அவுஸ்திரேலியா பயணித்த விமானத்தில் மர்மத் தூள் !

கனடாவில் இருந்து அவுஸ்திரேலியா பயணித்த விமானத்தில் மர்ம தூள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் வான்கூவரில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பயணித்த ஏர் கனடா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானத்திலே மர்மத் தூள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமானம் மெல்போர்னில் தரையிறங்கியதை அடுத்து பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, விமானத்தில் இருந்த சரக்குகளை வெளியேற்றும் போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த மர்ம தூளை கண்டு ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர்.

உடனே தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்களுடன் வீரர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவம் குறித்து மெல்போர்ன் விமான நிலைய செய்தி தொர்பாளர் கூறியதாவது, அனைத்து பைகளும் வெளியேற்றப்பட்ட பின்னர் மர்ம தூள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் வழக்கமான நடைமுறையை தான் நாங்கள் பின்பற்றினோம். கைப்பற்றப்பட்ட தூள் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,