ஆஸ்திரேலியாவில் நோயை பரப்பும் உணவு பொருளை எடுத்து வந்ததாக கூறி வியட்நாம் பெண்ணை உடனடியாக அதிகாரிகள் நாடுகடத்தினர். தென்கொரியா, கிழக்கு திமோர் உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. இதனால் பிற ஆசிய நாடுகள் தங்கள் நாட்டில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியா அரசு இந்த விவகாரத்தில் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. பிற நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே நாட்டில் ...
Read More »செய்திமுரசு
பேரம்பேசும் பலத்தை இழந்தமையால் பௌத்த மயமாக்கல்!
ஈழத்தமிழர்களாகிய நாம் எமக்குள் பல்வேறு கட்சிகளாக பிளவுபட்டு எமது பேரம் பேசும் பலத்தை இழந்துவிட்ட நிலைமையை இலங்கையில் காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வரும் தலைவர்கள் தமக்கு சாதகமாக கையாண்டு வடக்கு–கிழக்கில் சிங்கள குடியேற்றங்களையும் பௌத்த மயமாக்கல்களையும் அரங்கேற்றி வருகின்றனர் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் குறித்து தமிழர் தரப்பில் பொது நிலைப்பாடொன்றினை ஏற்படுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், அந்த ...
Read More »யாழ். பலாலி சர்வதேச விமானநிலையம் திறப்பு!
யாழ். பலாலி சர்வதேச விமானநிலையம் இன்று (17) திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட அதிகாரிகள் சிலர் கலந்துகெண்டிருந்தனர்.இந்நிலையில் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு முதலாவது விமான சேவை இன்று முதல் ஆரம்பாமாக உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து விமான சேவைகள் இடம்பெறுமென போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »உருகும் பனிமலைகள்… கொதிக்கும் பெருங்கடல்கள்!
உலக வெப்பமயமாதல் பற்றியும், பருவநிலை மாறுதல்கள் பற்றியும் சர்வதேச அளவில் கூடிக் கூடிப் பேசிக்கொண்டே இருக்கிறோம். சுற்றுச்சூழல் மீதான விழிப்புணர்வு மட்டுமல்ல, பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் உடனடித் தேவை. கரிப்புகை வெளியீட்டையும் பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தையும் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். அனைத்து நாடுகளும் ஒன்றுசேர்ந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால், பெருங்கடல்களின் நீர்மட்டம் 2100-க்குள் மேலும் 40 செமீ உயரும். இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டினால் 80 செமீ வரை நீர்மட்டம் அதிகரிக்கும். 1900-களிலிருந்து கடல் நீர்மட்டம் சராசரியாக16 செமீ உயர்ந்துள்ளது. பனி உறைந்து காணப்படும் ...
Read More »பிரபஞ்சன்: காலம் கலை கலைஞன்!
பிரபஞ்சனின் வாசிப்பும் எழுத்தும் இறுதிவரை சற்றும் சோராதது. நூல்களை அறிமுகப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு தமிழ்ச் சூழலில் மிகவும் முக்கியமானது. மக்கள் டி.வி.யில் பணிபுரிந்த காலத்திலும் தினசரி காலை ஒளிபரப்பில் புத்தகங்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார். நூல் வெளியீட்டு விழாக்களுக்கு அதிகம் அழைக்கப்பட்டவரும் அவராகவே இருக்கக்கூடும். பக்க மற்றும் நேர வரையறைக்கேற்ப, சுருக்கமாகவும் விஸ்தாரமாகவும் புத்தகத்தை அவரால் அறிமுகப்படுத்த முடிந்தது. அர்ப்பணிப்புமிக்க இந்த நெடும் பயணத்தில், அவர் எண்ணற்ற நூல்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியபடி இருந்தார். இச்செயல்பாடு, மெல்ல மெல்ல புதிய தலைமுறைப் படைப்பாளிகளிடம் அவர் மீதான ஓர் ...
Read More »இறந்த குழந்தையை புதைக்க தோண்டிய குழிக்குள் உயிருடன் மீட்கப்பட்ட பிறிதொரு குழந்தை!!
இறந்த குழந்தையை புதைப்பதற்காக நிலத்தில் குழி தோண்டிய போது , உள்ளே உயிரோடு குழந்தை ஒன்று இருந்தமை மண்ணை தோண்டியவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்தவர் ஹிதேஷ் குமார் சிரோகி. இவர் மனைவி வைஷாலி. பரேலியில், பொலிஸில் பணியாற்றுகிறார். கர்ப்பிணியான அவருக்கு 7 மாதத்தில் பிரசவ வலி ஏற்பட்டது.இந்நிலையில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவரக்கு குழந்தை இறந்து பிறந்தது. இதையடுத்து அந்த குழந்தையை புதைப்பதற்காக இடுகாட்டுக்குச் சென்று அங்கு ஒரு இடத்தில் ...
Read More »கோட்டாபயவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலை நிர்மாண பணிகளின்போது அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் வழக்கு எதிர்வரும் 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிபதிகளான சம்பத் விஜேரத்ன, சம்பத் அபேகோன், சம்பா ஜானகி ஆகியோரின் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு ...
Read More »யாழில் 17 ஆம் திகதி சர்வதேச விமான நிலையம் திறப்பு!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. நிர்மானப்பணிகள் இடம்பெற்றுவரும் யாழ்ப்பாணம் விமான நிலையத்தை பார்வையிடுவதற்காக அங்கு சென்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ரகவனுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் விமான நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது. விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் இந்தியாவுக்கான விமான சேவைகள் முதலில் இடம்பெறவுள்ளன.
Read More »அவுஸ்ரேலியாவில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ரூ.34 கோடி இழப்பீடு!
கொலை வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு 7 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் இழப்பீடாக வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆஸ்திரேலியாவில் மத்திய காவல் துறை படையின் துணை கமிஷனராக இருந்து வந்த கெலின் வின்செஸ்டர், கடந்த 1989-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது கொலை ஆஸ்திரேலிய நாட்டையே உலுக்கியது. இந்த கொலை வழக்கில் டேவிட் ஈஸ்ட்மேன் என்பவர் கைது செய்யப்பட்டு, 1995-ம் ஆண்டில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் டேவிட் ஈஸ்ட்மேன் தனக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இல்லையென்று தொடர்ந்து கூறி வந்தார். அவர் ...
Read More »ஸ்டாக்ஹோம் பேச்சுவார்த்தையிலும் முட்டுக்கட்டை!
அணு ஆயுத திட்டங்களை கைவிடுவது தொடர்பாக, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க மற்றும் வடகொரிய அரசுகளின் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தையிலும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. ஆனாலும் இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாகவும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேநேரம், அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள வடகொரியா, இது தொடர்பான நடவடிக்கையை கைவிடுவதாகவும் தெரிவித்துள்ளது. இருதரப்பும் இருவேறு கருத்துகளை வெளியிட்டிருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் முதல் ...
Read More »