நுட்பமுரசு

உயிரி சில்லு

நோயாளிகள் இருக்கும் இடத்திலேயே, நோயறியும் கருவிகள் இருந்தால், விரைவில் சிகிச்சையை துவங்கி உயிர்களை காக்க முடியும். இதற்கு உதவியாக இப்போது, ‘பயோ சிப்’ எனப்படும் உயிரி சில்லுகள் வர ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவர்கள், ‘சிம்பிள்’ என்ற உயிரி சில்லை தயாரித்துள்ளனர். இதன் மூலம் எச்.ஐ.வி., முதல் பல நோய்களுக்கான அறிகுறிகளை, 30 நிமிடத்திற்குள் தெரிந்துகொள்ளலாம். விலையும் மலிவு. ஒரு முறை பயன்படுத்தி வீசி விடலாம்.

Read More »

காசினி விண்கலம் சாதனை

சனி கிரகத்தை நெருங்குவதற்கான இறுதிக்கட்ட பயணத்தை  தொடங்கிய காசினி விண்கலம், டைவ் அடித்து சனி வளையங்களுக்குள் ஊடுருவி சாதனை படைத்துள்ளது. சூரியக் குடும்பத்திலுள்ள சனி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 1997-ம் ஆண்டு அக்டோபர் 15ம் திகதி காசினி விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம், 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் திகதி சனி கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் நுழைந்தது. அன்று முதல், 12 ஆண்டுகளாக சனி கிரகம், அதன் வளையங்கள், டைட்டன் என பெயரிடப்பட்ட சனி ...

Read More »

பழைய மாடலில் ஸ்மார்ட் கடிகாரம்

பாரம்பரிய மாடலில் நவீன வசதிகளுடன் கை கடிகாரத்தை உருவாக்கியுள்ளது மை குரோன்ஸ் என்கிற நிறுவனம். தொடுதிரை வசதி கொண்டது. ஸ்மார்ட்போனிலும் இணைத்துக் கொள்ளலாம்.

Read More »

அவுஸ்ரேலியா, அமெரிக்காவில் வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆய்வு

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு  பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள். இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வானியல் விஞ்ஞானிகள் விண்வெளியில் வரும் வேற்று கிரகவாசிகளின் சமிஞ்சைகளை அறிய கருவிகளை கண்டறிந்து உள்ளனர். வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா என்பது ...

Read More »

கருந்துளையை படமெடுத்ததொலைநோக்கிகள்

முதன் முதலாக கருந்துளையை படம்பிடித்த விஞ்ஞானிகள் அண்டவெளியில் கருந்துளை இருக்கிறது என்பவர்கள் உண்டு இல்லவே இல்லை என்பவர்களும் உண்டு. ஆனால், ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 11 வரை பல நாடுகளில் அமைந்துள்ள, ரேடியோ தொலைநோக்கிகளை கூட்டாகப் பயன்படுத்தி, இராப் பகலாக கவனித்து, கருந்துளையை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர். இதுவரை ஓவியர்கள் கற்பனையாக வரைந்த கருந்துளைகளைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், வரலாற்றிலேயே கருந்துளை நிஜமாகவே படம்பிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. நம் பூமி அமைந்துள்ள நட்சத்திரக்கூட்டமான பால் வீதி மற்றும் அருகாமையில் உள்ள நட்சத்திரக் ...

Read More »

ஹவாய் ஹானர் பீ 2 ஸ்மார்ட்போன்

டூயல் சிம் ஆதரவு கொண்ட ஹவாய் ஹானர் பீ 2 ஸ்மார்ட்போனில் எமோசன் UI 3.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது. ஹவாய் ஹானர் பீ 2 ஸ்மார்ட்போனில் 480×854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.50 இன்ச் FWVGA டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஹவாய் ஹானர் பீ 2 ...

Read More »

ஃபேஸ்புக்கின் எதிர்கால திட்டமும்… புதிய சாதனங்களும்…!

ஃபேஸ்புக் நிறுவனம் உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்கள், குடும்பத்தவர்களை இணைக்கும் மிகப்பெரிய சேவையை வழங்கி வருகிறது. அத்துடன் நின்றுவிடாமல் தொழில்நுட்ப உலகில் மேலும் பல புரட்சிகளை மேற்கொள்ளும் முயற்சியிலும் காலடி பதித்து வருகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ புதிய அறிவிப்புகளை ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் F8 டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்ச்சி கலிபோர்னியாவில் நடைபெற்றது. இதில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள், புதிய சாதனங்களை வெளியிடப்பட்டது. இவை முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. உலகின் முதல் ஆக்மெண்ட்டெட் ரியாலிட்டி கேமராவை ...

Read More »

குழந்தையை கண்காணிக்கும் கேமரா!

குறைப் பிரசவ குழந்தைகளை, மருத்துவமனையில், ‘இங்குபேட்டர்’ கருவியில் வைப்பது இன்று சகஜமாகியிருக்கிறது. இங்குபேட்டரில் வைக்கப்படும் குழந்தையின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க, மருத்துவர்கள் சில உணர்வான்களை பொருத்துவர். இந்த உணர்வான்கள், பிறந்த குழந்தை கை, கால்களை அசைக்க இடையூறாக இருப்பதோடு, சமயங்களில் தவறான சமிக்ஞைகளை வெளியிடுவதும் உண்டு. இதற்கு மாற்றாக, குழந்தையின் உடலில் எதையும் பொருத்தாமல், கண்காணிக்க உதவும் கருவியை, சுவிட்சர்லாந்திலுள்ள ஆராய்ச்சி நிலையங்களான இ.பி.எப்.எல்., மற்றும் சி.எஸ்.இ.எம்., ஆகியவற்றின் மருத்துவர்கள் உருவாக்கியிருக்கின்றனர். அந்தக் கருவி வேறு எதுவுமில்லை, கேமராக்கள் தான்! பிறந்த பச்சிளங் குழந்தையின் ...

Read More »

கையடக்க திறன்பேசி

ஒரு பொருளுக்குள் என்னென்ன இருக்கிறது என்பதை, புட்டுப் புட்டு வைக்க உதவுகிறது, ‘சாங்ஹோங் எச்.2’ என்ற கையடக்க திறன்பேசி. அனலாக் டிவைசஸ், கன்ஸ்யூமர் பிசிக்ஸ் மற்றும் சீனாவிலுள்ள சிசுவான் சாங்ஹோங் எலெக்ட்ரிக் கோ ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திறன்பேசியை, எந்த ஒரு உணவுப் பொருள் முதல் எந்தப் பொருளையும் அலசி, அவற்றின் மூலக்கூறு அமைப்பு உட்பட சகலத்தையும் தெரிவித்து விடுகிறது. இந்த கருவியுடன் சாங்ஹோங் தரும் ஒரு செயலியையும் தரவிறக்கம் செய்து கொண்டால் போதும். தினந்தோறும் பல பொருட்களின் மூலக்கூறு ...

Read More »

விண்வெளியில் இருந்து வரும் மர்ம சிக்னல்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த மர்ம ரேடியோ சிக்னல் பூமியிலிருந்து வந்ததில்லை என்றும் அது விண்வெளியில் இருந்து தான் வந்துள்ளது என விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர். விண்வெளியில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர், மர்ம ரேடியோ சிக்னல் ஒன்று பூமிக்கு வந்துள்ளது. இதை விஞ்ஞானிகள் மோலாங்லா ரரேடியோ டெலஸ்கோப் மூலம் கண்டறிந்துள்ளனர். ஆனால் இந்த சிக்னலானது பூமியில் இருந்து வருகிறதா அல்லது வேறு ஏதேனும் பகுதிகளில் இருந்து வருகிறதா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்தனர். சுமார் 10 ஆண்டுகள் நடந்த ...

Read More »