திரைமுரசு

அவுஸ்திரேலிய பூனையுடன் நடனமாடிய டெலிபோன் ராஜ்

வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரிப்பில், சின்னா பழனிச்சாமி இயக்கியுள்ள படம் மியாவ். ஆடு, மாடு, யானை, குரங்கு, நாய், பாம்பு, சேவல் என பல மிருகங்களை வைத்து படங்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக பூனையை மையமாக வைத்து இந்த படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் இதுவரை 2 ஆயிரம் மேடை நாடகங்கள், 125 படங்கள், 50 சீரியல்களில் நடித் துள்ள நடிகர் டெலிபோன் ராஜ், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காமெடி கலந்த போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். அதுபற்றி டெலிபோன் ராஜ் கூறுகையில், இந்த படத்தில் ...

Read More »

தரமான படங்களை தொடர்ந்து தயாரிப்பேன்-சசிகுமார்

புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தி தரமான படங்களை தொடர்ந்து தயாரிப்பேன் என்று நடிகர் சசிகுமார் கூறியுள்ளார். சசிகுமார் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘கிடாரி’. இதில் நாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார். நெப்போலியன், வேலா ராமமூர்த்தி, மு.ராமசாமி, வசுமித்ரா, சுஜா வாருணி ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தை பிரசாத் முருகேசன் இயக்கி உள்ளார். ‘கிடாரி’ படம் குறித்து சசிகுமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- கிராமங்களில் திமிர்த்தனமாகவும் அடாவடியாகவும் திரிபவனை ‘கிடாரி’ என்பார்கள். நான் அந்த கதாபாத்திரத்தில் இதில் ...

Read More »

பணிகளுக்கான ஊக்கியாக செவாலியே விருதை உணர்கிறேன்- கமல்

பிரான்ஸ் நாட்டின் மிகஉயரிய ‘செவாலியே’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டமைகாக நன்றி தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், கலை, இலக்கியத்துக்கு ஆற்ற வேண்டிய பணிகளுக்கான ஊக்கியாக கருதும் இவ்விருதினை எனது ரசிகர்களுக்கும், அபிமானிகளுக்கும் அர்ப்பணம் செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 1960-ம் ஆண்டு வெளிவந்த ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை அவர் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி வரும் கமல்ஹாசன், இதுவரை 200-க்கும் ...

Read More »

அமிதாப் பச்சனை டுவிட்டரில் பின்தொடர்வோர் 22 மில்லியனாக உயர்ந்தது

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சமூக வலைத்தளமான டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 22 மில்லியனாக (இரண்டு கோடியே இருபது லட்சமாக) இன்று(21) உயர்ந்தது. இதுதொடர்பாக, இன்று பூரிப்புடன் கருத்து தெரிவித்துள்ள அமிதாப் பச்சன், தன்னை பின்தொடரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அமிதாப்புக்கு அடுத்தபடியாக, டுவிட்டரில் ஷாருக்கானை 20.8 மில்லியன் பேரும், சல்மான் கானை 19 மில்லியன் பேரும், அமீர் கானை 18.3 மில்லியன் பேரும், பின்தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி நிலவரப்படி அமிதாப் பச்சனை ...

Read More »

போர்க்களத்தில் ஒரு பூ – இசைவெளியீடு

போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படத்தின் இசையானது, தமிழீழ விடுதலைப் போரில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. என அதன் இயக்குனர் தெரிவித்தார். பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பிரியா இசைப்பிரியாவின் கதாப்பாத்திரமேற்று நடிக்கிறார். மற்றும் பிரபாகரன், சுமந்தன், சுபாஷ்சந்திரபோஸ், ராதா, ரேகா, ஸ்ரீலஷ்மி ஆகியோரும் நடிக்கிறார்கள். உலக தமிழினத்தின் நெஞ்சத்தில் அழியாத நினைவுகளாய், ஆறாத் துயராய், மாறா ரணமாய் நிறைந்து நிற்கும் நாளில், தன் மொழியை, தமிழ்மொழியை, தமிழினத்தை, தாய்த்திருநாட்டை மிகவும் நேசி்த்த காரணத்தால் ...

Read More »

பண்ணையாரும் பத்மினியும்

அண்மையில் வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்த திரைப்படங்களுள் ஒன்றாக பண்ணையாரும் பத்மினியும் விளங்குகின்றது. புறக்கணிக்க முடியாத படங்களுள் ஒன்றாக மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவதற்கு அப்படத்துக்கான விளம்பரமும் ‘விஜய் சேதுபதி’ என்ற நடிகனின் பெயரும் முக்கிய காரணம். இப்போதெல்லாம் விஜய் சேதுபதியின் படங்களென்றால் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களாக பெரும்பாலான மக்கள் மத்தியில் பதிந்துவிட்டன. தனியே வெகுசனங்களின் இரசனையை மட்டுமன்றி தீவிரமான சினிமா நுகர்வோரையும் கவர்ந்திழுக்கும் படங்களாகவே விஜய் சேதுபதியின் படங்கள் அமைந்துவிடுகின்றன. தென்மேற்குப் பருவக்காற்று, நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும் என்று ...

Read More »

RUSH திரைப்பட விமா்சனம்

Formula One எனப்படும் கார் ஓட்டப் பந்தய இரசிகர்களுக்கு கடந்த ஆண்டு சோகமானதகவே நிறைவுபெற்றது. ஆம். கார் ஓட்டப்பந்தயத்தில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கல் சூமேக்கர் (Michael Schumacher) தலையில் பலத்த அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். பலவிதமான கார் ஓட்டப்பந்தயங்கள் உலகில் நடக்கின்றபோதும் அதிக விறுவிறுப்பானதும் அதிகளவு மக்களால் இரசிக்கப்படுவதாகவும் அதிகளவு ஆபத்தானதாகவுள்ள விளையாட்டுத்தான் இந்த Formula One. இந்த வேகப்பந்தயத்தில் 1994 முதல் 2004 வரையான பத்தாண்டுகளில் ஏழு முறைகள் வெற்றிவாகை சூடி தன்னிகரில்லாதவராகத் தன்னை நிலைநிறுத்திய பின்னர் 2006இல் பந்தயத்திலிருந்து ஓய்வு பெற்றார். ...

Read More »

பேய்(க்) காட்டும் வில்லா

திரைப்படங்களைப் பொதுவாக அதன் கதைக்களத்தினையும் காட்சியமைப்பையும் வைத்து வகைபிரித்து வைப்பார்கள். காதல், நகைச்சுவை, திகில் போன்ற வகைகளில் திரைப்படங்களைக் குறிப்பிடுவார்கள்.பொதுவாகவே உலகத்திரைப்படங்கள் தனியொரு வகையினதாகவோ அல்லது ஓரிரு வகைகள் பொருந்தக் கூடியதாகவோ அமைகின்றன. தமிழ்த் திரையுலகில் இவ்வாறு ஒவ்வொரு படத்தையும் வகைபிரித்துச் சொல்வது மிகமிகக் கடினம் எனுமளவுக்குத்தான் படங்கள் உள்ளன. பெரும்பாலான படங்கள் ஒரேமாதிரியான அடைப்பலகைக்குள் அடங்குமாற்போன்றே உள்ளன. காதல், நகைச்சுவை, நாலு சண்டை, நாலு பாட்டு என்ற சமன்பாட்டின்படியே பெருமளவு படங்கள் வந்துவிடும். ஒரு திரைப்படம் வெற்றிபெற்றால் அந்தக் கதைக்களனை ஒட்டியே பத்துப் ...

Read More »

திரைப்பார்வை -The Life of David Gale

மரண தண்டனைக்கெதிராக தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த ஒருவன்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்படுகிறது. தான் நிரபராதி எனக் கூறிக்கொண்டிருக்கும் அவனது கதையைத் தொகுக்க வருகிறாள் ஒருத்தி. நடந்தவை எல்லாவற்றையும் சொல்வதாக உறுதியளித்து இறுதி மூன்று நாட்களில் தனது கதையைச் சொல்கிறான் அவன். ஒருகட்டத்தில் அவன் குற்றமற்றவனாக இருக்க வாய்ப்புள்ளது என்று உணரும் அவளும் அவளின் உதவியாளனும் அந்த வழக்கின் பின்னாலிருக்கும் சூட்சுமத்தைத் தேடியலைகின்றனர். உண்மையில் என்ன நடந்தது? அவன்தான் கொலைகாரனா? போன்ற வினாக்களுடன் இரண்டு மணிநேரத் திரைப்படம் நகர்கிறது. திரைப்படத்தின் முடிவில் அதிர்ச்சி கலந்த ...

Read More »