நோயாளிகள் இருக்கும் இடத்திலேயே, நோயறியும் கருவிகள் இருந்தால், விரைவில் சிகிச்சையை துவங்கி உயிர்களை காக்க முடியும். இதற்கு உதவியாக இப்போது, ‘பயோ சிப்’ எனப்படும் உயிரி சில்லுகள் வர ஆரம்பித்துள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவர்கள், ‘சிம்பிள்’ என்ற உயிரி சில்லை தயாரித்துள்ளனர்.
இதன் மூலம் எச்.ஐ.வி., முதல் பல நோய்களுக்கான அறிகுறிகளை, 30 நிமிடத்திற்குள் தெரிந்துகொள்ளலாம். விலையும் மலிவு. ஒரு முறை பயன்படுத்தி வீசி விடலாம்.