சுதந்திரத்திற்கான தாய்வானின் முயற்சிகளின் அர்த்தம் போர் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தாய்வானில் உள்ள சுதந்திரத்தை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சக்திகளிற்கு நாங்கள் கடுமையாக தெரிவிக்கின்றோம்,நெருப்புடன் விளையாடுபவர்கள் தங்களை எரித்துக்கொள்வார்கள் என சீனாபாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் வுகியான் தெரிவித்துள்ளார்.
தாய்வானின் சுதந்திரம் என்றால் போர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தாய்வானிற்கு அருகில் சீனா தனது இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதை நிராகரித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தாய்வான் நீரிணை பகுதியில் காணப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இறைமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கு இத்தகைய செயற்பாடுகள் அவசியமானவை என தெரிவித்துள்ளார்.
சீனாவின் இந்த எச்சரிக்கை குறித்து அமெரிக்கா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த கருத்து துரதிஸ்;டவசமானது என பென்டகன் தெரிவித்துள்ளது.
தாய்வானிற்கு அருகில் தனது இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்தி விமானங்களை சீன பறக்கவிட்டுள்ள இரண்டு நாட்களின் பின்னர் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.