அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று காலை கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, இடம்பெயர்ந்த மக்களை வாக்களிக்கச் செய்வதற்காக போக்குவரத்து ஏற்பாடுகளுக்காக பொது நிதியை தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
Read More »செய்திமுரசு
புதிய நோய் அறிகுறி குறித்து அவதானம்
மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியால் ஏற்பட்ட மரணங்களில் பெரும்பாலானவை வீட்டிலேயே சம்பவித்துள்ளதென,தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதில் அதிக ஆபத்தான பிரதேசங்களில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களைக் கொண்டவர்களுக்கு புதிய நோய் அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே கொரோனா தொற்று ஏற்படக்கூடிய அதிக ஆபத்தான பிரதேசங்களில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களையுடையவர்கள் தமக்கு ஏதாவது புதிய நோய் அறிகுறிகள் காணப்பட்டால் விரைவாக சிகிச்சைக்கு செல்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். காய்ச்சல், இருமல், சளி, ...
Read More »பிரசவத்தில் மனைவி பலி : கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு குழந்தையை சந்தித்த நேபாள வாலிபர்
கொரோனா பரவல் காரணமாக பிரசவத்தில் மனைவியை இழந்த நிலையில் 8 மாதங்கள் கழித்து நேபாள வாலிபர் தனது குழந்தையை சந்தித்த சம்பவம் பலரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. நேபாள நாட்டில் காட்மண்டு பகுதியை சேர்ந்தவர் யுப்ராஜ் பூசல் (வயது 30). துபாயில் உள்ள தனியார் கல்லூரியில் நீச்சல் குளத்தின் பாதுகாப்பு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கர்ப்பிணி மனைவி மினா சொந்த ஊரில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் யுப்ராஜின் மனைவிக்கு ஜலந்தா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆனால் ...
Read More »நந்திக்கடல் ’கப்பல் கதை’ அம்பலமானது
சொல்லாமல் சொன்னார் சமரசிங்க எம்.பி ராஜபக்ஷ பொய் சொன்னார் என சபையில் அறிவித்தார் பிரபாகரனும் கப்பலில் ஏறியிருப்பார் என்றார் இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, முல்லைத்தீவு நந்திக்கடலில் சிக்கிக்கொண்ட அப்பாவி பொதுமக்களை காப்பாற்றுவதற்காக, கப்பலொன்றை அனுப்புவதற்கு இராஜதந்திரிகள் கலந்துரையாடினர் எனினும், அன்றைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ, இராஜதந்திரிகளுக்கு பொய்யையே சொன்னார் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட எம்.பியான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 2021ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம், நேற்று (23) ஆரம்பமானது. அதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே ...
Read More »கோட்டாவுக்கான அழைப்பாணை தள்ளுப்படி
சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் விடுத்த அழைப்பாணை மேன்முறையீட்டு நீதிமன்றால் தள்ளுப்படி செய்யப்பட்டது இரண்டு மனித உரிமை செயற்பாட்டளர்களான லலித், குகன் ஆகிய இருவரும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டது. இவ் அழைப்பாணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 2019ஆம் ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டது. குறித்த இருவரும் 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமல் போயிருந்தனர். சர்வதேச மனித உரிமை தினத்துக்கு ...
Read More »ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கு டொனல்டு டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் 2021 ஜனவரி மாதம் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார். ஆனால், தற்போதைய அதிபரான டொனால்டி டிரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக அவர் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார். மேலும், ஆட்சி ...
Read More »சீன வர்த்தக ஒப்பந்தம் ஈழத் தமிழர்களுக்கு ஆபத்தானதா?
இந்தோ- பசுபிக் பிராந்தியக் கொதிநிலைக்குள் சுழியோட வேண்டிய தமிழ்த்தரப்பு, தேர்தல் அரசியலில் மாத்திரமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது – அ.நிக்ஸன் சீனாவை மையப்படுத்தி 15 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership) (RCEP) சென்ற சனிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், சென்ற புதன்கிழமை இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட குவாட் கடற்படைப் பயிற்சியின் இரண்டாவது தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து மேற்கொண்டு வரும் இந்தப் பயிற்சியும் பாதுகாப்பு ...
Read More »ஊடகவியலாளர் சந்திரமதியின் இறுதிக்கிரியைகள் இன்று
திடீர் சுகயீனம் காரணமாக மரணமான ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேலின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. அவரது சொந்த ஊரான கண்டி – கந்தகட்டி பகுதியில் இன்று பிற்பகல் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். சந்திரமதியின் பூதவுடல் கொழும்பு – புஞ்சி பொரள்ளையிலுள்ள லங்கா மலர்ச் சாலையில், மக்கள் அஞ்சலிக்காக நேற்றிரவு வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை அவரது சொந்த ஊருக்கு பூதவுடல் கொண்டு சென்று, அங்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதுடன், மாலை இறுதிக் கிரியைகள் நடத்தப்படவுள்ளன. ‘தினக்குரல்’ பத்திரிகையூடாக தனது ஊடகப் ...
Read More »பைடன் பலவீனமான அதிபராகவே இருப்பார்
ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்காவுடனான உறவுகள் தானாகவே மேம்படும் என்ற மாயையை சீனா கைவிட வேண்டும் என அரசு ஆலோசகர் கூறி உள்ளார். டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. குறிப்பாக கொரோனாவை கையாளுதல், வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு தகுதி பெற்றிருக்கிறார். அவரது நிர்வாகத்தின் செயல்பாடுகள் எப்படி ...
Read More »ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கி ஒருவர் பலி
ஆஸ்திரேலியாவில் கேபிள் கடற்கரையில் சுறாவின் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் உள்ள கிம்பர்லி பிராந்தியத்தில் கேபிள் என்ற புகழ்பெற்ற கடற்கரை உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மக்கள் அனைவரும் கடலில் ஆனந்த குளியல் போட்டனர். அப்போது ஒருவர் கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது சுறா மீன் ஒன்று அவரை கடுமையாக தாக்கியது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு சுறாவிடம் ...
Read More »