வடகிழக்கில் தொடரும் இன அழிப்பிற்கு எதிரான பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் போது மக்களை தூண்டிவிட தமிழ்தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட கட்சிகள் இந்தப்போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்து பொலிஸார் செய்த முறைப்பாட்டின் கீழ் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Read More »செய்திமுரசு
குயின்ஸ்லாந்தில் அச்சத்தில் வாழ்ந்துவரும் பெண்!
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வாழும் பெண் ஒருவர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, தன் வீட்டில் ஏசி ஆன் செய்யப்பட்டிருப்பதையும், வீட்டின் பின் கதவு திறந்திருப்பதையும், சமையல் அறையில் பாதி சமைக்கப்பட்ட நிலையில் மாமிசம் இருப்பதையும் கண்டு திடுக்கிட்டுள்ளார் ஏற்கனவே Monica Green என்னும் அந்த பெண் தன் வீட்டு பாதுகாப்பு கமெரா ரிப்பேர் ஆகியிருப்பதை கவனித்திருந்தார். வீட்டிலுள்ள பொருட்கள் எல்லாம் இடம் மாறியிருக்க, எல்லாம் சேர்ந்து சேர்ந்து திகிலை ஏற்படுத்த, பொலிசாருக்கு தகவலளித்துள்ளார் Monica. காவல் துறை வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் கூரைப்பகுதியில் ...
Read More »ஹாங்காங் மக்களுக்கான சிறப்பு விசா திட்டத்தை தொடங்கியது இங்கிலாந்து
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஹாங்காங் மக்களுக்கான புதிய விசா திட்டத்தை இங்கிலாந்து அரசு நேற்று தொடங்கியது. இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் ஹாங்காங் இருந்தபோது, அந்த பிராந்திய மக்களுக்கு இங்கிலாந்தில் நிரந்தர குடியேற்ற உரிமையை 1997-ம் ஆண்டு வரை வழங்கக்கூடிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா ஹாங்காங்கில் அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தங்கள் நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டில் 5 ஆண்டுகள் வசிப்பதற்காக விண்ணப்பிக்கலாம் என்கிற புதிய விசா திட்டத்தை இங்கிலாந்து அரசு ...
Read More »ஆய்வுப் புலத்துக்குள் தமிழை முன்நகர்த்தல்
பண்பாட்டு ரீதியாக, நாம் மிகப்பாரிய நெருக்கடியில் இருக்கிறோம். எமது அடையாளங்களைத் தக்க வைக்கவும் மொழியைப் பேணவும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும், நாம் அரும்பாடுபட வேண்டி இருக்கிறது. நாம், இதைச் சரிவரச் செய்வதற்கு, அறிவியல் ரீதியான அணுகுமுறை தேவைப்படுகிறது. ‘கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த இனம்’ என்ற, வெற்றுப் பெருமைகளில் விளையும் பயன் எதுவுமல்ல; எமது மொழியையும் பண்பாட்டையும் வரலாற்றையும், அறிவியல் ரீதியான சிந்தனைப் பரப்புக்குள் கொண்டு சேர்ப்பது முக்கியமானது. எமக்கான வரலாற்றை, வெறுமனே கட்டுக்கதைகளில் இருந்து உருவாக்கிவிட முடியாது. ஒடுக்கப்படுகின்ற ...
Read More »குடியியல் உரிமை பறிபோகும் அபாயம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சார்பில், ஜனாதிபதி செயலாளர் கையொப்பத்துடன், ஜனாதிபதி விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவானது குடியியல் உரிமைகளைப் பறிக்கும் பரிந்துரைகளை முன்வைக்கக்கூடிய விசேட அதிகாரம் கொண்ட ஆணைக்குழுவாகும். அரசியல் பழிவாங்கல் தொடர்பில் தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக, இலக்கம் 8,9,10 ஆகியவற்றுக்கான தீர்மானங்களை எடுக்கும் பரிந்துரைகளை விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவால் முன்வைக்க முடியும். அவ்வாறான பரிந்துரைகள் முன்வைக்கப்படுமாயின், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், அக்கூட்டமைப்பின் ...
Read More »கனடா வெளிவிவகார அமைச்சருக்கு காணாமல்போனவர்களின் உறவினர்கள் கடிதம்
இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்து காணாமல்போனவர்களின் உறவினர்களின் சங்கத்தினர் கனடா வெளிவிவகார அமைச்சர் மார்க்கானோவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான முகன்மை குழுவில் கனடாவும இடம்பெற்றிருப்பதால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துவதை உங்கள் தீர்மானத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களாகிய நாங்கள் இந்த கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் சிறுவர்கள் உட்பட எங்கள் காணாமல்போனவர்களிற்கு நீதி கிடைப்பது குறித்த நம்பிக்கையை இழந்த பின்னர் ...
Read More »தமிழர் பெருவிழா தைத்திருநாள் 2021 – மேற்கு அவுத்திரேலியா
தைப்பொங்கல் பெருவிழா அவுத்திரேலிய தமிழர் பேரவை மேற்கு அவுத்திரேலியா மற்றும் தமிழ் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை மேற்கு அவுத்திரேலியா ஒழுங்குபடுத்தலில் Rossiter Pavilion, 16 Tuberose rd, Piara Waters WA 6112 என்னும் இடத்தில் நடைபெற்றது. 30.01.2021 சனிக்கிழமை மாலை 3.40 மணிக்கு மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து அவுத்திரேலிய பூர்வீக மக்கள் கொடி, அவுத்திரேலிய தேசியக் கொடி, தமிழீழத் தேசியக் கொடி என்பன ஏற்றப்பட்டு கொடி வணக்கம், அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழர் பெருவிழா நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து சிறியோர் பெரியோருக்கான விளையாட்டுக்கள், ...
Read More »சுதந்திரம் என்றால் போர் – தாய்வானிற்கு சீனா கடும் எச்சரிக்கை
சுதந்திரத்திற்கான தாய்வானின் முயற்சிகளின் அர்த்தம் போர் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தாய்வானில் உள்ள சுதந்திரத்தை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சக்திகளிற்கு நாங்கள் கடுமையாக தெரிவிக்கின்றோம்,நெருப்புடன் விளையாடுபவர்கள் தங்களை எரித்துக்கொள்வார்கள் என சீனாபாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் வுகியான் தெரிவித்துள்ளார். தாய்வானின் சுதந்திரம் என்றால் போர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தாய்வானிற்கு அருகில் சீனா தனது இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதை நிராகரித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தாய்வான் நீரிணை பகுதியில் காணப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இறைமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கு இத்தகைய செயற்பாடுகள் அவசியமானவை என ...
Read More »குருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளம் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்; மேன்முறையீட்டு!
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமலாக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதேவேளை இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அவரோடு சேர்ந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றினையும் தொடரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா ...
Read More »பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தடையையும் மீறி தையிட்டியில் தனியார் நிலத்தில் விகாரை
யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த அடிக்கல்லை நாட்டியுள்ளார். பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விகாரை அமைப்பதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு நிரந்தரக் கட்டிடம் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இன்றைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
Read More »