நுட்பமுரசு

செவ்வாய் கிரகத்தில் வாழ ஒத்திகை

செவ்வாய் கிரகத்தில் வாழ ஒரு வருட ஒத்திகை ஆய்வை வெற்றிகரமாக முடித்த நாசா குழுவினர், செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான நம்பிக்கையை அளித்து உள்ளதாக தெரிவித்தனர். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் செவ்வாய் கிரகம் செல்லும் மனிதர்கள் அங்கு தாங்கள் வாழ்வதற்கான சூழ்நிலை எவ்வாறு இருக்கும், அதனை எப்படி சமாளிப்பது என்பதை உணர செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான ஒத்திகை சோதனையை நாசா நிறுவனம் நடத்த முடிவு செய்தது. இதற்காக அமெரிக்காவை சேர்ந்த விமானி, ...

Read More »

உங்கள் போன் உங்கள் தயாரிப்பு

உங்களுக்கான ஸ்மார்ட்போனை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள் என்கிறது ஸ்பீடு ஸ்டூடியோ என்கிற நிறுவனம். இவர்களது ‘ரீபோன் கிட்’ என்கிற போன் உபகரணங்களை பயன்படுத்தி இதை தயாரித்துக் கொள்ளலாம். இதன் விலை 100 டாலர்கள்.

Read More »

5 ஆண்டுக்கு முன் அனுப்பிய விண்கலம் வியாழனை அண்மித்தது

அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் வியாழன் கிரகத்தை ஆய்வு மேற்கொள்ள 5 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய ஜுனோ விண்கலம் வியாழன் கிரகத்தை நெருங்கியது. அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி நிறுவனம் வியாழன் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ‘ஜுனோ’ என்ற விண்கலத்தை அனுப்பியது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி புளேறிடாவின் கேப் கான வரவில் இருந்து செலுத்தப்பட்டது. ‘ஜுனோ’ விண்கலம் தனது பயணத்தை தொடர்ந்து வந்தது. மேகங்களுக்கு இடையே மணிக்கு 2 லட்சத்து 8 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பாய்ந்து ...

Read More »

நியூயார்க்கில் வட்டமிட்ட பறக்கும் தட்டு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வட்டமிட்ட பறக்கும் தட்டை ஆலிவுட் நடிகை படம் பிடித்துள்ளார். ஆலிவுட் நடிகை ரோவன் பிளான்சார்ட். இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கியுள்ளார். அங்கு அழகான சூரிய அஸ்தமனத்தை போட்டோ எடுத்தார். அப்போது அவரது காமிராவில் தற்செயலாக பறக்கும் தட்டு படம் சிக்கியது. இதனால் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்த அவர் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த படத்தின் பறக்கும் தட்டு ஒன்று நியூயார்க் நகரில் வட்டமிடுவது போன்று உள்ளது. இந்த போட்டோவை பார்த்த 90 சதவீதம் பேர் இது ...

Read More »

உலகின் முதல் தானியங்கி டாக்சி சேவை சிங்கப்பூரில் அறிமுகம்

சிங்கப்பூரைச் சேர்ந்த நுடோநோமி நிறுவனம் அந்நாட்டில் தானியங்கி டாக்சி சேவையை  நேற்று (25) அறிமுகம் செய்தது. தங்கள் நிறுவனத்தின் செயலியை கைபேசியில் தரவிறக்கம் செய்து, சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் வரையிலான இந்த டாக்சி சேவையின் வெள்ளோட்டத்தில் பொதுமக்களும் இலவசமாக பங்கேற்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இன்றைய சோதனை வெள்ளோட்டத்தில் சிலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தானியங்கி டாக்சியில் இலவசமாக பயணம் செய்த அனுபவம்  மகிழ்ச்சிகரமாக அமைந்திருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

Read More »

செவ்வாய்க்கு விமானம்

2030-ம் ஆண்டுக்குள் செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தானியங்கி விமானத்தை வடிவமைத்து அதன் சோதனை முயற்சிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

Read More »

