செல்வநாயகம் ஆரூரன் என்ற அரசியல் கைதி எழுதிய “யாழிசை” என்ற நாவலுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. இந் நாவலுக்கு இலண்டன் தமிழ் சங்கம், கொழும்பு தமிழ்ச்சங்கம் விருதினை வழங்கியுள்ளது. இவ் விருதுகளை ஆருரனின் தந்தை செல்வநாயகம் பெற்றுக் கொண்டார். நாவலாசிரியர் ஆருரன் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் கற்ற பொறியிலாளர். 2008 ஆண்டிலிருந்து 08 வருடங்களாக மகசின் சிறை தடுப்பில் உள்ளார். சிறைச்சாலையிலேயே “யாழிசை“ என்ற நாவலை எழுதினார். இந் நாவல் ஒரு பெண்போராளிபற்றியது. அப் பெண் போராளி மனைவி, மாமி, மருமகள், ஒரு சமூகத்தின் அங்கத்துவராக பல பாத்திரங்களை தாங்கி ...
Read More »இலக்கியமுரசு
இன்று பாரதியின் நினைவு நாள்- செப்டம்பர் 11
பாரதி கவியரசராக மட்டுமே விளங்காமல், மிகச் சிறந்த பத்திரிகையாளராகவும் தன்னிகரற்று விளங்கினார். பாரதியின் பத்திரிகை உலகத் தொடர்புகள் பரந்துபட்டவை; விதந்து பேசுவதற்கும் உரியவை.
Read More »வருடமொருமுறை வரும் ஆரியாதிக்கமிக்க வருடப்பிறப்பும் அதன் திணிப்பும்
தொன்றுதொட்டு இயற்கை வழிபாட்டில் ஊன்றித் திளைத்தவர்களாகிய எம் தமிழினம், இயற்கையையும் முருகனையும் தொன்றுதொட்டே வழிபட்டு வந்தனர். எம் மதம் சைவம் என்பதே எம் இனத்திற்கான அடையாளமாகவும், சைவத்தில் தளைத்தோங்கிய நாம் என்றென்றும் சைவர்களாக இல்லாமல் இந்துவாக மாற்றம் பெற்றது எப்போதோ அப்போதிருந்தே எம்மீதான எம் இனத்தின் மத அடையாளத்தைச் சிதைக்கும் நடவடிக்கையில் ஆரியன் செவ்வன தன் கைங்காரியத்தினை ஆற்றினான். வட இந்திய மன்னனான வாலிச மன்னன் முடிசூடிய இந்நாளே ஆரியர்களினால் கொண்டாட்ட நாளாகவும், தாம் திராவிட இனத்தை வென்று தமக்கான புது வசந்த வாழ்வை ...
Read More »ஆழ்கடல்கடந்த அவுஸ்திரேலியப் பயணம் (பகிர்வு)
நாங்கள் கொழும்பில் மருதானைலொட்சில் தங்கியிருந்தநாட்களில் எமக்கான உணவுச்செலவு மற்றும் லொட்ச்வாடவை என்பவற்றை பிரதானமுகவரான சுலக்சனின் ஏற்பாட்டில் கொழும்புஅன்ரி கவனித்துக்கொண்டிருந்தார். அத்துடன் சுலக்சனும் அவ்வவ்போது வந்து எம்மைச்சந்தித்ததால் எமது அவுஸ்திரேலியக்கடற்பயணம் நாட்கள் தாமதித்தாலும் எப்படியும் சாத்தியப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இவ்வாறு சுலக்சன் உத்தரவாதமளித்த ஒருவாரகாலமும் உருண்டோடியது. மேலும் பயணத்திற்கு நான்கு ஐந்து நாட்கள் தாமதமாகியது. பிரதானமுகவர் சுலக்சனும் தனது ஏற்பாட்டாளர்களுக்கு அழுத்தங்களைக்கொடுத்து எம்மை எப்படியாவது அவுஸ்திரேலியப்பயணத்திற்கு படகேற்றுவதற்கு கடும்பிரயத்தனம் மேற்கொண்டார். இதன்விளைவாக எமது பயணம் 2012-ம்ஆண்டு செப்ரெம்பர்மாதம் 24-ம்நாளன்று சாத்தியமாகுமென்று சுலக்சன் கூறினார். ...
Read More »பலூன்!
