நுட்பமுரசு

வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்புவது எப்படி?

வாட்ஸ்ஆப் மூலம் பணம் பிறருக்கு அனுப்பவும் முடியும் பிறரிடமிருந்து பெறவும் முடியும். அது எப்படி என்பதை கீழே காண்போம். ஆப்பிள், கூகுள், சாம்சங் போன்ற நிறவனங்கள், மொபைல் வேலெட்களை ஆப்பிள் பே, கூகுள் வேலெட் மற்றும் சாம்சங் பே என பணத்தை டிஜிட்டல் வடிவத்தில் பரிமாற உதவுகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்ஆப் மூலமும் பணம் அனுப்பும் புதிய வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. * கூகிள் ப்ளே ஸ்டோரில் ப்ரீசார்ஜ் ஆப்பை (Freecharge App) பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் நம் மொபைல் எண் கொண்டு ...

Read More »

‘மினிமெட் 670ஜி’ -சர்க்கரை நோயாளிக்கு உற்ற தோழன்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கண்காணிப்பது ஒரு பெரிய வேலை. அவர்களது விரலில் ஊசியைக் குத்தி, ரத்தத்தை எடுத்து, சர்க்கரை அளவை பார்க்கும் வலியும், சலிப்பும் மிக்க முறைதான், இப்போது பரவலாக இருக்கிறது. இந்த முறைக்கு பல மாற்று முறைகள் வந்தாலும், அவை பரவலாக பயன்பாட்டுக்கு வரவில்லை. சமீபத்தில், ‘செயற்கை கணையம்’ போல செயல்படும் ஒரு கருவிக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி வழங்கியிருக்கிறது. ‘மெட்ரானிக்’ நிறுவனம் தயாரித்துள்ள, ‘மினிமெட் 670ஜி’ என்ற இந்த சிறிய கருவியை, ...

Read More »

செவ்வாய் செல்லும் ரோபோவுக்கு 4.98 கோடி ரூபாய் பரிசு

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா நடத்திய ரோபோ தயாரிக்கும் போட்டியில், முதல் பரிசு பெற்ற ரோபோவை உருவாக்கிய பல்கலைக்கழக மாணவர்கள் அணிக்கு, முதல் பரிசாக, 4.98 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. செவ்வாய் போன்ற கிரகங்களை ஆராய்வதற்கும் அவற்றின் மேடு பள்ளங்களில் பயணித்து, அங்குள்ள கல், மண் மற்றும் தாதுக்கள் போன்றவற்றை பத்திரமாக எடுத்து ஆராயவும் உதவும் சாமர்த்தியமான ரோபோவை வடிவமைக்க, நாசா ஒரு போட்டி நடத்தியது. 2012ம் ஆண்டில் துவங்கி நடந்த பல கட்ட போட்டியில், அமெரிக்காவிலுள்ள மேற்கு வர்ஜீனியா பல்கலைக் கழகத்தின் ...

Read More »

கூகுள் நிறுவனத்தின் முதலாவது ஸ்மார்ட் போன் பிக்ஸல் அறிமுகமானது

கூகுள் நிறுவனத்தின் முதலாவது ஸ்மார்ட் போன் பிக்ஸல் நேற்று(5) அறிமுகமானது. கூகுள் நிறுவனம் மோடோரோலா மற்றும் நெக்சஸ் மாடல்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது முயற்சியாக பிக்சல் போன்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. ஐபோன் மற்றும் கேலக்ஸி எஸ்-வகைகளுக்கு போட்டியாக சந்தையில் இந்த போன்கள் களமிறங்கியுள்ளது. சிறப்பு அம்சங்கள்:- குரோம்கேஸ்ட்: பென்டிரைவ் போல காட்சியளிக்கும் இந்த கருவியை யூ.எஸ்.பி., போர்ட்டில் மாட்டி நம் டி.வி., லேப்டாப், கம்யூட்டர்களில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை பயன்படுத்தலாம். ஹெட் செட்: 3.5 mm ஜெக் ...

Read More »

ஜப்பானில் ரோபோ குழந்தைகள்

மகப்பேறு இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்க ஜப்பானில் ‘ரோபோ’ குழந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் அதிக அளவில் ‘ரோபோ’ (இயந்திர மனிதன்) பயன்பாடு உள்ளது. அவை ஆஸ்பத்திரிகள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் என பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மகப்பேறு இல்லா தம்பதிகளின் குறையை போக்கவும், தனிமையில் இருப்பவர்களின் வெறுமையை தணிக்கவும் ‘ரோபோ’ குழந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு ‘கிரோபோ மினி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரோபோவை பியூமோனோரி கடயாகோ என்ற நிபுணர் வடிவமைத்துள்ளார். இந்த குழந்தை ரோபோ அழகாக கண் சிமிட்டுகிறது. ...

