‘புதிய வழமை’ என்பது, இப்போது பழக்கப்பட்டுப் போய்விட்டது. முன்னொரு காலத்தில், (வரலாற்றில் அவ்வாறுதான் குறிக்கப்படும்) மனிதர்கள் நேருக்கு நேரே சந்திக்கும் போது, “நலமாக இருக்கிறீர்களா?” என்ற நலன்விசாரிப்புடன் உரையாடல் தொடங்கும். இப்போது, இந்த உரையாடல் தொலைபேசி வழியே நடக்கிறது, “தடுப்பூசி போட்டுவிட்டீர்களா?” என்ற நலன் விசாரிப்புடன்! காலங்கள் மாறிவிட்டன; ஆனால், அனைத்தும் மாறிவிடவில்லை என்பதை, தடுப்பூசிகளை மையமாக வைத்து, நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலமும் அதன் அரசியலும், வெட்டவெளிச்சமாக்கி உள்ளன. சில நாடுகள், தங்கள் தேவையை விடப் பன்மடங்கு அதிகமான தடுப்பூசிகளை வைத்திருக்கையில், இன்னும் சில நாடுகள், ...
Read More »செய்திமுரசு
கொவிட் – 19 தடுப்பூசி வழங்கல் குறித்து அறிக்கை கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு
கொவிட் – 19 தடுப்பூசி வழங்கல் தொடர்பில் முறையான செயற்திட்டமொன்றைத் தயாரித்து அதனைப் பகிரங்கப்படுத்துவதுடன் எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அதுகுறித்து தமக்கு அறியத்தர வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் வலியுறுத்தியுள்ளது. கொவிட் – 19 தடுப்பூசி வழங்கலில் முன்னுரிமை அளித்தல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, பல்வேறு நெருக்கடிகள் ...
Read More »கிளிநொச்சி சாந்தபுரம் கிராமம் முடக்கப்பட்டது
கிளிநொச்சியில் சாந்தபுரம் கிராமம் நேற்று தொடக்கம் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மை நாட்களாக அப்பகுதியில் தொற்றாளர்கள் அதிகரித்து வந்த சூழ்நிலையிலேயே அப்பகுதி முடக்கப்பட்டது. சாந்தபுரம் கிராமத்தில் 780 குடும்பங்களைச் சேர்ந்த 2428 பேர் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »உலக நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை எதிர்க்க வேண்டும்!
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது பல நாடுகள் அந்த நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க விரும்பின. அவற்றில் ஒன்று ஆஸ்திரேலியா. சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது பல நாடுகள் அந்த நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க விரும்பின. அவற்றில் ஒன்று ஆஸ்திரேலியா. நோய்த்தொற்று உருவானது குறித்து சீனாவிடம் விசாரணை நடத்த ஆஸ்திரேலியா தொடர்ந்து வற்புறுத்தியது. அப்போது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இரு நாடுகள் ...
Read More »அவுஸ்திரேலியாவின் செல்வந்தர்களின் பட்டியலில் இடம்பிடித்த தமிழர்
அவுஸ்திரேலியாவின் முன்னணி நிதி ஆய்வு ஊடகமான (Financial Review) பட்டியல்படுத்தியுள்ள இருநூறு செல்வந்தர்களின் பட்டியலில் தமிழர் ஒருவர் இடம்பிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவிலிருந்து 1970-களில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து கட்டுமான துறையில் செல்வந்தராக திகழும் மகா சின்னத்தம்பி Financial Review பட்டியல்படுத்தியுள்ள அவுஸ்திரேலியாவின் செல்வந்தர்களின் பட்டியலில் 64 ஆவது நபராக இடம்பிடித்துள்ளார். Financial Review பட்டியல்படுத்தியுள்ள குறித்த நிதி ஆய்வு நிறுவனம் இருநூறு செல்வந்தர்களின் பட்டியலில் மகா சின்னத்தம்பி 64 ஆவது நபராக இடம்பெற்றுள்ளதுடன்,இவரின் சொத்துப்பெறுமதி 1.78 பில்லியன் டொலர்கள் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது. ...
Read More »கனடாவில் பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள்
ஆரம்பத்தில் பள்ளியை நடத்தியபோது பழங்குடி மக்களின் குழந்தைகள் கொல்லப்பட்டோ அல்லது வேறு வகையிலோ உயிரிழந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை கண்டுபிடித்து வட அமெரிக்கா, தென் அமெரிக்க கண்டங்களில் குடியேறினார்கள். அப்போதே அந்த நாடுகளில் பூர்வ குடிமக்கள் ஏராளமானோர் வசித்து வந்தனர். அவர்கள் நாளை பிரச்சினை ஏதும் செய்துவிடக் கூடாது என்பதற்காக அந்த மக்களை ஐரோப்பியர்கள் இனப்படுகொலை செய்தனர். இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனால் அமெரிக்க கண்டங்களில் பல இனங்கள் வேரோடு அழிந்தன. இதேபோலத்தான் கனடா ...
Read More »யாழ். பல்கலை ஆங்கில விரிவுரையாளர் கொரோனாவுக்குப் பலி
யாழ். பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிஆர் சோதனையில் விரிவுரையாளர் ஸ்ரீரஞ்சினிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமாகியுள்ளார்.
Read More »மிக அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி
பயணத் தடையின்போது மிக அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்க வடக்கு மாகாண கொரோனாத் தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். வடக்கு மாகாண கொரோனா தடுப்புத் செயலணியின் கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாண கொரோனாத் தடுப்பு செயலணியினுடைய விசேட கூட்டம் இன்று (நேற்று) காலை ஆளுநர் தலைமையில் சூம் செயலி மூலம் இடம்பெற்றிருந்தது. தற்போதுள்ள மாகாண நிலைமைகள், ...
Read More »கிளிநொச்சியில் இரு நாட்களில் 64 பேருக்கு கொவிட் தொற்று
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினமும் நேற்றும் வெளிவந்த பி.சி.ஆர். முடிவுகளின்படி 64 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை, அறிவியல் நகரில் உள்ள பழச்சாறு உற்பத்தி நிறுவனம் மற்றும் சாந்தபுரம் கிராமத்திலேயே இந்தத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் தொற்று ஏற்படுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் சுகாதார நடைமுறை களைக் கவனத்தில் எடுத்து நடந்து கொள்ளாதவர்கள் என்றே கூறப்படுகின்றது. நாளுக்குநாள் அதிகரித்துச் செல்லும் தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் சுகாதார விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Read More »மார்க்சிய தத்துவத்தை செழுமைப்படுத்தும் சீனக்குணவியல்புகளுடனான சோசலிசம்
கொழும்பு, (சின்ஹுவா ) சீனக்கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த 100 ஆண்டுகளில் சாதித்த சீனாவின் அபிவிருத்தி மூலமாக மாரக்சிய தத்துவத்துக்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்கிறது என்று இலங்கையின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் டியூ குணசேகர கூறுகிறார். ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளளளர் குணசேகர சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு சீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவாவுக்கு வழங்கிய நேர்காணலில் சீக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளை பாராட்டியிருக்கிறார். அபிவிருத்தியடைந்த நாடுகளினதும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளினதும் அனுபவங்களில் இருந்து ...
Read More »