சிறிலங்கா சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்குச் சுதந்திரமில்லாத இன்றைய நாளைக் கருநாளாக அனுஷ்டிக்குமாறும் அன்றைய தினம் போராட்டங்களை நடாத்துமாறும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய பல அரசியல் கட்சிகளும் இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரி நாள் என்றும் வடக்கு கிழக்கில் போராட்டங்களை நடாத்தும் மக்களுடன் தாமும் இன்று இணைந்து போராட்டங்களை நடாத்துவதாகவும் அறிவித்துள்ளன. இவ்வாறானதொரு நிலையிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் உள்ளும் கரிநாள் எனக் குறிப்பிடப்படும் கறுப்புக் கொடிகளும் தொங்கவிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .
Read More »செய்திமுரசு
சர்வதேச உறவுகளுக்கான நிலையம் ஒன்றை ஆரம்பித்துள்ள மகிந்த!
எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்துவதற்கு சர்வதேச உறவுகளுக்கான நிலையம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். சிறிலங்கா அதன் சர்வதேச உறவுகளை எவ்வாறு சிறந்தமுறையில் வலுப்படுத்துவது என்பது தொடர்பில் கற்கைநெறிகளையும் ஆராய்ச்சிகளையும் சர்வதேச உறவுகளுக்கான மகிந்த ராஜபக்ச நிலையம் நடத்தும் என்று எதிர்க்கட்சி தலைவரின் மூத்த புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ருவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். நிலையத்தின் செயலாளராக ஜானக நிமலச்சந்திர நியமிக்கப்பட்டிருக்கிறார். சிறிலங்காவின் இறைமையையும் சுயாதிபத்தியத்தையும் மனதிற்கொண்டு பிராந்தியத்தில் உள்ள பங்காளர்கள் ...
Read More »கூட்டுஒப்பந்தத்திற்குப் பின் உருவாகியுள்ள எதிர்ப்புகள்!
தோட்டத்தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்த விவகாரம் இன்னும் நீறுபூத்த நெருப்பாக கணன்று கொண்டிருக்கிறது. முதல் தடவையாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை தொழிற்சங்க கூட்டமைப்பு தவிர்த்துள்ளது. இரண்டு தொழிற்சங்கங்கள் மட்டுமே கைச்சாத்திட்டுள்ளன. மட்டுமல்லாது சில திருத்தங்களுடன் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத ஏனைய மலையக தொழிற்சங்கங்களைப்பற்றி இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கமும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தமது தரப்பில் பேச்சுக்களில் ஈடுபட்ட ஒரு தொழிற்சங்கம் கூட்டு ஒப்பந்தத்தை புறக்கணித்தமை பற்றி ...
Read More »விமான நிலையத்தை புகைப்படம் எடுத்த நால்வர் கைது!
ட்ரோன் கமராவை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை புகைப்படம் பிடித்தமைக்கா நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நால்வரும் மாலைத்தீவை நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்த காவல் துறையினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத வௌ்ளப் பெருக்கு!
அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் கிழக்கு அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பிராந்தியத்தில் எதிர்வரும் நாட்களிலும் கடும் மழை பெய்யும் என்று அதிகாரிகள் இன்று எதிர்வு கூறியுள்ளனர். கரையோர நகரமான டவுன்ஸ்வில்லேயில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் வேறிடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பிராந்தியத்தில் பருவப் பெயர்ச்சி மழை கடும் தாக்கத்தை ஏற்படுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. Townsville பகுதியில் 150 மில்லிமீற்றர் தொடக்கம் 200 மில்லிமீற்றர் வரை மழை எதிர்பார்க்கப்படுவதாகவும், இது ...
Read More »பாகிஸ்தானுக்கு சீனா ரூ.17,750 கோடி நிதி
நெருக்கடியில் தத்தளித்து வருகிற பாகிஸ்தானுக்கு சீனா ரூ.17 ஆயிரத்து 750 கோடி நிதி வழங்குகிறது. பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பிடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், நெருங்கிய நட்பு நாடான சீனாவுக்கு சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங், பிரதமர் லீ கெகியான் உள்ளிட்டவர்களை சந்தித்தார். அப்போது இவ்விரு நாடுகள் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதைத் தொடர்ந்து ...
Read More »மாணவர்களின் சுதந்திரதின எதிர்ப்பு போராட்டத்துக்கு தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவு!
சிறிலங்காவின் சுதந்திரதினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த போதும் அதன் பலாபலன்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை. மாறாகத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட தொடர்ந்து வந்த பாராளுமன்றங்களினால் பல்வேறு அடக்குமுறைகளே கட்டவிழ்த்து விடப்பட்டன. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற யுத்தத்தில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன ...
Read More »ஆபத்தை எதிர்கொள்கிறதா ஊடகவியல்?
உலகளாவிய ரீதியில், ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில் கவலைதரும் வாரமாக, கடந்த வாரம் அமைந்திருந்தது. இணையத்தள உலகில் கொடிகட்டிப் பறந்த பல ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர், கடந்த வாரம் நீக்கப்பட்டிருக்கின்றனர். இணையத்தளங்களைக் கேளிக்கைக்காகப் பயன்படுத்தும் பலருக்கும், பஸ்ஃபீட் இணையத்தளம் தெரிந்திருக்கும். பூனைக் குட்டிகளின் புகைப்படங்களையும் நகைச்சுவையான புதிர்களையும் பகிர்ந்து, இளைஞர்களிடத்தில் நற்பெயரைப் பெற்றுக்கொண்ட பஸ்ஃபீட், காத்திரமான ஊடகவியலிலும் பின்னர் ஈடுபட்டது. குறிப்பாக, புலனாய்வுச் செய்தியிடல் தொடர்பில் விருதுகளை வென்ற ஊடகமாக அது மாறியிருந்தது. ஆனால் இப்போது, பஸ்ஃபீட், ஹஃபிங்டன் போஸ்ட் உள்ளிட்ட இணைய ஊடகங்கள் பல, ...
Read More »டிரம்ப் – கிம் வியட்நாமில் சந்திக்க திட்டம்!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பு வியட்நாமில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர்பதற்றம் நிலவியது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், ...
Read More »இலங்கையைச் சுற்றி சக்கர நாற்காலியில் பயணம்!
வவுனியாவைச் சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட முகமட் அலி என்பவர் இன நல்லிணக்கத்தையும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை வலியுறுத்தியும், சக்கர நாற்காலியில் சுற்றிவரும் இலங்கையைப் பயணத்தை இன்று (02.02) வவுனியா புதிய பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பித்தார். வவுனியா சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியிருந்தனர். சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் சம்பிரதாயபூர்வமாக முகமட் அலியின் நல்லிணக்க பயணத்தை ஆரம்பித்து வைத்திருந்தார். முகமட் அலி இலங்கை மின்சாரசபையில் பணியாற்றியபோது ஏற்பட்ட ...
Read More »