பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள், ஏனைய இழப்புகள் தொடர்பான விவரங்களைத் திரட்டவுள்ளதாக, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது, தமிழ் மக்கள் எவருக்குமே, சிறுகாயங்கள் கூட ஏற்படாதவாறே, யுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக, யுத்தத்தை வழி நடர்த்தியவர்கள் கூறினார்கள். அதேவேளை, சுமார் 40,000 வரையிலான அப்பாவித் தமிழ்மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என, ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை கூறியது. ஆனாலும், இலட்சம் தாண்டிய தமிழர்களது உயிர்கள் காவு கொள்ளப்பட்டு உள்ளன ...
Read More »செய்திமுரசு
அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனையை எதிர்நோக்கும் கணேசமூர்த்தி தியாகராஜா!!
அவுஸ்திரேலியாவில் தனது நண்பர் ஒருவரை படுகொலை செய்த இலங்கைத்தமிழர் ஒருவர் சிறைத்தண்டனையை எதிர்நோக்கின்றார் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் அகதியாக தஞ்சமடைந்த கணேசமூர்த்தி தியாகராஜா என்பவரிற்கே சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அடிலெய்டில் உள்ள பென்பீல்ட் கார்டன் வீட்டில் தனது நண்பரான முகமட் மன்சூரை இவர் படுகொலை செய்தார் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இம்மாத இறுதியில் நீதிமன்றம் இவரிற்கான தண்டனையை அறிவிக்கவுள்ளது. மன்சூர் தனது நண்பராக விளங்கவேண்டிய ஒருவரால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார் என ...
Read More »இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற “டோனி மொரிசன்” காலமானார்!
இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க பெண்மணி டோனி மொரிசன் தனது 88 ஆவது வயதில் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக நியூயோர்க்கில் உள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் நேற்றிரவு காலமாகியுள்ளதாக அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1931 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி பிறந்த டோனி மொரிசன் 1993 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். அத்துடன் புனைகதை இலக்கியத்துக்காக 1988 ஆம் ...
Read More »கோத்தபாய கடவுச்சீட்டைப் பெற்றமை தொடர்பில் கிளம்பும் பல கேள்விகள்!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ அவரது இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து தவிர்க்கப்பட்ட கடவுச்சீட்டொன்றை கடந்த மே மாதம் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து எவ்வாறு பெற்றார் என்பது தொடர்பில் கேள்விகள் கிளப்பப்பட்டிருக்கின்றன. தான் இலங்கைச் சட்டத்தின் கீழ் இப்போது ஒரு இரட்டைப் பிரஜையல்ல என்பதற்கு இந்தக் கடவுச்சீட்டு சான்று என்று கடந்தவாரம் ராஜபக் ஷ செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ஆனால் இரட்டைக் குடியுரிமையுள்ள நபர் கள் வழமையாக இலங்கைக் குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கு விரும்பினால் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் முறைப்படியான விண்ணப்பத்தைச் செய்ய வேண்டும் ...
Read More »இணைந்து பணியாற்றுவதன் மூலமே நீர் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும்!
அனைத்து திணைக்களங்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே வடமாகாண நீர் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என்று வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.+ வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், குடிநீர் தேவை என்பது வடமாகாணத்திற்கு எவ்வளவு சவாலானதாக இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கிணங்க பல்வேறு வேலைதிட்டங்களை நாம் முன்னெடுத்து கொண்டிருக்கிறோம். எனவே அதற்கு அனைத்து திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தேவை இருக்கிறது. வடமாகாணத்தின் ...
Read More »ஊடகவியலாளர் நிபோஜனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை!
கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என் நிபோஜனிடம் கொழும்பில் இன்று(06) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை செய்துள்ளனர். விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தேடப்படும் ஒருவர் புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து தொலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டு ஊடகவியலாளர் நிபோஜனிடம் உரையாடியது தொடர்பிலேயே அவரிடம் மூன்று மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் பயன்படுத்தும் தொலைபேசி சிம் அட்டை அவருடைய தந்தையின் பெயரில் உள்ளமையால் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக இன்று(06) கொழும்பு ஒன்றில் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பாணை ...
Read More »நியூசிலாந்தில் கருக்கலைப்பு சட்டபூர்வமாகிறது!
நியூசிலாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நியூசிலாந்து நாட்டில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும் கர்ப்பம் தரித்ததால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடல் ரீதியிலோ அல்லது மன ரீதியிலோ ஆபத்து இருக்கும் பட்சத்தில் அவர் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். அதுவும் அந்த பெண்ணை 2 மருத்துவர்கள் பரிசோதித்து அவர்கள் அனுமதி வழங்கினால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் இந்த கடுமையான சட்டத்தை நீக்க வேண்டும் எனவும், கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றமாகாது என்பதை ...
Read More »மிக மூத்த இந்திய-ஆஸ்திரேலியர் 107 வயதில் காலமானார்!
சிட்னியில் வாழ்ந்துவந்த நாட்டின் மிக மூத்த இந்திய-ஆஸ்திரேலியரான Shankerlal Dalsukhram Trivedi அண்மையில் தனது 107வது வயதில் காலமானார். Shankerlal Dalsukhram Trivedi 28ம் திகதி டிசம்பர் மாதம் 1911ம் ஆண்டு இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள வஸ்னா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது மனைவி 1993ம் காலமானதைத்தொடர்ந்து இந்தியாவிலிருந்து நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்து அங்கு 8 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் 2001-இல் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு குடிபெயர்ந்து ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக்கொண்டார். சிட்னியில் வாழ ஆரம்பித்த காலம்முதல் குஜராத் பின்னணி கொண்ட இந்தியர்களின் நன்மதிப்பை சம்பாதித்துக்கொண்ட Shankerlal Dalsukhram ...
Read More »251 ஓட்டத்தினால் ஆஸி. அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஆஷஸ் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த முதலாம் திகதி பேர்மிங்கமில் ஆரம்பமான முதலாவது போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே அவுஸ்திரேலிய அணி 284 ஓட்டங்களையும், இங்கிலாந்து அணி 374 ஓட்டங்களையும் எடுத்திருந்தன. 90 ஓட்டம் என்ற ...
Read More »பூர்வகுடிகள் ஐந்துபேர் படகு மூழ்கி பரிதாபமாக பலி?
ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் வாழும் Torres Strait பகுதி கடலில் இரண்டு தீவுகளுக்கு இடையில் படகில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காணாமல்போயுள்ளனர். இவர்களது படகு மீட்கப்பட்டுள்ளபோதும் பயணம் செய்த எவரையும் நான்கு நாட்களாக கண்டுபிடிக்கமுடியவில்லை. கடல்வழியாகவும் வான் வழியாகவும் தங்களது தேடுதல் பணிகளை மேற்கொண்டு தோல்வியடைந்த மீட்புப்படையினர் குறிப்பிட்ட குடும்பத்தின் உறவினர்களிடம் தாங்கள் தேடுதல் பணியை நிறுத்துவதாகவும் காணாமல்போனவர்கள் உயிருடனிருப்பதற்கான சாத்தியமில்லை என்றும் அறிவித்திருக்கிறார்கள். Badu தீவிலிருந்து Dauan தீவுக்கு கடந்த 31 ஆம் திகதி படகில் புறப்பட்டு சென்றவர்களுக்கே இந்த ...
Read More »