“மாமா பெரிசாக ஊதாதையுங்கோ….. அப்பா….. மாமாவை ஊதவேண்டாம் என்று சொல்லுங்கோ…..“ என்று கண்கள் அகல விரிய முகத்தில் பயம பரவ சத்தமாக கத்தி அழுதுகொண்டு காதுகள் இரண்டையும் தனது பிஞ்சுக் கைகளால் பொத்திக்கொண்டு ஓடிப்போய் இரு கண்களையும் இறுக மூடிக்கொண்டு கதிரைகளுக்குப் பின்னால் மறைந்து கொண்டான் எட்மன். எட்மனுக்கு 9 வயது தான் ஆகிறது. அந்தக் குடும்பத்தில் மூத்த பையன். 5 வருடங்களின் முன்னர் அவன் மிகச் சுட்டிப்பையன். அவனது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது தத்தளிக்கும் அவனது பெற்றோரும் அம்மம்மாவும், 4 வயதிலேயே அவனது ...
Read More »மறைந்து போகும் நம் அடையாளங்கள்!
ஒவ்வொரு இனமும் தமக்கே உரித்தான தனித்துவமானஅடையாளங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. கலை,கலாச்சாரம்,பண்பாடு இவை யாவற்றிற்கும் மேலாக மொழி என்பது ஓர் இனத்தின் முக்கிய அடையாளமாகும். ஒவ்வொரு இனங்களும் தமதுஅடையாளங்களை நிலைநிறுத்துவதிலும் இவை அழிந்துபோகாமல் பாதுகாப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கின்ற வேளை தமிழர்களாகியநாம் எவ்வளவுதூரம் எமதுஅடையாளங்களுக்கு முதன்மையளிக்கின்றோம் ? அதை அழியாது காக்க எவ்வளவு முயல்கின்றோம் என்றால் அது வருத்தத்திற்குரிய ஒன்றாகவே இருக்கின்றது. தமிழனுக்கே உரித்தான நாடு ஒன்று இதுவரை இல்லை எனினும் உலகில் தமிழரில்லாத நாடுகள் இல்லை எனும் அளவிற்கு பரந்து வாழ்கின்ற இனமாக தமிழினம் ...
Read More »தைப்பொங்கல் தினமே தமிழ் புத்தாண்டுத் தினமாகும்!
தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை வரலாற்று வழியாகவும் வாழ்வியல் வழியாகவும் தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை வரலாற்று வழியாகவும் வாழ்வியல் வழியாகவும் பண்பாட்டு வழியாகவும் ‘பண்டைய காலக்கணக்கு முறை வழியாகவும் முன்வைத்துத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழீழத்திலும் தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்கள் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக் காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட ...
Read More »உறவில்லா உரையாடல்கள் ….. (நடப்புகள்)
புரட்சிகரமான முன்னேற்றங்களை கண்டு வருகின்ற நவீன காலமிது. இந்த முன்னேற்றங்களை பார்த்து எம்மால் புளகாங்கிதம் அடையாமலிருக்க முடியாது. ஆனாலும் கண்ணோடு கண்ணோக்கி ஆளோடு ஆள் உரையாடுவதென்பது எவ்வளவு மகிழ்ச்சியான அனுபவம்! அதில் உருவாகும் உறவிற்கு இணையேது? அன்று நீண்ட காலத்திற்குப் பின் சந்தித்த என் நண்பனும் நானும் அந்தப் பூங்காவில் உலாவந்து கொண்டிருந்தோம். கதைக்க எவ்வளவோ விடயங்கள் இருந்தன. ஆனால் செல்போனைக் காதில் வைத்து உரையாடிக் கொண்டிருந்த நண்பனது செய்கை என்னைக் குழப்பியது! நண்பன் உரையாடலை செல் போனுக்குள்ளால் நகர்த்திக் கொண்டு போனதினால் நான் ...
Read More »வழுதி வாத்தியாா்
எப்போதுமே, எம்மையும், எம்மைச்சுற்றி உள்ள இடங்களையும் சுத்தமாக வைத்திருக்கப் பழக வேண்டும். இதனால் பல தொற்று நோய்கள் பரவுவதைத் தவிர்க்கலாம். பொதுவாக சமையலறைக் கழிவுகளை மூடிய நிலையில் உள்ள நில பங்கரில் போட வேண்டும். இதனூடாக இலையான்கள் உருவாவதைத் தடுக்கலாம். பின்னர் அக்கழிவுகளை தாவர வளர்ச்சிக்கு எருவாகப் பயன்படுத்தலாம். கிணற்றைச்சுற்றி தண்ணீர் தேங்கியிருப்பதைத் தடுக்க வேண்டும். சவர்க்கார உறைகள், சம்பூ போத்தல்கள் மற்றும் கழிவுப் பொருட்களை கழிவுக் கூடையில் போட்டு நிறைந்த பின்னர் அப்புறப்படுத்த வேண்டும். இதனால் நுளம்பு உற்பத்தியாவதைத் தடுக்கலாம் என அந்த ...
Read More »