யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவ பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும், சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ். ரவிராஜின் பதவிக் காலம் நிறைவு பெற்றதையடுத்தே புதிய பீடாதியாக வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கொவிட் -19 தடுப்புச் செயலணியின் இணைப்பாளராகப் பதவி வகிக்கும் வைத்தியக் கலாநிதி இ. சுரேந்திர குமாரன், மருத்துவ பீட சமுதாய மருத்துவத் துறையின் சிரேஷ்ட விரிவுரை யாளர் ஆவார்.
இவர் சமுதாய மருத்துவத் துறையின் தலைவராக 2012 முதல் 2019 வரை பதவி வகித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal
