139 ஆண்டுகள் பழமையான மசூதியில் பாரிய தீப்பரவல்

தென்னாப்பிரிக்க நகரமான டர்பனில் 139 ஆண்டுகள் பழமையான மசூதியில் பாரிய தீப் பரவல் இடம்பெற்றுள்ளது.

தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான கிரே ஸ்ட்ரீடில் திங்களன்று ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

எனினும் மசூதிக்கு மேலே அமைந்துள்ள ஏழு ஊழியர்களின் குடியிருப்புகளில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு காரணமாக இந்த தீப் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என தென்னாபிரக்க முஸ்லிம் வலையமைப்பின் தலைவர் பைசல் சுலிமான் தெரிவித்துள்ளார்.

சுமார் இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

எவ்வாறெனினும் மசூதியை அண்மித்துள்ள மூன்று கட்டிடங்கள் தீ விபத்தினால் சேதமடைந்ததாக அந் நாட்டு அவசர சேவை செய்தித் தொடர்பாளர் ரொபர்ட் மெக்கென்சி கூறியுள்ளார்.

இந்த மசூதி மத்திய டர்பனின் ஒரு அடையாளமாகவும், வழிபாட்டு இல்லமாகவும் உள்ளது. வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளை நடத்துவதோடு, நிறவெறி எதிர்ப்பு நெல்சன் மண்டேலா, பிரிட்டிஷ் பாடகர் யூசுப் இஸ்லாம், முன்பு கேட் ஸ்டீவன்ஸ் என்று அழைக்கப்பட்டவர் மற்றும் குத்துச்சண்டை சூப்பர் ஸ்டார் மொஹமட் அலி உள்ளிட்ட முக்கிய நபர்களும் இங்கு விஜயம் செய்துள்ளனர்.