கேலக்ஸி நோட் 7 வெடித்ததற்கு காரணம் சாம்சங்கிற்கே தெரியாது!

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் கேலக்ஸி நோட் 7 வெடித்துச் சிதறியதால் திரும்பப் பெறப்பட்டது. இன்று வரை இந்த போன்கள் வெடித்ததற்கான காரணம் சாம்சங்கிற்கே தெரியவில்லை.

சாம்சங் நிறுவனத்தின் இந்த ஆண்டு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி நோட் 7 ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் வாடிககையாளர்களின் கேலக்ஸி நோட் 7 வெடித்து சிதறியது. செப்டம்பர் மாதம் நோட் 7 போனில் ஏதோ பிழை இருப்பதை சாம்சங் ஒப்புக் கொண்டு சுமார் 35 போன்கள் அதிக சூடானதால் பேட்டரி வெடித்ததாகவும், சில போன்களில் பேட்டரி தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட பிழை காரணமாக வெடித்ததாக சாம்சங் தெரிவித்தது.
கேலக்ஸி நோட் 7 போனில் நிர்ணயம் செய்யப்பட்டதை விட பெரியளவு பேட்டரி வழங்கயிதாலேயே பேட்டரிகள் வெடித்ததாக அமெரிக்க நுகர்வோர் பொருட்களின் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது. இதற்கு சாம்சங் அளித்த பதிலில் பேட்டரிகள் வெடித்ததன் காரணம் கண்டறியப்பட்டு விட்டது வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் பாதுகாப்பான போன்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.
சாம்சங் உறுதி செய்து வழங்கிய நோட் 7 போன்களும் வெடித்ததையடுத்து கேலக்ஸி நோட் 7 போன்களின் தயாரிப்பு பணிகளை அடியோடு நிறுத்திவிட்டு நோட் 7 போன்களை திரும்ப பெறுவதாக சாம்சங் அறிவித்தது. இந்நிலையில் நோட் 7 போன்கள் வெடித்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் ஏன் வெடித்தது என்ற காரணத்தை சாம்சங் ஆய்வாளர்களால் இன்னமும் கண்டறிய இயலவில்லை என கூறப்படுகின்றது. மேலும் பாதுகாப்பான கருவிகள் என சாம்சங் அறிவித்த ஸ்மார்ட்போன்களும் வெடித்ததற்கான காரணங்களும் தொடர்ந்து மர்மமாக இருப்பது சாம்சங் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து கவலை எழுப்புவதாக அமைந்துள்ளது.