திருகோணமலைக்கு இன்று செல்லும் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், அம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை சந்திக்கவுள்ளார். திருகோணமலை கூனித்தீவில் உள்ள பாடசாலைக் கட்டட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லஸ் கலந்து கொள்கின்றார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்லத்தும் பங்கேற்கவுள்ளார். இந்த திறப்பு விழா நிகழ்வு காலை 8.45 இற்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு நிறைவடைந்தவுடன் கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்டவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ள ...
Read More »செய்திமுரசு
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா உதவி!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய குடும்பங்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு அவுஸ்திரேலியா முன்வந்திருக்கிறது. கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடி நிலைமையின் காரணமாக மக்கள் நாடளாவிய ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு உள்ளானார்கள். குறிப்பாக பலரும் தமது வருமானங்களை இழக்கவேண்டியேற்பட்டது. இது சாதாரண மக்கள் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்குக் கூட இடர்ப்பட வேண்டிய சூழ்நிலையைத் தோற்றுவித்தது. அனுராதபுர மாவட்ட செயலாளரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட ...
Read More »கிம் ஜாங் அன் உடல் நிலை குறித்து வெளியாகும் மாறுபட்ட தகவல்கள்
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் உடல் நிலை குறித்து மாறுபட்ட தகவல்களை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா சர்ச்சைகளுக்கு பெயர்போன நாடாகும். அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அதற்கும் ஒருபடி மேலே. சர்வதேச ஊடகங்களில் அவர் குறித்த எதிர்மறையான செய்திகளுக்கு பஞ்சம் இருந்ததில்லை. எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒரு சர்வாதிகாரியை போல் தடாலடியான முடிவுகளை எடுப்பவர் கிம் ஜாங் அன் என்பதையே அவரை பற்றிய செய்திகள் உணர்த்தும். ஆனால் கடந்த சில மாதங்களாக கிம் ஜாங் ...
Read More »கொரோனா வைரஸ் தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்கவும்!
கொரோனா வைரஸ் குறித்து மக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இராணுவதளபதி சவேந்திரசில்வா கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக நீங்கிவிட்டது என கருதி மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பான தங்கள் எச்சரிக்கையை தளர்த்தக்கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவவில்லை என்ற போதிலும் அது இடம்பெறும் ஆபத்தினை நிராகரிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்நோயாளிகள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படுபவர்களில் சிலர் கொரோனா ...
Read More »மாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்து களமிறங்கத் திட்டம்?
மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆராய்ந்து வருவதாக அந்தக் கட்சி வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது. இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள அரசு, அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன்படி இடைக்கால கணக்கறிக்கையில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன. இந்நிலையிலேயே தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ...
Read More »139 ஆண்டுகள் பழமையான மசூதியில் பாரிய தீப்பரவல்
தென்னாப்பிரிக்க நகரமான டர்பனில் 139 ஆண்டுகள் பழமையான மசூதியில் பாரிய தீப் பரவல் இடம்பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான கிரே ஸ்ட்ரீடில் திங்களன்று ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. எனினும் மசூதிக்கு மேலே அமைந்துள்ள ஏழு ஊழியர்களின் குடியிருப்புகளில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு காரணமாக இந்த தீப் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என தென்னாபிரக்க முஸ்லிம் வலையமைப்பின் தலைவர் பைசல் சுலிமான் தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ...
Read More »கோமாவில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் – ஆட்சி அதிகாரத்தில் சகோதரி
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருப்பதால், அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் அனைத்து பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தென் கொரியாவின் மறைந்த ஜனாதிபதி கிம் டே-ஜங்கின் முன்னாள் உதவியாளரான சாங் சாங்-மின், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்த ஊடகங்களுக்கு எரிபொருளைச் சேர்த்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மன அழுத்தம் காரணமாக தமது சகோதரியிடம் பொறுப்புகள் சிலவற்றை ஒப்படைத்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து தற்போது அவர் ...
Read More »கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி
ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசயக் காட்சி வெளியாகி உள்ளது.அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசய காட்சி வெளியாகி உள்ளது. லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா பகுதிகளில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றிருந்தவர்கள் கடலில் பேரதிசயத்தைக் கண்டனர். ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தது. ஹாலிவுட் படங்களில் வருவது போன்று ...
Read More »முதல் அமர்வும் முதல் விவாதமும்
9 ஆவது புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு கடந்த வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு கொள்கைப் பிரகடன உரையும் நிகழ்த்தப்பட்டமை ,மறுநாள் அந்தக் கொள்கைப் பிரகடன உரைமீதான விவாதம் என இருநாட்களும் பாராளுமன்றம் பரபரப்பாகவே காணப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்தப்பட்ட பாராளுமன்றத்துக்கான தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களும் தேசியப்பட்டியல் ஆசனங்களூடாக தெரிவானவர்களும் சத்தியப்பிரமாணம் செய்வதற்கும் 9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் ,பிரதி சபாநாயகர், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரையும் தெரிவு ...
Read More »அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்பு
திருக்கோவில் காவல் துறை பிரிவிற்குட்பட்ட பாவட்டாய் என்னும் பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி அன்று காணியொன்றில் புதையுண்டிருந்த ரி-81 மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டு விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செயலிழக்கசெய்யப்பட்டுள்ளது. இதே வேளை கடந்த காலங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்த கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(23) பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து விமானப்படையினரினால் யுத்த காலங்களில் உபயோகிக்கப்பட்ட வெடிபொருள் ஒன்றின் பகுதி மீட்கப்பட்டுள்ளது. குறித்த வெடிபொருளை ஆராய்ந்து உரிய அனுமதியை பெற்று செயழிலக்கம் செய்ய ...
Read More »