உலக சாதனை படைத்த அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள்

சோலார் படலங்களிலிருந்து நேரடியாக மின்சக்தியை பெறும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் அதே சோலார் படலங்களைப் பயன்படுத்தி சூரிய ஒளியை நீராவியாக்கி அதிலிருந்து மின் உற்பத்தி செய்யும் பிறிதொரு முறையும் காணப்படுகின்றது. எனினும் இம்முறையானது வினைத்திறன் குறைந்த முறையாகவே இத்தனை காலமும் இருந்து வந்துள்ளது.ஆனால் தற்போது இதன் வினைத்திறனை 97 சதவீதம் வரை அதிகரித்து அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உலக சாதனை படைத்துள்ளனர். சூரிய படலத்தைக் கொண்ட மிகப் பிரம்மாண்டமான இப்பொறிமுறையானது 500 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உடைய நீராவியினை உற்பத்தி செய்கின்றது.இவ்வாறு ...

Read More »

தூவல் நீர்ப்பாசனத் தொகுதியை வடிவமைத்து யாழ் இளைஞன் சாதனை

நுண் நீர்ப்பாசன முறைகளில் மிகவும் உன்னதமான “அசையக்கூடிய சமச்சீரான பக்க குழாய்களைக் கொண்ட தூவல் நீர்ப்பாசனத் தொகுதி” ஒன்றினை இலங்கை விவசாயத் திணைக்களத்தின் கிளிநொச்சி விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையத்தினைச் (Seed & Planting Material Development Center (SPMDC) சேர்ந்த இராஜேஸ்வரன் சஞ்சீபன் சிறப்பாக வடிவமைத்துள்ளார். இந்த உபகரணத்தை Uthayan Micro Irrigation & Agro Services நிறுவனத்தைச் சேர்ந்த கே. உதயகுமார் உருவாக்கியுள்ளார். அசையக் கூடிய சமச்சீரான பக்க குழாய்களைக் கொண்ட தூவல் நீர்ப் பாசனத் தொகுதி வடிவமைப்பு ...

Read More »

102 வயதிலும் பணிக்கு பயணிக்கும் அறிவியலாளர்

அவுஸ்ரேலியாவின் அதிக்கூடிய வயதுடைய அறிவியலாளர் David Goodall – ஐ பணி நிமித்தம் பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டாம் என பேர்த்திலுள்ள Edith Cowan பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 102 வயதான David Goodall தற்போதும் வாரத்தில் 4 நாட்கள் இரண்டு பஸ் மற்றும் ஒரு தொடரூந்து ஆகியவற்றில் ஏறி சுமார் 90 நிமிடங்கள் பயணம் செய்து Edith Cowan பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார்.  இவரது பாதுகாப்பு மற்றும் உடல்நலனைக் கருத்திற்கொண்டு இனிமேல் பல்கலைக்கழக்திற்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டிலிருந்தே அவர் வேலை செய்யலாம் எனவும் அந்த பல்கலைக்கழகம் ...

Read More »

கூகுள் அரபு மொழியை மேம்படுத்தும் திட்டம்

அரேபிய மொழியை மேம்படுத்தும் திட்டமொன்றினை கூகுள் முன்னெடுக்கவுள்ளது.  இணையத்தில் அரபு மொழியின் உபயோகத்தினை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் பெயர் “Arabic Web Days” என்பதாகும். உலக சனத்தொகையில் 5% அதிகமானோர் அரேபிய மொழியை பேசுகின்ற போதிலும் இணையத்தில் வெறும் 3% குறைவான டிஜிட்டல் உள்ளடக்கங்களே ( Digital content) அரேபிய மொழியில் காணப்படுவதாகவும் கூகுள் சுட்டுக்காட்டுகின்றது. இதனால் அரேபிய மொழிப் பாவனையை அதிகரிக்க கூகுள் இத் திட்டத்தினை கூகுள் முன்னெடுக்கவுள்ளது. பல்வேறு பங்காளர்களுடன் இணைந்தே கூகுள் இதனை முன்னெடுத்து வருகின்றது. இதற்கென பல விசேட ...

Read More »