நுட்பமுரசு

கேலக்ஸி நோட் 7 வெடித்ததற்கு காரணம் சாம்சங்கிற்கே தெரியாது!

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் கேலக்ஸி நோட் 7 வெடித்துச் சிதறியதால் திரும்பப் பெறப்பட்டது. இன்று வரை இந்த போன்கள் வெடித்ததற்கான காரணம் சாம்சங்கிற்கே தெரியவில்லை. சாம்சங் நிறுவனத்தின் இந்த ஆண்டு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி நோட் 7 ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் வாடிககையாளர்களின் கேலக்ஸி நோட் 7 வெடித்து சிதறியது. செப்டம்பர் மாதம் நோட் 7 போனில் ஏதோ பிழை இருப்பதை சாம்சங் ஒப்புக் கொண்டு சுமார் 35 போன்கள் அதிக ...

Read More »

அதிநவீன ரோபோ செயற்கை கை

அதிநவீன ‘ரோபோ டிக்’ செயற்கை கையை ஜெர்மனி விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்ட சிலருக்கு கை செயல் இழந்து விடுகிறது. அவர்களுக்கு தோள்பட்டை வரை செயல்பாடு இருக்கும். அதற்கு கீழ் கை செயல்பாடு இழந்த நிலையில் இருக்கும். அவர்களுக்கு ‘ரோபோ டிக்‘ கை தயாரிக்கப்பட்டுள்ளது. செயலிழந்த கையில் கையுறை போன்ற எலக்ட்ரானிக் எந்திரம் பொருத்தப்படுகிறது. அது ‘ ரோபோ’ பணிகளை செய்து பாதிக்கப்பட்டவரின் கைகளில் நரம்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். அதன் மூலம் மூளை ...

Read More »

ஆளில்லா விமானம் மூலம் மனித ரத்தம் வினியோகம்

அமெரிக்காவில் ஆளில்லா விமானம் மூலம் மனித ரத்தம் வினியோகம் செய்யப்பட்டது. இந்த விமானங்கள் ரிமோட்கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது. எதிரி நாடுகளின் நிலைகளை உளவு பார்க்கவும், தீவிரவாதிகளை குண்டு வீசி அழிக்கவும் ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லாமல் தானாக இயங்கும் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. அதை தொடர்ந்து நீண்ட தூரங்களுக்கு பீட்சா மற்றும் மளிகை சாமான்கள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்ய அவை உபயோகப்படுத்தப்பட்டன. தற்போது மனிதர்களின் உயிர்காக்கும் ரத்தத்தை சுமந்து சென்று பத்திரமாக சேர்க்கும் பணியை ஆளில்லா விமானங்கள் செய்து வருகின்றன. போக்குவரத்து வசதி எதுவும் இல்லாத மிகவும் ...

Read More »

‘ஸ்மார்ட்’ அப்பிள் கண்ணாடி!

ஸ்மார்ட்போன்கள் வரிசையில் ‘ஸ்மார்ட் கண்ணாடிகள்’ வந்திருப்பது உங்களுக்குத் தெரியுமா? சந்தேகம் எனில் இணையத்தில் ஸ்மார்ட் கண்ணாடிகள் என ஆங்கிலத்தில் தேடிப்பாருங்கள், வரிசையாக ஆண்ட்ராய்டு கண்ணாடிகள் தொடர்பான முடிவுகளாக வந்து நிற்கும். எல்லாமே வழக்கமான முகம் பார்க்கும் கண்ணாடியை ‘ராஸ்பெர்ரி பை’ எனும் சின்ன கம்ப்யூட்டர்கள், ஆண்ட்ராய்டு ‘இன்டர்ஃபேஸ்’ தொழில்நுட்பம் கொண்டு ஸ்மார்ட் கண்ணாடியாக மாற்றப்பட்ட‌வை. இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில் நேரம் பார்க்கலாம், வானிலை அறியலாம். இன்னும் பல விஷயங்களைச் செய்யலாம். இப்போது இந்த வரிசையில் ஆப்பிள் கண்ணாடியும் அறிமுகமாயுள்ளது. இந்தக் கண்ணாடி ஆப்பிள் நிறுவனத்தின் ...

