தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் ஒன்றான குண்டுத்தோசையினை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவி அந்த உணவினை சாப்பாட்டு பெட்டியுடன் தூக்கி வீசிய சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது. தீவகத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தில் பிரபல பெண்கள் கல்லூரியில் உயர்தரம் பயிலும் மாணவி ஒருவர் தனது உணவாக குண்டுத்தோசை எனப்படும் தமிழர்களின் பாரம்பரிய உணவினை எடுத்துச் சென்றுள்ளார். அவர் தீவகத்திலிருந்து வெளியேறி யாழ்ப்பாணத்திற்கு நுழையும் இராணுவ சோதனைச் சாவடியில் சோதனைக்காக இறக்கிவிடப்பட்ட நிலையில் சோதனையினை மேற்கொண்ட இராணுவத்தினர் சாப்பாட்டு பெட்டியைக் ...
Read More »செய்திமுரசு
யாழ். போதனா வைத்தியசாலையின் நிரந்தர பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி !
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் த. சத்தியமூர்த்தி நிரந்தரமாக (இடமாற்றங்களுக்கு உட்படாத இறுதி நிலைப் பதவியில்) சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் ஓய்வூதியம் பெறும்வரை யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்ற முடியும். மார்ச் 27 ஆம் திகதிய அமைச்சரவை அனுமதியுடன் இலங்கையில் உள்ள ஒன்பது வைத்தியசாலைகளுக்கு இவ்வாறு நிரந்தரப் (இடமாற்றம் அற்ற) பணிப்பாளர் பதவிக்கு சிரேஸ்ட வைத்திய நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு சீமாட்டி ...
Read More »உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்லும்!
உலக கோப்பையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே நம்பிக்கை தெரிவித்தார். உலக கோப்பை போட்டி குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அளித்த பேட்டியில் கூறியதாவது:- கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படாததால் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி சோபிக்காது என்று பலரும் எழுதுகிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலிய அணி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகிறது. முந்தைய கால ...
Read More »அரசியல் தந்திரோபாயம்!
நாட்டில் ஜனநாயகம் கோலோச்சுகின்றது. அது ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டது என்று கூறப்படுகின்றது. ஆனால், அந்த ஜனநாயகத்தில், தானே தன்னிகரில்லாத உயர்ந்த சக்தி என்பதை நிறைவேற்று அதிகாரம் மீண்டும் ஒரு முறை உரத்து வெளிப் படுத்தி இருக்கின்றது. நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை, சட்டவாக்கம் ஆகிய மூன்றுடன் சமூகத்தின் காவல் நாய் என வர்ணிக்கப்படுகின்ற ஊடகத்துறையையும் சேர்த்து நான்கு தூண்களில் கட்டி எழுப்பப்பட்டிருப்பதே ஜனநாயகம் என்பதே கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் நான்கு சக்திகளும் தம்மளவில் தனித்துவமானவை. ஓன்றையொன்று மிஞ்ச முடியாது. ஒன்று மற்றொன்றை ...
Read More »ஆஸ்திரேலிய பிரதமராக ஸ்காட் மோரிசன் பதவி ஏற்பு!
சுதந்திரா கட்சியின் ஸ்காட் மோரிசன் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியாவின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் தேர்தலில் வென்று 11 நாட்களுக்குப் பிறகு இன்று (புதன்கிழமை) நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமராக ஸ்காட் மோரிசன் பதவி ஏற்றுக் கொண்டார். இவருடன் மைக்கேல் மெக்கார்மாக்கும் துணை பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் அமைச்சர்களுடனான சந்திப்பில் மோரிசன் பேசும்போது,” மக்களுக்கு ஒவ்வொரு நாளும் பணி செய்யக் கூடிய பாக்கியத்தை பெறக் கூடிய வாய்ப்பை அவர்கள் நமக்கு அளித்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நாம் அவர்களுக்காக சிறப்பாக ...
Read More »விக்டோரியாவை உலுக்கிய கோர விபத்துக்கள்! நால்வர் பலி!
