அப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய ஐபோன் இரண்டு வித அளவுகளில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரீமியம் OLED ஐபோன் இரண்டு வித அளவுகளில் வெளியாகும் என்ற தகவல் சாம்சங் டிஸ்ப்ளே தயாரிப்பு பணிகள் நடைபெறும் A3 ஆலையில் இருந்து கசிந்துள்ளது. இதே ஆலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கான OLED பேனல்கள் தயாரிக்கப்படுகிறது. ஆகஸ்டு மாத இறுதியில் அப்பிள் ஐபோன்களுக்கான OLED-க்கள் முழுவீச்சில் தயாரிக்கப்படும் என தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே ஆலையில் ஐபோன்களுக்கென 5.8 மற்றும் 6.0 இன்ச் அளவுகளில் OLED-க்கள் ...
Read More »நுட்பமுரசு
டைப் செய்ய கீபோர்டு தேவையில்லை கண் அசைவே போதும்.!
சீனாவின் சாங்கிங் பல்கலைக்கழகம் மற்றும் சீன தேசிய நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பமையம் ஆகியவை இணைந்து ஒரு புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளன, இந்த தொழில்நுட்பம் அனைத்துவகையிலும் அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்துப் பகுதிகளிலும் பெரும்பாலும் டைப் செய்யப் பயன்படுகிறது, இதை மாற்றும் விதமாக இப்போது சீனாவின் சாங்கிங் பல்கலைக்கழகம் கண் தசைகளின் அசைவுகளை எலெக்ட்ரானிக் கட்டளைகளாக மாற்றும் ஒரு புதிய கண்ணாடிகளை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். தற்போது தொழில்நுட்பம் மிக விரைவாக வளரந்து வருகிறது என்பதற்க்கு விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இந்த கண் ...
Read More »மைக்ரோமேக்ஸ் செல்பி 2 அறிமுகம்
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய செல்பி 2 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் செல்பி 2 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் யு டெலிவென்ச்சர்ஸ் முன்னதாக யு பிரான்டிங் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. புதிய செல்பி 2 ஸ்மார்ட்போனில் 8 எம்பி சோனி IMX135 சார்ந்த செல்பி கேமரா, f/2.0 லென்ஸ் கொண்டுள்ளது. இத்துடன் முன்பக்க கேமராவில் ரியல் டைம் ...
Read More »திறன் மிக்க சூரிய ஒளி பலகை!
வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானியான மாத்யூ லம்ப், உலகின் அதி திறன் வாய்ந்த சூரிய ஒளிப் பலகையை உருவாக்கிஉள்ளார். சூரிய ஒளியை அதிக பட்சம் பயன்படுத்தி மின்சாரமாக மாற்றும் திறனில் இன்றைய உலக சாதனை 25 சதவீதம் தான். அதாவது, சூரிய ஒளியின் சக்தியில், 75 சதவீதம் வீணடிக்கப்படுகிறது.ஆனால், மாத்யூ உருவாக்கியுள்ள சூரிய ஒளிப் பலகை, சூரிய ஒளியின் திறனை, 44.5 சதவீதம் பயன்படுத்தி அதிக மின்சாரத்தை தயாரிக்கிறது. வழக்கமான சூரிய ஒளிப் பலகைகள் சூரிய ஒளிக் கற்றையில், நீள அலைவரிசை கொண்டவற்றை உள்வாங்கிக்கொள்வதில்லை. ஆனால், ...
Read More »காற்று – மின்சாரத்தில் உணவு தயாரிப்பு!
சர்வதேச அளவில் உணவு தட்டுப்பாடு அபாயம் உள்ள நிலையில் காற்று மற்றும் மின்சாரம் மூலம் உணவு பொருள் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். சர்வதேச அளவில் உணவு தட்டுப்பாடு அபாயம் உள்ள நிலையில் காற்று மற்றும் மின்சாரம் மூலம் உணவு பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. பின்லாந்தில் உள்ள வி.டி.டி. தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம், லபீர்னந்தா தொழில் நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இச்சாதனை புரிந்துள்ளனர். காற்றில் இருந்து கார்பன்டை ஆக்சைடை பிரித்து எடுத்து அதிலிருந்து புரோடீன் பவுடர் தயாரித்துள்ளனர். அதை மனிதர்கள் மற்றும் விலங்குகள் ...
