மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியால் ஏற்பட்ட மரணங்களில் பெரும்பாலானவை வீட்டிலேயே சம்பவித்துள்ளதென,தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதில் அதிக ஆபத்தான பிரதேசங்களில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களைக் கொண்டவர்களுக்கு புதிய நோய் அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே கொரோனா தொற்று ஏற்படக்கூடிய அதிக ஆபத்தான பிரதேசங்களில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களையுடையவர்கள் தமக்கு ஏதாவது புதிய நோய் அறிகுறிகள் காணப்பட்டால் விரைவாக சிகிச்சைக்கு செல்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், இருமல், சளி, தொண்டைவலி, மூச்செடுப்பதில் சிரமம், உடல் பலவீனம் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்பட்டாலும் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளை நாடுவது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 1999 என்ற இலக்கத்துக்கு அழைத்து, ஆலோசனைகளைப் பெறுவது சிறந்தது என்றும், நோயின் தன்மை அதிகரிக்கும் வரையில் பார்த்துக்கொண்டிருக்க வேண்;டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal