சோலார் படலங்களிலிருந்து நேரடியாக மின்சக்தியை பெறும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் அதே சோலார் படலங்களைப் பயன்படுத்தி சூரிய ஒளியை நீராவியாக்கி அதிலிருந்து மின் உற்பத்தி செய்யும் பிறிதொரு முறையும் காணப்படுகின்றது.
எனினும் இம்முறையானது வினைத்திறன் குறைந்த முறையாகவே இத்தனை காலமும் இருந்து வந்துள்ளது.ஆனால் தற்போது இதன் வினைத்திறனை 97 சதவீதம் வரை அதிகரித்து அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.
சூரிய படலத்தைக் கொண்ட மிகப் பிரம்மாண்டமான இப்பொறிமுறையானது 500 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உடைய நீராவியினை உற்பத்தி செய்கின்றது.இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட நீராவியானது சுழலிகளை இயக்குவதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. இம்முறை குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய முறையாகக் கருதப்படுகின்றது.
Eelamurasu Australia Online News Portal