கொரோனா வைரஸ் குறித்து மக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இராணுவதளபதி சவேந்திரசில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக நீங்கிவிட்டது என கருதி மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பான தங்கள் எச்சரிக்கையை தளர்த்தக்கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவவில்லை என்ற போதிலும் அது இடம்பெறும் ஆபத்தினை நிராகரிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்நோயாளிகள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படுபவர்களில் சிலர் கொரோனா வைரசினால் பாதிக்கப்படும் நிலை காணப்படுகின்ற போதிலும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதை தொடர்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் ஆபத்து நீங்கிவிட்டது என கருதக்கூடாது என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal