செய்திமுரசு

அனுராதபுரம் சிறைச்சாலை விவகாரம் – அமைச்சரை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும்

அரசாங்கத்தின் அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளை துப்பாக்கிமுனையில் கொலை செய்யப்போவதாக மிரட்டிய சம்பவம் குறித்து வெளியாகியுள்ள தகவல்களை சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை இராஜாங்க அமைச்சரை விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இராஜாங்க அமைச்சரை அவரது நடவடிக்கைகளிற்காக பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியா பசுபிக்கிற்கான இயக்குநர் யாமினி மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் கைதிகள் நடத்தப்படுவது குறித்த எங்களது கரிசனைகள் குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை ...

Read More »

தமிழ் அரசியல்கைதிகளின் குடும்பத்தவர்கள்அச்சமடைந்துள்ளனர்!

அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற மிக மோசமான அச்சுறுத்தல் குறித்து தமிழ் அரசியல்கைதிகளின் குடும்பத்தவர்கள்அச்சமடைந்துள்ளனர் . அவர்கள் இப்போது என்ன மன நிலையில் உள்ளனரோ என கவலைவெளியிட்டுள்ளதுடன் அவர்களை பார்வையிட அனுமதியை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என அரசியல் கைதிகளின் உறவினர்கள் வேண்;டுகோள் விடுத்துள்ளனர். எனவே அவர்களின் கோரிக்கை தொடர்பில் அரசிடம் உத்தியோகபூர்வமான கோரிக்கையியினைமுன் வைப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இன்று (15.09.2021) காலை 11 மணிக்கு இடம்பெற்ற இணையவழியிலான ஊடக சந்திப்பின் போதே ...

Read More »

தமிழரசுக் கட்சியைக் காப்பாற்ற முடியுமா ?

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் நடந்த இரண்டு ஊடகச்சந்திப்புகள் நமக்கு எதை உணர்த்துகின்றனவென்றால் கூட்டமைப்புக்குள் மட்டுமில்ல தமிழரசுக் கட்சிக்குள்ளும் குழப்பம் என்பதைத்தான். இரண்டு கடிதங்களை அனுப்பப்போய் கூட்டமைப்பு குழம்பிப் போயிருக்கிறது என்பது சரியா? இல்லை.கூட்டமைப்பு ஏற்கனவே குழம்பித்தான் இருக்கிறது. ஆனால் இந்த கடிதங்களால் அந்தக் குழப்பம் வெளிப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.கூட்டமைப்பு ஏன் குழம்பி காணப்படுகிறது? ஏனென்றால் அது ஒரு வலிமையான கூட்டாக இல்லை. அது இதுவரையிலும் பதிவு செய்யப்படாத ஒரு கூட்டு.அதற்கென்று பலமான ஒரு யாப்பு இல்லை. அதற்கென்று ஒரு பொது வங்கிக் கணக்கு ...

Read More »

100,000 க்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களிடமிருந்து 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல!

100,000 க்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களிடமிருந்து 5% வரி விதிக்கப்பட வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் முன்மொழிவு அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பொது சேவைகளைத் தொடர்வதற்காக வரி வசூலிக்க அமைச்சர் குணவர்தன முன்வைத்த முன்மொழிவு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இது அமைச்சரின் தனிப்பட்ட கருத்து என்றும், இது தொடர்பில் அரசாங்கம் அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தமாட்டாது என்றும் ...

Read More »

எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் நாடு மீண்டும் திறக்கப்படும்

முடக்கலின் போது கொரோனா தொற்றாளர்கள் மற்றும் இறப்புகள் குறைவடைந்துள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் நாட்டை மீண்டும் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என இராஜாங்க அமைச்சரான சுதர்ஷனி பெர்னாடோபுள்ளே தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நோய் பரவுவதை கட்டுப்படுத்த நான்கு வார முடக்கல் போதுமானது அத்துடன் இந்த காலகட்டத்தில் கொவிட் இறப்பு மற்றும் நோய்த்தொற்றுகள் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த திங்கட்கிழமைக்குப் பின்னர் நாடு முடக்கப்படும் என தான் நினைக்கவில்லை. நாடு படிப்படியாக மீண்டும் திறக்கப்பட வேண்டும், கொவிட் ...

Read More »

தடுப்பூசி எதிர்ப்பாளரின் 4 வயது மகள் கரோனாவுக்கு பலி

அமெரிக்காவில் கரோனா தடுப்பூசியை எதிர்த்து வந்த இளம் பெண்ணின் 4 வயது குழந்தை கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே இரவில் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. கரோனா தடுப்பூசிதான் உயிரைக் காக்க ஒரே பேராயுதம் என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து பிரச்சாரம் செய்துவர ஒரு சிலரோ தடுப்பூசிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அப்படி தடுப்பூசி எதிர்ப்பாளராக இருந்த ஓர் இளம் பெண்ணின் 4 வயது குழந்தை கரோனா தொற்றால் இறந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் கல்வேஸ்டன் கவுன்டியைச் சேர்ந்தவர் காரா ஹார்வுட். ...

Read More »

ஆஸ்திரேலியா: Australian Capital Territory -யில் மூன்றாவது தடவை முடக்க நிலை நீட்டிப்பு

ஆஸ்திரேலியாவின் New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,127 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் இருவர் இறந்துள்ளார்கள். Covid-19 கட்டுப்பாடுகள் காரணமாக அதிகம் பாதிப்படைந்துள்ள கலாச்சாரம் மற்றும் மொழி ரீதியாக வேறுபட்ட குழுக்கள், சமூகங்கள் மற்றும் தொழிலாளர்கள் என ஆதரவு கொடுப்பனவுகள் பெற தகுதியானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Australian Capital Territory-யில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 22 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ACTயில் முடக்க நிலை மேலும் நான்கு வாரங்கள் நீட்டிக்கப் பட்டுள்ளது. ஒரே ...

Read More »

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக சுரேந்திரகுமாரன் நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும், சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ். ரவிராஜின் பதவிக் காலம் நிறைவு பெற்றதையடுத்தே புதிய பீடாதியாக வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கொவிட் -19 தடுப்புச் செயலணியின் இணைப்பாளராகப் பதவி வகிக்கும் வைத்தியக் கலாநிதி இ. சுரேந்திர குமாரன், மருத்துவ பீட சமுதாய மருத்துவத் துறையின் சிரேஷ்ட விரிவுரை யாளர் ஆவார். இவர் சமுதாய மருத்துவத் துறையின் தலைவராக 2012 ...

Read More »

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து கவலை வெளியிட்டுள்ள மிச்செலே பச்லெட் இந்தச் சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More »

மாணவர்கள், கல்விமான்கள், மதத்தலைவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர், அச்சுறுத்தப்படுகின்றனர், துன்புறுத்தப்படுகின்றனர்

கண்காணிப்பு அச்சுறுத்தல் நீதித்துறை துன்புறுத்தல் மனித உரிமை ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் காணாமல் போனவர்கள் துன்புறுத்தப்படுவது ஆகியன தொடர்ந்தும் நீடிக்கின்றன. இந்த நடவடிக்கைகள் மாணவர்கள், கல்விமான்கள், மதத்தலைவர்களை நோக்கி விஸ்தரிக்கப்பட்டுள்ளன என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Read More »