டெங்கு காய்ச்சலை கொசுக்கள் மூலம் குணப்படுத்தும் புதிய முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலம் பரவுகிறது. கொசுக்கள் கடிப்பதால் மனிதர்கள் உடலில் பரவும் வைரஸ்கள் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் டெங்கு காய்ச்சலை குணப்படுத்த இதுவரை உரிய மருந்துகள் கண்டு பிடிக்கபடவில்லை.
எனவே அதற்கான பல்வேறு முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலை அதை உருவாக்கும் கொசுக்கள் மூலமே குணப்படுத்தும் புதிய முயற்சியை மேற்கொண்டனர்.
அதாவது ஆய்வகத்தில் வளர்க்கும் கொசுக்களின் உடலில் மனிதர்களின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்காத வுல்பாசியா என்ற பாக்டீரியாக்களை செலுத்தி வளர்த்தனர். அவற்றை டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் வாழும் பகுதியில் உலவ விட்டனர். அங்கு டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் கடிக்கும் மனிதர்களை ஆய்வகத்தில் வளர்க்க்பபட்ட கொசுக்களும் கடித்தன. அதன் மூலம் டெங்கு காய்ச்சல் தாக்கியவர்களின் உடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் புகுந்து காய்ச்சலை குணப்படுத்தியது.
இத்தகைய ஆய்வு 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டு ஆஸ்திரேலியாவில் வடக்கு குயின்ஸ்லேண்ட் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது அங்கு டெங்கு காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்து விட்டது.
இது போன்று இந்தோனேசியா, வியட்நாம், பிரேசில் நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றி பெற்று இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இத்தகைய ஆய்வு நடைபெறுவதாகவும் கூறியுள்ளார்.