Read More »

வாகனங்களுக்கு மேலாக பயணிக்கும் பஸ் சீனாவில் பரீட்சார்த்தமாக இயக்கப்பட்டது

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வீதிக்கு மேலாக பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட நவீன பஸ் சீனாவில் நேற்றுமுன்தினம் பரீட்சார்த்தமாக இயக்கப்பட்டது. தரையிலிருந்து 2 மீற்றர் உயரத்தில் இந்த பஸ்ஸின் உடற்பகுதி காணப்படுகிறது. வீதிகளில் இரு மருங்களிலும் பதிக்கப்பட்ட விசேட தண்டவாளங்களின் மூலம் இந்த பஸ் பயணிக்கும். எனவே, இந்த பஸ்ஸின் அடியில் கார்கள் போன்ற 2 மீற்றருக்கு குறைந்த உயரம் கொண்ட ஏனைய வாகனங்கள் பயணம் செய்ய முடியும். இந்த பஸ்களில் மக்கள் பயணிப்பதால் வீதிகளின் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...

Read More »

கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த 34 அடி உயரம் கொண்ட மனிதநேய விளக்கு

குஜராத் மாநிலத்தில் நவராத்திரி திருவிழாவையொட்டி 34 அடி உயரத்துடன் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த ’மனிதநேய விளக்கு’ குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானியால் ஏற்றிவைக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவின்போது, ‘எழுச்சியான குஜராத்’ என்ற விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில், அம்மாநிலத்தில் நடைபெற்றுவரும் விழாவில் 34 அடி உயரம் கொண்ட மனிதநேய விளக்கை அகமதாபாத் நகரில் குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி நேற்றுமாலை ஏற்றிவைத்தார். ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உலோகத்தால் செய்யப்பட்ட இந்த விளக்கின் அடிப்பாகம் 15.8 அடி விட்டம் கொண்டதாகும். உலகின் ...

Read More »

அப்பிள் நிறுவனத்தின் அடுத்த முயற்சி

ஊடாடும் (Interactive) தொழில்நுட்பம் என்பது வழங்கப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப வருவிளைவுகளை (Output) தரக்கூடியதாக இருத்தல் ஆகும். இத் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு Game Of Thrones Book எனும் புத்தகத்தினை அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. Game Of Thrones Book ஆனது அமெரிக்காவினை சேர்ந்த George R.R. Martin எனும் எழுத்தாளரினால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதையாகும். இக் கதை உருவாக்கப்பட்டு இவ் வருடத்துடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதேவேளை இக் கதையினை அடிப்படையாகக் கொண்டு Game Of Thrones எனும் கணணி ...

Read More »

கூகுள் போட்டோஸ் அளிக்கும் புதிய வசதி

கூகுளின் ஒளிப்படம் மற்றும் வீடியோ சேமிப்புக்கான ‘கூகுள் போட்டோஸ்’ செயலியில் புதிய வசதிகள் அறிமுகமாகியுள்ளன. முதல் வசதி, ஒளிப்படங்களை எளிதாகப் பகிர்ந்துகொள்வதற்கானது. புதிதாக எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால், அந்தப் படங்களின் மீது தட்டினால் போதும், பகிர்ந்து கொள்வதற்கான வசதி தோன்றும். அவற்றிலிருந்து யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதைத் தேர்வு செய்தால் போதும். நண்பர்கள் கூகுள் போட்டோஸ் சேவையைப் பயன்படுத்தினால் அவர்களுக்குப் புதிய படத்திற்கான அறிவிப்பு வரும். மற்றவர்களுக்குக் குறுஞ்செய்தி அல்லது இமெயில் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். இரண்டாவது வசதி, பயனாளிகள் ...

Read More »

சீனாவின் பகோடா கோபுரம் கின்னஸ் சாதனை

மரத்தினால் ஆன அதிக உயரமுள்ள சீனாவின் ‘பகோடா’ கோபுரம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சீனாவின் கலாசார சின்னங்களில் ‘பகோடா’ என்ற மரத்தினால் ஆன கோபுரமும் ஒன்று. இக்கோபுரங்கள் வழிபாட்டு தலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சீனாவின் வடக்கு ஷான்ஸி மாகாணத்தில் உள்ள ‘பாக்யாங்’ கோவிலில் மிக உயரமான கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இது 1056-ம் ஆண்டில் லியாவோ ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. மரத்தினால் ஆன இக்கோபுரம் 67.31 மீட்டர் உயரம் கொண்டது. இதில் உள்ள மரக்கட்டைகள் 3 ஆயிரம் கன மீட்டருடன் 2600 டன் எடை கொண்டதாகும். எனவே, ...

Read More »