அதிநவீன ‘ரோபோ டிக்’ செயற்கை கையை ஜெர்மனி விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்ட சிலருக்கு கை செயல் இழந்து விடுகிறது. அவர்களுக்கு தோள்பட்டை வரை செயல்பாடு இருக்கும். அதற்கு கீழ் கை செயல்பாடு இழந்த நிலையில் இருக்கும்.
அவர்களுக்கு ‘ரோபோ டிக்‘ கை தயாரிக்கப்பட்டுள்ளது. செயலிழந்த கையில் கையுறை போன்ற எலக்ட்ரானிக் எந்திரம் பொருத்தப்படுகிறது. அது ‘ ரோபோ’ பணிகளை செய்து பாதிக்கப்பட்டவரின் கைகளில் நரம்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். அதன் மூலம் மூளை மற்றும் கண்களின் செயல்பாடுகள் நடைபெறும். அதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் கை நல்ல நிலையில் செயல்படும்.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர் ஸ்பூன், முள் கரண்டி மற்றும் டீ கப் போன்றவைகளை நன்றாக வாழ்வில் பயன்படுத்த முடியும்.
இந்த அதிநவீன ‘ரோபோ டிக்’ கையை ஜெர்மனி விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். அந்த கருவி ஸ்பெயினில் 6 பேரிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
Eelamurasu Australia Online News Portal