விக்டோரியாவில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு இந்த விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துக்களில் ஒன்றில் பெண்ணொருவரை காரினால் மோதிவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச்சென்ற நபர் இன்று காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Ardeer பகுதியில் Ballarat வீதியில் இடம்பெற்ற குறிப்பிட்ட சம்பவத்தில் அந்தப்பெண் உயிரிழந்துள்ளார். இதேவேளை, Mount Eliza பகுதியில் வீதியில் எதிரே வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் யூட் வாகனமொன்றில் சென்றுகொண்டிருந்த ஓட்டுனரும் அவருடன் சென்றவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ...
Read More »நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது அமெரிக்கா!
நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியுள்ளது.அமெரிக்காவின் கருவூலத்துறை உலகம் முழுக்க உள்ள சில முக்கிய ரூபாய்களை அந்நாட்டின் கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ளது. அதன்படி எந்த நாட்டு ரூபாய்கள் எல்லாம் உலகில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த நாட்டைச் சேர்ந்த ரூபாய்கள் மட்டுமே இந்த வரிசை பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கும். அந்த ரூபாயின் சர்வதேச மதிப்பு மற்றும் தாக்கத்தை வைத்து இந்த பட்டியலில் சேர்க்கப்படும். அந்த வகையில் சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் பணம் அமெரிக்காவின் இந்த ...
Read More »கன்னியா பிள்ளையார் ஆலயம் அகற்றப்பட்டமைக்கு இந்துக்குருமார் அமைப்பு கண்டனம்!
கன்னியா பகுதியில் பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டமைக்கு கண்டனத்தையும் மனவேதனையும் இந்துக்குரமார் அமைப்பு வெளியிட்டுள்ளது. இச்சம்வம் தொடர்பில் குறித்த அமைப்பின் தலைவர் கே.வி.கே.வைத்தீஸ்வரக்குருக்கள் வெளியிட்டள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க’ என்னும் தத்துவத்திற்கு அமைவாக உலகவாழ் மக்கள் அனைவரும் தமது வாழ்வியலை நடத்திவருகின்றார்கள். எமது இலங்கை திருநாட்டில் இந்துக்களின் வழிபாட்டிடங்கள் சார்ந்து இலங்கை தொல்லியல் திணைக்களம் அண்ணளவாக எழுபதிற்கும் மேற்பட்ட பகுதிகளை அடையாளமிட்டு தனது பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இவை எமது வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த நிலையில் காணப்படுகின்றது. மிக ...
Read More »ஒரே தினத்தில் பெருநாளைக் கொண்டாட வேண்டும்!
நாட்டில் ஒரே தினத்தில் நோன்புப் பெருநாளைக் கொண்டாட வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வலியுறுத்தியுள்ளது. அத்துடன் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோரை கருத்திற்கொண்டு வீண் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக்குழுச் செயலாளர் அஷ்ஷெய்க் எச். உமர்தீன் வெளியிட்டுள்ள நோன்புப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முஸ்லிம்களுக்கு பின்வரும் வழிகாட்டல்களை வழங்குகின்றது. 1. கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ...
Read More »ஆள்வதற்கான விருப்பமும் மகிழ்வதற்கான விருப்பமும்!
நாட்டின் சமகால நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முல்லைத்தீவு, வற்றாப்பளை அம்மனைத் தரிசித்தால் எமது நெருக்கடிகள் தீரும் என்ற அளப்பரிய நம்பிக்கையுடன், அம்பாளின் வைகாசிப் பொங்கலுக்கு (மே20) சென்றிருந்தோம். அன்னையிடம் மக்கள் தங்களது ஆற்றொனாத் துன்பங்களைக் கொட்டிக் கதறி வழிபட்டனர். மனதில் அடக்கி வைத்திருக்கும் ஆதங்கங்களை, ஆற்றாமைகளை இவ்வாறாகக் கொட்டுவது ஒருவித உளவியல் ஆற்றுப்படுத்தல் ஆகும். அன்றைய போக்குவரத்தில், பலரோடு பலவித எண்ணங்களைப் பகிரும் சந்தர்ப்பங்கள் நிறையவே ஏற்பட்டன. அதில் ஒருவர், ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்; மற்றையவர் வணிகம் செய்பவர். இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். இன்றைய பத்தியை ...
Read More »