11 ஆயிரத்து 310 பேர் உயிரிழந்தனர். ...
Read More »வடக்கு கிழக்கில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும்!
வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்து தெரிவித்த காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டார். வடக்கில் ஆவா குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வன்முறைகள் தொடர்பில், அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவர்கள் அனைவரும் விசேட சுற்றிவளைப்பின் மூலம் கைது செய்யப்பட்டவர்கள் எனவும், தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
Read More »60 ஆண்டுகளில் 24 லட்சம் குழந்தைகளை காப்பாற்றிய உத்தமர்!
60 ஆண்டுகளில் 24 லட்சம் குழந்தைகளை காப்பாற்றியவர் அவுஸ்திரேலிய செஞ்சிலுவை ரத்த தான சேவை அமைப்பில் இருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு தங்கத்தினால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. ஜேம்ஸ் ஹாரிசன் என்பவருக்கு 14 வயதில் நெஞ்சுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, அவருடைய ரத்தத்தில் நோயை எதிர்த்துப் போராடும் ஆண்டிபாடி அதிகம் இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர். இதன் மூலம் ஆண்டி D என்ற மருந்தை மேம்படுத்தி, பிரசவத்தின் போது ரத்தம் சார்ந்த பிரச்சனைகளில் சிக்கி உயிருக்கு போராடும் குழந்தைகளை ...
Read More »பாகிஸ்தானில் முதல் பார்வையற்ற நீதிபதியாக பதவியேற்கும் யூசப் சலீம்!
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் யூசப் சலீம் அந்நாட்டின் முதல் பார்வையற்ற நீதிபதியாக பதவியேற்கும் பெருமையை பெற்றுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் அரசு உதவி இயக்குனராக பணியாற்றிவரும் யூசப் சலீம் பிறவியிலேயே பார்வை குறைபாடு உடையவர். ஆனாலும், அந்நாட்டின் சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். தேர்வெழுதிய 300 பேரில் யூசப் சலீம் 21வது இடத்தை பிடித்தார். ஆனால் அவரது பார்வைக்குறைப்பாட்டை காரணம் காட்டி அவருக்கு மாவட்ட சிவில் நீதிபதி பதவி மறுக்கப்பட்டது. இதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் ...
Read More »கிழக்கு தொண்டர் ஆசிரியர் தெரிவில் தமிழர்களுக்கு அநீதி!
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் தெரிவில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது இதனை இந்து சம்மேளனம் வன்மையாக கண்டிப்பதுடன் இந்த தெரிவுகளை இரத்துச்செய்து விட்டு மீண்டும் நேர்முகப்பரீட்சை நடாத்தி பாதிக்கப்பட்ட தமிழ் தொண்டர் ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும். என இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா. அருண்காந்த் தெரிவித்தார். வடக்கு கிழக்கில் கடந்த முப்பது வருட யுத்த காலப்பகுதியில் பல சொல்லொனா துன்பங்களுக்கு மத்தியில் நாட்டைவிட்டு ஓடாமல் எமது இனத்தின் வேர்களான மாணவச் செல்வங்களுக்குப் பெரும் ...
Read More »வீடுகள் , குடிசன மதிப்பீட்டை இரு வருடத்திற்கு ஒருமுறை நடத்த தீர்மானம்!
இரு வருடத்திற்கு ஒருமுறை நாட்டில் வீடுகள் மற்றும் குடிசன மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிசன மதிப்பீடு புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமர சத்ரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் குடிசன மதிப்பீடு புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமர சத்ரசிங்க மேலும் தெரிவிக்கையில் பத்து வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் குடிசன மதிப்பீட்டுக்கு மேலதிகமாக இது மேற்கொள்ளப்படுகிறது. இதற்கமைய மே மற்றும் ஜூன் மாதங்களில் வீடு மற்றும் குடிசன மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும். திணைக்கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக பயிற்சி பெற்ற அதிகாரிகள் சிலர் இந்த இரண்டு ...
Read More »பெற்றோர்களை வரவழைக்க வேண்டுமாயின் ஆண்டு வருமானம் 45 ஆயிரத்து 185 டொலர் தேவை!
அவுஸ்திரேலியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து தங்களது பெற்றோர்களை வரவழைப்பதில் இருந்த சிக்கல் நிலைக்கு தீர்வு காண அரசு தீர்மானித்துள்ளது. நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவல்ல நடைமுறை ஏப்ரல் முதலாம் திகதி அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் அதை ரத்து செய்ய அரசு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இதுவரை காலமும் தங்களது பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு அழைக்க விரும்பும் கணவனும் மனைவியும் கூட்டாக, 45 ஆயிரத்து 185 டொலர்களை ஆண்டு வருமானமாக பெற வேண்டும். இந்த நடைமுறையை இந்த கூட்டுவருமான தொகையை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 475 டொலர்களாக அரசு அதிகரித்திருந்தது. மேலும் தனி ...
Read More »மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வெளிநாடு செல்ல தடை!
மலேசியா நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி வெளிநாடுகளுக்கு செல்ல புதிய அரசு தடை விதித்துள்ளது. மலேசியாவின் 14வது பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக நேற்று பதவியேற்றுள்ளார். முன்னதாக, மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ...
Read More »