அவுஸ்திரேலியாவில் புற்றுநோயால் அவதிபட்டு வந்த தாயின் வலிகளை பார்க்க முடியாமல் அவதிப்பட்ட மகள்கள், அவருக்கு சிரமம் இல்லாமல் விடை கொடுத்திருக்கும் சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கெர்ரி ராபர்ட்சன்(61). இவருக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்த வந்த போதும், எலும்புகள், நுரையீரல், கல்லீரல், இதயம் என அனைத்துப் பாகங்களுக்கு படிப்படியாக புற்றுநோய் பரவியது இதன் காரணமாக உடல்வலியால் மிகக்கடுமையான துன்பத்தை அனுபவித்து வந்தார். தொடர்ந்து மேற்கொண்டு வந்த கீமோதெரபி, லேசர் ...
Read More »செய்திமுரசு
காஸ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்- ஐநா ஆழ்ந்த கவலை
காஸ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐநா இதன் காரணமாக மனித உரிமை நிலை மோசமடையலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஓளிநாடாவில் ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். காஸ்மீரில் சில நாட்களிற்கு முன்னர் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மனித உரிமை மீறல்களை அதிகரிக்கலாம் என நாங்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். உடன்படுவதற்கு மறுப்பவர்களை அடக்குவதற்காக இந்திய அதிகாரிகள் தொலைத்தொடர்பு வலையமைப்புகளை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முடக்கிவந்தமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியில் ...
Read More »அமைச்சரவைத் தீர்மானங்கள் !
கடந்த 2019.08.06 செய்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, 01. இலங்கை அரசாங்கத்திற்கும் நேபாள அரசாங்கத்திற்கும் இடையில் விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புதிய தயாரிப்புத் துறையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை (நிகழ்ச்சி நிரலில் 8 ஆவது விடயம்) சமத்துவ அடிப்படையிலும் பரஸ்பர நன்மைகளை அடிப்படையாக கொண்டும் விஞ்ஞான தொழில்நுட்பம் புதிய உற்பத்தி தயாரிப்புத் துறையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கத்திற்கும் நேபாளத்திற்கும் இடையில் விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புதிய தயாரிப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்காக அமைச்சரவை அந்தஸ்து ...
Read More »த.தே. கூ.வினால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை!
போர் முடிந்த பின்னர் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “யாரும் கூறாமலேயே 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் எந்தவொரு அரசியல் கைதியையும் ...
Read More »கோத்தபாய களமிறங்கினால் போட்டியாளராக பொன்சேகா!
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களமிறக்கப்பட்டால் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெல்லக்கூடிய முழுத் தகுதியும் சகல வல்லமையும் முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கே உண்டு. எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சரத் பொன்சேகாவைக் களமிறக்கவேண்டும்.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் சிறிலங்கா பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர் அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள். ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...
Read More »தமிழர் வரலாற்றை பறைசாற்றும் வகையில் மீண்டுமோர் ஆதாரம் கண்டுபிடிப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் வெலிக்கந்த பிரதேச செயலக எல்லைகுட்பட்ட பழம்பெரும் பிள்ளையார் ஆலயமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயம் மட்டக்களப்பு வெலிக்கந்தையிருந்து வடமுனைக்கு செல்லும்போது கிழக்கே 8 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இதனை மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் ஸ்ரீ ரமண மகரிசி நற்பணி மன்றத்தினர் இவ்வாலயம் சம்மந்தமான வரலாற்று பொக்கிஷங்களை தேடித்தொகுத்து ஆவணப்படுத்தி ஆலயத்தைக் கண்டு பிடித்துள்ளனர். 1900 ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் தம்மங்கடவையிலிருந்து வந்தாறுமூலை வரையான போக்குவரத்து பாதையில் மாந்திரை ஆற்றங்கரையில் மதுரை மரத்தின் கீழ் இந்துக்களால் வைத்து வளிபடப்பட்ட ...
Read More »கரன்னாகொட, ரோஷான் குணதிலக்கவுக்கு பதவி உயர்வு!
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் விமானப்படைத் தளபதியான ஏர் சீஃப் மார்ஷல் ரோஷான் குணதிலக்க ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அட்மிரல் வசந்த கரன்னகொட 2005 முதல் 2009 வரை கடற்படைத் தளபதியாகவும், ஏர் சீஃப் மார்ஷல் ரோஷான் குணதிலக்க 2006 முதல் 2011 வரை விமானப்படைத் தளபதியாகவும் பணியாற்றினார். பதவி உயர்வு தொடர்பான கூடுதல் வர்த்தமானி அறிவிப்பு நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
Read More »தாஜுதீன் கொலைக்கான ஆதராங்களை மறைத்த அதிகாரிக்கு எதிராக குற்றப்பதிவு!
முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகரவுக்கு எதிராக சட்டமா அதிபர், கொழும்பு உயர் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்துள்ளார். றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலைக்கான ஆதராங்களை மறைத்து வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே ஆனந்த சமரசேகரவுக்கு எதிராக சட்டமா அதிபர் இவ்வாறு குற்றச்சாட்டை தாக்கல் செய்துள்ளார்.
Read More »சுஷ்மா சுவராஜ் வாழ்க்கை வரலாறு அரசியல் பயணம்…
முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜ் (67) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இந்தியாவின் பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். சுஷ்மா சுவராஜ் இந்திய வெளியுறவுத் துறை மந்திரியாக 26 மே 2014 முதல் 29 மே 2019 வரை பதவியில் இருந்தார். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார் சுஷ்மா சுவராஜ். நாடாளுமன்ற உறுப்பினராக ஏழு ...
Read More »இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் காலமானார்!
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது. உடல் நலக்குறைவு காரணமாக சுஷ்மா 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இந்திரா காந்திக்குப் பிறகு இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் சுஷ்மா ஸ்வராஜ் ஆவார். அவர் கடைசியாக பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில், “நன்றி பிரதமர். மிகவும் நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன்” என்று காஷ்மீர் ...
Read More »