ஊடகவியலாளர் கீத்நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வு பிரிவின் உறுப்பினர் ஒருவரையே வியாழக்கிழமை கைது செய்ததாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் காவல் துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார். குறித்த புலனாய்வு உறுப்பினர் விசாரணைக்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். 2008 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 3 ஆம் திகதி கிருலப்பனை பகுதியில் ஊடகவியலாளர் நாமல் பெரேரா தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் குறித்த இராணுவ புலனாய்வு ...
Read More »செய்திமுரசு
ஆஷஸ் 3-வது டெஸ்ட்: ஆர்சரின் அசுர பந்து வீச்சில் 179 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா
ஹெட்டிங்லேயில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 179 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து -ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று லீட்ஸ் ஹெட்லிங்லேயில் தொடங்கியது. மழைக் காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதமாக தொடங்கப்பட்டது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஹாரிஸ், அடுத்து வந்த கவாஜா ஆகியோர் தலா 8 ரன்னில் அவுட் ஆனார்கள். அதன்பின் டேவிட் ...
Read More »டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டம்!
டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், எந்த நாடும் பாகிஸ்தனை கண்டு கொள்ளவே இல்லை. எனவே, இந்தியாவில் பெரிய அளவில் பயங்கரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தி உலகத்தின் கவனத்தை ஈர்க்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதற்காக பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. ஏராளமான பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்து தாக்குதல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. தற்போது இந்தியாவுக்கு எதிராக ஜெய்ஸ்-இ- ...
Read More »சவேந்திர சில்வாவின் நியமனம் பற்றிய முரண்படும் நோக்குநிலைகள்!
கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்த லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஓய்வு பெற்றதையடுத்து கடந்த திங்கட்கிழமை புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கத் தூதரகத்திடமிருந்தும், ஐக்கிய நாடுகளிடமிருந்தும் கூர்மையான கருத்துக்கள் வெளிவந்திருக்கின்றன. இலங்கையில் இனத்துவ நீதிக்கும், நல்லிணக்கத்திற்கும் பாதகமான விளைவுகளை இந்த நியமனம் ஏற்படுத்துமென்று அவை தெரிவித்துள்ளன. பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இராணுவ அதிகாரி ஒருவரை இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமித்த செயல் இலங்கையில் அமெரிக்க இராணுவ ...
Read More »குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள்!
லங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கருத்தாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தனது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ எனப் பெயரிட்டுள்ளது. இச்சூழலில், மக்கள் விடுதலை முன்னணியும் தனது வேட்பாளர் அநுரகுமார எனப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள், தான்தான் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக, அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துக்கொண்டு, அக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்களின் ஆதரவுடனும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் கணிசமான ஆதரவுடனும், தன் பாணியின் ஊடாகத் தேர்தல் பிரசார வலத்தை ஆரம்பித்துள்ளார். ஆனால், ஐ.தே.கவில் ...
Read More »’நிறைவேற்று ஜனாதிபதி முறையை நிச்சயமாக ஒழிப்போம்’!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு தாம் முன்னின்று செயற்படுவோம் என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைக் கூறியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என முன்னதாக உறுதியளித்தவர்கள் அதனை நிறைவேற்றவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Read More »முக்கிய விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு!
ஆறு முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை பதில் காவல் துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை உள்ளிட்ட முக்கியமான ஆறு சம்பவங்கள் தொடர்பில் இந்த அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன. இதனை காவல் துறை ஊடகப்பேச்சாளர் காவல் துறை அத்தியட்சர்கள் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். முன்னதாக, குறித்த அறிக்கைகளை நாளை ( 23) அல்லது அதற்கு முன்னர் சமர்பிக்குமாறு பதில் காவல் துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, ...
Read More »ஆஷஸ் 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு!
ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே-யில் இன்று தொடங்கியது. போட்டி உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு தொடங்க வேண்டும். மழை ...
Read More »அவுஸ்திரேலியாவில் வீட்டிலிருந்து மாயமான மூன்று வயது சிறுமி!
அவுஸ்திரேலியாவில் வீட்டிலிருந்து மாயமான் மூன்று வயது சிறுமி நீண்ட நேர தேடுதலுக்கு பின் அணைக்கட்டுக்கு அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அவுஸ்திரேலியாவின் நூசாவுக்கு அருகிலுள்ள கூத்தராபாவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து எலெனோர் அல்லது எல்லி என்கிற சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதும், ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிரமாக தேடுதல் வேட்டை ஆரம்பமானது. அவரது உறவினர்கள் பலரும் பேஸ்புக் பக்கத்தில் உதவி கேட்டதை அடுத்து, தன்னார்வாளர்களும் அப்பகுதியில் குவிந்து சிறுமியை தேட ஆரம்பித்தனர். 8 ...
Read More »இனி அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற வேண்டியதில்லை!
அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருக்கு தனது குடும்பத்துடன் நாடு கடத்தப்பட இருந்த இந்திய வம்சாவளியினரான ஒரு மாணவி, புலம்பெயர்தல் துறை அமைச்சருக்கு தெரிவிக்கும் ஒரு செய்தியாக பிரபல அவுஸ்திரேலிய பாடல் ஒன்றை பாடி நெகிழ வைத்த சம்பவம் நினைவிருக்கலாம். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராஜசேகரன் மாணிக்கம் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த நிலையில், தனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுப்பதற்காக 2103ஆம் ஆண்டு குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்றார். அவரது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை இல்லை என்பதால், அவருக்காக மருத்துவ செலவுகளை செய்ய இயலாது ...
Read More »