எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு யாரை முன்மொழிவது என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினுள் தொடர்ந்தும் இழுபறியான நிலைமை நீடிக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ அணியினரிடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. முன்னதாக கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு முன்மொழிந்து கடிதம் அனுப்பியுள்ள நிலையில் 45 உறுப்பினர்கள் கையொப்பத்துடன் சஜித் பிரேமதாஸவின் பெயரை அப்பதவிக்கு முன்மொழிந்து கடிதமொன்றை அனுப்பியிருந்தனர். பாராளுமன்ற சம்பிரதாயங்களின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் அதன் ...
Read More »செய்திமுரசு
அவுஸ்திரேலியாவில் அச்சமூட்டும் சம்பவம்!
சிட்னியின் உணவுவிடுதியொன்றில் முஸ்லீம் கர்ப்பிணிப்பெண்ணை இனரீதியில் நபர்ஒருவர் மோசமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 38 வார கர்ப்பிணியான 31 ரசா எலஸ்மெர் என்ற முஸ்லீம பெண் பரமெட்டா கபேயில் தனது நண்பிகளுடன் காணப்பட்டவேளை 43 வயது நபர் ஒருவர்அவரை தாக்கினார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ருசாஎலெஸ்மருடனும் அவரது நண்பிகளுடனும் உரையாடிய பின்னர் அந்த நபர் தாக்குதலில் ஈடுபடுவதை சிசிரிவி காட்சிகள் காண்பித்துள்ளன. அந்த நபர் எலஸ்மெரின் முகத்தில் ஓங்கிகுத்துவதையும் அவர் நிலை தடுமாறி கீழே விழுவதையும் அதன் பின்னர்அந்த நபர் காலால் ...
Read More »பிளவடைந்துள்ள அரசியலை மீள ஐக்கியப்படுத்துவதில் உள்ள சவால்கள்!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனாதிபதியை தெரிந்தெடுப்பதில் தமக்கும் ஒரு பங்கு இருப்பதன் காரணமாக, ஜனாதிபதிக்கு சிறுபான்மையினத்தவர்களது நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில் ஆர்வம் இருக்கும் என்ற நம்பிக்கையே சிறுபான்மையினத்தினர் இம்முறை தேர்தலில் பெரிதும் அக்கறையும் ஆதரவும் காட்டுவதற்கான காரணமாக இருந்துள்ளது. ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் தேர்தல் பிரச்சாரமும் தேர்தல் முடிவுகளும் பெரும்பான்மையின மக்களையே ஒன்றிணைத்ததாக அமைந்துள்ளமை சிறுபான்மையினத்தவர்களை அச்சுறுத்தக் கூடியதாகியுள்ளது. மேலும் பொதுவாகவே எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறப் போவதில்லை என்ற அனுமானம் ...
Read More »நவாஸ் ஷெரீப் உடல்நிலையில் இம்ரான்கான் சந்தேகம்!
லண்டனுக்கு சிகிச்சைக்காக சென்ற நவாஸ் ஷெரீப் உடல்நிலையில் பிரதமர் இம்ரான்கான் சந்தேகம் எழுப்பி உள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 70). இவர் ஊழல் வழக்கில் 7 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகின. உடல்நிலையைக் காரணம் காட்டி அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. வீட்டில் இருந்து அவர் சிகிச்சை பெற்ற நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால், அவர் லண்டனில் சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் ...
Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 16 வயதில் அறிமுகமான நசீம் ஷா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 16 வயதில் அறிமுகமான நசீம் ஷா, தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இதில் பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா அறிமுகம் ஆனார். அவருக்கு 16 வயது 279 நாட்களே ஆனது. இதனால் மிக இளம் வயதில் சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆன முகமது கைப் ...
Read More »டெங்கு காய்ச்சலை குணப்படுத்த கொசு மூலம் நூதன முயற்சி!
டெங்கு காய்ச்சலை கொசுக்கள் மூலம் குணப்படுத்தும் புதிய முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலம் பரவுகிறது. கொசுக்கள் கடிப்பதால் மனிதர்கள் உடலில் பரவும் வைரஸ்கள் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் டெங்கு காய்ச்சலை குணப்படுத்த இதுவரை உரிய மருந்துகள் கண்டு பிடிக்கபடவில்லை. எனவே அதற்கான பல்வேறு முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலை அதை உருவாக்கும் கொசுக்கள் மூலமே குணப்படுத்தும் புதிய முயற்சியை மேற்கொண்டனர். அதாவது ஆய்வகத்தில் வளர்க்கும் கொசுக்களின் உடலில் மனிதர்களின் உடல் நலனுக்கு ...
Read More »கோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி!
நந்தசேன கோத்தாபய ராஜபக்ச முழுமையான வெள்ளை ஆடையில் நவம்பர் 18 ம் திகதி அனுராபுரத்தில் உள்ள ருவன்வெலிசயவில் உள்ள பௌத்த தூபியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டவேளை வடக்குகிழக்கில் அச்சம் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்ற இடம்போன்று அந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்ட சிங்களவர்கள் மாத்திரம் செய்தியும் முக்கியமானது என அதனை தொலைக்காட்சியில் பார்வையிட்ட தமிழர்கள் தெரிவித்தனர். செயற்பாட்டாளர்கள் மிகவும் அமைதியாக உள்ளனர்,அவர்கள் கட்டுரை எழுதுவதையும் அறிக்கைகள் விடுவதையும் நிறுத்திவிட்டனர்,அச்சம் வெளிப்படையாக தெரிகின்றது என யாழ்ப்பாணத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். நல்லாட்சிக்காக பிரச்சாரம் செய்த காமினிவியாங்கொடவும் சந்திரகுப்ததேனுவரவும் தேர்தல் ...
Read More »சிஐடியின் இயக்குநர் இடமாற்றம்! – அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!
முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து விசாரணைளை மேற்கொண்டுவந்த சிஐடியின் இயக்குநர் ஸானி அபயசேகர புதிய அரசாங்கத்தின் கீழ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்பெரேரா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உடனடியாக தலையிட்டு இந்த இடமாற்றத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை ஜனாதிபதியின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மிகச்சிறப்பாக செயற்பட்டபோதிலும் சிஐடியின் ...
Read More »மைத்திரியை சபாநாயகராக்க முயற்சி!
சபாநாயகராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரால் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப் படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவந்திருந்தன. அந்த பேச்சுவார்த்தைகளின்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராகவும் மஹிந்த ராஜபக்ஷ்வை பிரதமர் வேட்பாளராகவும் நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஆரம்பமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்ப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் முற்றாக ...
Read More »ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவிப்பு!
பிரிஸ்பேன் டெஸ்டில் டேவிட் வார்னர் 151 ரன்களும், ஜோ பேர்ன்ஸ் 97 ரன்களும் விளாச ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று பிரிஸ்பேனில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் தொடக்க ஜோடி பிரிந்ததும் விக்கெட்டுகள் சரிந்தது. அந்த அணி 86.2 ஓவரில் 240 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆசாத் ஷபிக் 76 ரன் எடுத்தார். கேப்டன் அசார் ...
Read More »