Read More »மூன்று வித நிறங்களில் மோட்டோ ஜி5எஸ் பிளஸ்!
மோட்டோரோலாவின் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. மோட்டோரோலா மோட்டோ ஜி5எஸ் மற்றும் ஜி5எஸ் பிளஸ் விலை இணையத்தில் கசிந்தது. இதைத் தொடர்ந்து மோட்டோ ஜி5எஸ் பிளஸ் பிளாக், ரோஸ் கோல்டு மற்றும் சில்வர் என மூன்று நிறங்களில் வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. மூன்று மாடல்களின் புகைப்படங்களும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே வெளியான தகவல்களுக்கு ஏற்ப வளைந்த டூயல் கேமரா அமைப்பு ...
Read More »மடக்கும் உடற்பயிற்சி கருவி
வெளியூர் பயணங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி கருவி. உடற்பயிற்சியை முடித்துவிட்டு மடக்கி வைத்துக் கொள்ளலாம். எடை குறைவானது. உடற்பயிற்சியை தவறாமல் செய்பவர்களுக்கு பயன்படும். உடற்பயிற்சிக்குத் தோதான வகையில் பல இடங்களில் பொருத்திக் கொள்ளவும் முடியும்.
Read More »மோட்டோ X4: விலை மற்றும் முழு தகவல்கள்
மோட்டோரோலாவின் புதிய மோட்டோ X4 ஸ்மார்ட்போனின் விலை அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன் கசிந்துள்ளது. புதிய X4 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ X4 விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போனின் விலை இணையத்தில் கசிந்துள்ளது. இதன் விலை ட்விட்டரில் ரோலாண்ட் குவாண்ட் என்ற டிப்ஸ்டர் மூலம் வெளியாகியுள்ளது. குவாண்ட் வெளியிட்டுள்ள தகவல்களில் புதிய மோட்டோ X4 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் 350 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.26,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் ...
Read More »புதிய நோட் ஸ்மார்ட்போன் வெளியிட லெனோவோ திட்டம்
லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கான அறிவிப்பு புதிய டீசர் மூலம் அந்நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. புதிய வெளியீடு சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். லெனோவோ நிறுவனம் புதிய கில்லர்நோட் டீசரை தொடர்ந்து ஆகஸ்டு 9-ம் தேதி புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லெனோவோ பதிவிட்டுள்ள புதிய ஜிஃப் புகைப்படத்தில் எண் 8 பிரகாசமாக தெரிவதை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய கில்லர் நோட் ஆகஸ்டு 9-ம் தேதி வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக லெனோவோ ...
Read More »உலகின் மிக பெரிய மின் சேமிப்பு கலன்!
தெற்கு அவுஸ்ரேலிய மாநிலத்திற்கென, மிகப்பெரிய மின் சேமிப்புக் கலனை நிறுவும் பணிகளில் இறங்கி உள்ளது, டெஸ்லா. மின் கார் தயாரிப்பாளரான, டெஸ்லாவின் அதிபர் எலான் மஸ்க், இதற்கான ஒப்பந்தத்தை, அந்த மாநில அரசுடன் கையெழுத்திட்டு உள்ளார். டெஸ்லா நிறுவனம், ‘பவர் வால்’ என்ற வீட்டு மின் சேமிப்புக் கலன்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், 2016ல் புயல், வெப்ப அலை ஆகியவற்றால், தெற்கு அவுஸ்ரேலிய மாநிலத்தில் மின் அமைப்புகள் சேதமடைந்தன. அப்பகுதி மக்கள், மின்சாரமின்றி பல நாட்கள் அவதிப்பட்டனர். எனவே தான், அம்மாநில முதல்வர், ...
Read More »
Eelamurasu Australia Online News Portal