ஆஸ்திரேலியாவில் முக்கிய பத்திரிக்கை நிறுவனங்கள் தங்களது முதல் பக்கங்களை கருப்பு மை பூசி இருட்டடிப்பு செய்து வெளியிட்டுள்ளன. போர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிக்கை நிறுவனமான ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஏபிசி) மற்றும் நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் வீடு ஆகிய இடங்களில் கடந்த ஜூன் மாதம் போலீசார் சோதனை நடத்தினர். அரசின் இரு முக்கிய விவகாரங்களை வெளியிட்டதால் ...
Read More »செய்திமுரசு
ஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்!
போர் வெற்றியை ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தக்கூடாது ; போர் அரசுக்கு சொந்தமானதே தவிர, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல ; போர் வெற்றியை தேர்தல் பிரசாரங்களில் எந்த கட்சியும் பயன்படுத்தமுடியாது என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கடந்தவாரம் செயதியாளர் மகாநாட்டில் கூறியிருந்தார். ஆனால், அவரது அறிவுறுத்தலை அரசியல் கட்சிகள் மதித்துச் செயற்படும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. போரின் முடிவுக்கு பின்னர் மாத்திரமல்ல, முன்னரும் கூட போர் சகல தேர்தல்களிலும் முக்கியமான பிரசாரப்பொருளாக தாராளமாக அரசியல் கட்சிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இராணுவ ...
Read More »19 மணிநேரம் தொடர்ந்து பயணித்து சிட்னி சென்ற விமானம்!
உலகில் நீண்ட தொலைவு பறக்கும் விமானம் நியூயோர்க் நகரிலிருந்து புறப்பட்டு அவுதிரேலியாவின் சிட்னி நகருக்கு இன்று காலை சென்றடைந்தது. நியூயோர்க் நகரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 49 பேருடன் புறப்பட்ட குவான்டாஸ் நிறுவனத்தின் போயிங் 787-9 ரக விமானம் இடை நில்லாமல் பயணிக்கும் அளவுக்கு போதுமான எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது. ஏறக்குறைய 16 ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவு பறக்கும் அளவுக்கு எரிபொருள் இருந்தது. இந்நிலையில் 19 மணிநேரம் 16 நிமிடங்கள் பறந்து இன்று காலை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை விமானம் சென்றடைந்தது. இது ...
Read More »கோத்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை!
தமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை நிராகரிக்கும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்த தாயரில்லை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நியாயமான நிலைப்பாடுகள், அவர்களின் பிரச்சினைகள், அவர்களின் எதிர்பார்ப்பு என்பவற்றை உள்ளடக்கியதாகவே எமது 13 அம்சக்கோரிக்கைகளை முன்வதோம். அவ்வாறு இருக்கையில் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர் யாரோ அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம். இது குறித்து ஆராய எமது கோரிக்கைகளை உருவாக்கிய ஐந்து தமிழ் கட்சிகளும் இந்த வாரத்தில் ...
Read More »அவுஸ்திரேலியா பயணித்த விமானத்தில் மர்மத் தூள் !
கனடாவில் இருந்து அவுஸ்திரேலியா பயணித்த விமானத்தில் மர்ம தூள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் வான்கூவரில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பயணித்த ஏர் கனடா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானத்திலே மர்மத் தூள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானம் மெல்போர்னில் தரையிறங்கியதை அடுத்து பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, விமானத்தில் இருந்த சரக்குகளை வெளியேற்றும் போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த மர்ம தூளை கண்டு ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர். உடனே தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்களுடன் வீரர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவம் குறித்து ...
Read More »மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்!
மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து சிலி நாட்டில் மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் சாண்டியாகோவில் இன்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி மெட்ரோ ரயில் கட்டணத்தை 800 முதல் 830 சிலி பெசோக்கள் வரை அரசாங்கம் உயர்த்தியது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. கடந்த வெள்ளிக்கிழமை சாண்டியாகோ மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை அன்று போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க சாண்டியாகோ மற்றும் சாகபுகோ மாகாணங்களிலும், புவென்ட் ஆல்டோ ...
Read More »காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு கொடுப்பனவு வழங்க முடிவு!
உள்நாட்டு யுத்தம் காரணமாகக் காணாமல் போனவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களுக்கு, மாதாந்தம் 6,000 ரூபாய் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் தெரிவித்தார். திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் (18) நடைபெற்ற விசேட தேவையுடையோர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்படி தெரிவித்தார். இதற்கான சுற்றுநிருபம் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் கூறிய அவர், காணாமல்போனவர்களுடைய புகைப்படத்துடன் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து, கிராம உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தலுடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை ...
Read More »’ஏப்ரல் தாக்குதல்; ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படும்’!
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, பேராயரின் வேண்டுகோளுக்கு அமைய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள்” என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று (19) இடம்பெற்ற பிரசார கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
Read More »ஜி ஜின்பிங்: இன்னொரு மாவோ!
மா சே துங்குக்குப் பிறகு சக்தி வாய்ந்த அரசியல் தலைவராக சீனாவில் உருவெடுத்துள்ளார் ஜி ஜின்பிங். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சீன மக்கள் குடியரசின் அதிபர், சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவர், கட்சியின் தனிப்பெரும் தலைவர் என்று ஒரே சமயத்தில் பல உயர் பதவிகளை வகிக்கிறார். மாவோவின் சிந்தனைகள் எப்படி கட்சியின் சித்தாந்தங்களிலும் நாட்டின் சட்டங்களிலும் தாக்கம் செலுத்தினவோ அப்படி இன்றைய சீனாவில் ஜி ஜின்பிங்கின் சிந்தனைகளும் தாக்கம் செலுத்துகின்றன. 1953-ல் பிறந்த ஜி ஜின்பிங்கின் தந்தை ஜி ஜாங்க்ஸன், ...
Read More »அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களுக்கு வேண்டுகோள்!
அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள், மாகாண சபை நிறுவனங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் என்பனவற்றில் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து வாக்குகளை கோருவதற்கும், துண்டுபிரசுரங்களை விநியோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது உரிய நிறுவன தலைவர்களின் பொறுப்பாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிததுள்ளார். இது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Read More »