மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய செல்பி 2 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் செல்பி 2 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் யு டெலிவென்ச்சர்ஸ் முன்னதாக யு பிரான்டிங் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செல்பி 2 ஸ்மார்ட்போனில் 8 எம்பி சோனி IMX135 சார்ந்த செல்பி கேமரா, f/2.0 லென்ஸ் கொண்டுள்ளது. இத்துடன் முன்பக்க கேமராவில் ரியல் டைம் பொக்கே எஃபெக்ட், வைடு ஆங்கிள், பிளர் கிளாஸ் IR ஃபில்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் கேமரா ஃபில்ட்டர்களும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 3000 எம்ஏஎச் பேட்டரி, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே மற்றும் விலை சார்ந்து எவ்வித தகவலும் மைக்ரோமேக்ஸ் இணையதளத்தில் பதிவு செய்யப்படவில்லை.
புதிய ஸ்மார்ட்போனுடன் 100-நாட்கள் ரீபிளேஸ்மென்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாரண்டி கொண்டு வன்பொருள் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய முடியும். இந்த வசதியை பெற ஸ்மார்ட்போனின் வாரண்டி நிறைவுறாமலும் அனைத்து விதிமுறைகளுக்கும் ஒப்புக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
இதே போன்ற ரீபிளேஸ்மென்ட் சலுகை கேன்வாஸ் 1, X1i, X706, X424, X740, X730, X904, X570, X512, X412, மற்றும் X726 உள்ளிட்ட மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.
முன்னதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் யு டெலிவென்ச்சர்ஸ் யு யுனிக் 2 என்ற ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படும் யு யுனிக் 2 4ஜி வோல்ட்இ வசதி, ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் யு யுனிக் 2 ஆக்செல்லோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார், பிராக்சிமிட்டி சென்சார் உள்ளிட்ட அம்சங்களுடன் மெட்டல் பேக் மற்றும் பிரீமியம் வடிவமைப்பு மற்றும் ட்ரூகாலர் வசதி வழங்கப்படுகிறது.