Read More »

பழைய ஒளிப்படங்களைப் பாதுகாக்க

ஸ்மார்ட்போன் யுகத்தில் ஒளிப்படங்களை எடுப்பதும், பகிர்ந்துகொள்வதும் எளிதாக இருக்கிறது. எல்லாம் சரி, பழைய காலத்தில் எடுத்த ஒளிப்படங்களை என்ன செய்வது? அவற்றை டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பதுதானே சரியாக இருக்கும். இதற்காகப் பழைய ஒளிப்படங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவுக்கு மாற்றலாம். ஆனால் இதற்குக் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். இந்தப் பணியை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள கூகுள் புதிதாக ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது. ‘போட்டோஸ்கேன்’ எனும் அந்தச் செயலி மூலம் ஒருவர் தன்னிடம் உள்ள ஒளிப்படங்களை எளிதாக ஸ்கேன் செய்துகொள்ளலாம். இந்தச் செயலியைத் திறந்து, வீட்டில் ...

Read More »

4000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்

ஜியோனி நிறுவனத்தின் GN5005 எனும் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் சீனாவின் சான்றளிக்கும் இணையத்தளம் வாயிலாக கசிந்திருக்கிறது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்திருக்கிறது. சீனாவின் சான்றளிக்கும் இணையத்தளமான Teanaa ஜியோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது. புதிய ஜியோனி GN5005 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் எல்டிஇ வசதி வழங்கப்பட்டுள்ளது. 5.0 இன்ச் 1280×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட TFT டிஸ்ப்ளே, 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 3 GB ரேம், 16GB இன்டர்னல் மெமரி, மற்றும் மெமரியை கூடுதலாக ...

Read More »

சாம்சங் S7 போன்றே காட்சியளிக்கும் கேலக்ஸி A5

தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் கேலக்ஸி A5 (2017) ஸ்மார்ட்போன் ஆனது பார்க்க கேலக்ஸி S7 போன்றே காட்சியளிக்கும்படி வடிவமைக்கப்பட இருக்கிறது. 2017-ம் ஆண்டு வெளியிடப்பட இருக்கும் சாம்சங் கேலக்ஸி A5 (2017) ஸ்மார்ட்போனின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போனின் வை-பை சான்றிற்கான சோதனை நடைபெற்றது. இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போனாக அறியப்படும் கேலக்ஸி A5 2016 பதிப்பு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனும் ஜனவரி மாதத்திலேயே ...

Read More »

அப்பிள் பாதுகாப்பு வளையத்தை ‘வளைத்த’ கேரள வாலிபர்

அப்பிள் நிறுவன கருவிகள் பெரும்பாலும் அதன் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிகம் பெயர் போன ஒன்றாக இருந்து வந்தது. இந்நிலையில் ஆப்பிள் பாதுகாப்பு அமைப்பினை கேரள வாலிபர் ஒருவர் ஹேக் செய்திருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த பொறியியல் மாணவரான ஹேமந்த் ஜோசப் என்பவர் ஆப்பிள் நிறுவனத்தின் அதிக பாதுகாப்பு அம்சம் கொண்ட ஆக்டிவேஷன் லாக்கினை ஹேக் செய்திருக்கிறார். ஆப்பிளின் ஐபோன், ஐபேட், ஐபாட் டாச் மற்றும் ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட கருவிகள் திருடு போனாலோ அல்லது தொலைந்து போனாலோ மற்றவர்கள் பயன்படுத்த முடியாதபடி இந்த ஆக்டிவேஷன் லாக் ...

Read More »

ஆயுத பேனா

அவசர கால ஆயுதமாகவும் இந்த பேனாவைப் பயன்படுத்தலாம். உறுதியான மூலப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு முனையில் பேனா, மற்றொரு முனையில் குத்தி உடைக்கும் கூர்முனையும் மடக்கும் கத்தியும் உள்ளது.

Read More »

கூகுள், தன், ‘குரோம்’ வலை உலாவியை மேம்படுத்தியுள்ளது

உலகெங்கும் திறன்பேசிகள் மூலமே பெரும்பாலானோர் இணையத்தை அணுகுகின்றனர். எனவே கூகுள், தன், ‘குரோம்’ வலை உலாவியை திறன்பேசிகளுக்காக மேம்படுத்தியுள்ளது. இப்போது திறன்பேசிக்கான குரோம், 15 சதவீதம் வேகமாக தரவிறக்கம் செய்கிறது. மேலும், திறன்பேசியின் மின் சக்தியை சிக்கனமாக செலவிடுகிறது. உதாரணமாக ஐபோன் இயங்குதளத்தில், 33 சதவீதம் வரை மிச்சம் செய்கிறது. காணொளி படத்துணுக்குகளை வேகமாக தரவிறக்கம் செய்வதோடு, தரவிறக்கம் செய்த காணொளிகளை இணைய இணைப்பு இல்லாமலேயே பார்க்கவும் குரோம் உதவும். ‘2ஜி’ போன்ற மந்தமான இணைப்புகளில், ஒரு இணைய தளத்தின் தேவையான தகவல்களை மட்டும் ...

Read More »