திரைமுரசு

புற்று நோய் அனுபவத்தைப் பற்றி புத்தகம் வெளியிட்டார் மனிஷா!

நடிகை மனிஷா கொய்ரலா 1991 ஆம் ஆண்டு திரைத் துறைக்குள் நுழைந்து உச்சம் கண்டவர் 2010 ஆம் ஆண்டு இவர் தனது கணவரைப் பிரிந்த பின்னர் தனிமையாக இருந்தார். இந்த நிலையில் மனிஷா கொய்ரலாவுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்ற பின்னர் இவர் குணமடைந்தார். அதன் பிறகு புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் அனுபவங்களை மனிஷா கொய்ரலா புத்தமாக எழுதியுள்ளார். இதில் புற்றுநோய்க்கு ஆளானது, ...

Read More »

ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’!

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘காற்றின் மொழி’. விதார்த், லட்சுமி மஞ்சு, இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். வருகிற வெள்ளிக்கிழமை (நவம்பர் 16) இந்தப் படம் வெளியாக  இருக்கிறது. ‘காற்றின் மொழி’ படத்தை முதல்நாளே பார்க்க இருக்கின்றனர் நெய்வேலியில் உள்ள நேஷனல் கல்லூரியைச் சேர்ந்த பி.எட். மாணவிகள் 160 பேர். இதற்கான ஏற்பாட்டைக் கல்லூரி நிர்வாகமே செய்திருக்கிறது. இதுகுறித்து கல்லூரி டிரஸ்ட் உறுப்பினர்களும் சகோதரிகளுமான  வைரம் மற்றும் விஜயலட்சுமி கூறியதாவது… “நடிகை ...

Read More »

தேசியகீதம்’ படத்துக்கும் நிறைய எதிர்ப்புகள் வந்தது!- இயக்குநர் சேரன்

’தேசியகீதம்’ படத்துக்கும் நிறைய எதிர்ப்புகள் வந்தது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் சேரன் தெரிவித்திருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. இப்படத்தில் வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் இலவசங்களை தீயிட்டுக் கொளுத்துவது போன்ற காட்சிகளுக்குத் தான் அதிமுக கட்சியின் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பெரும் சர்ச்சையாக உருவானதைத் தொடர்ந்து, படக்குழுவினர் அக்காட்சிகளை நீக்கிவிட்டனர். தற்போது அக்காட்சிகள் இல்லாமல் ‘சர்கார்’ திரையிடப்பட்டு வருகிறது. ’சர்கார்’ படக்குழுவினருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்தது தொடர்பாக, திரையுலகினர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார்கள். ...

Read More »

இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ…

நமக்குள் நிரம்பிக்கிடக்கும் உணர்வுகளின் எல்லைகளைக் கடக்கவோ, அதில் திளைக்கவோ பல நேரத்தில் கைகொடுப்பது இசையும் கவிதைகளுமே! அனுதினமும் நம்முடனே பயணிக்கும் சக பயணிபோலாகிவிட்ட திரையிசைப் பாடல்கள்தான் நம்மில் பலருக்கும் மீட்பன். மனதின் சுவர்களை முள்ளாகத் தைத்துக்கிடக்கும் ரணங்களைக் கடப்பதாகட்டும், தரையில் கால் படாமல் துள்ளிக் குதிக்கும் மகிழ்ச்சி ஆகட்டும் பாடல்களின் கரம் பிடித்தே நாம் கடந்து செல்கிறோம். நம் துயரை, நம் காதலை, நம் இழப்பை, நமக்கான ஒளியை எங்கோ ஒருவர் எழுதிக்கொண்டிருக்கிறார் என்ற நிம்மதி, நம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டே இருக்கிறது. தலை கவிழ்ந்து நாம் ...

Read More »

சூரியாவும் நானும் இணைந்து நடிக்கக் காத்திருக்கிறோம்!-ஜோதிகா

திருமணத்துக்குப் பிறகு, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்துவருகிறார் ஜோதிகா. இந்தியில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தும்ஹாரி சுலு’ படத்தின் தமிழ் மறுஆக்கமான ‘காற்றின் மொழி’ படத்தில் நடித்திருக்கிறார் ஜோதிகா. மீண்டும் இயக்குநர் ராதாமோகனோடு கூட்டணி, சூர்யாவின் ஆதரவு எனப் பல விஷயங்கள் பற்றி ஜோதிகாவுடன் உரையாடியதிலிருந்து… ‘காற்றின் மொழி’யில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? அப்படத்தில் சொல்லப்பட்டு இருக்கும் மெசேஜ் பிடித்திருந்தது. பெண்களை மையப்படுத்தி நகரும் படங்கள் கனமான உள்ளடக்கத்துடன் இருக்கும். இது எளிய ஒன்றாக இருந்தது. கணவன் – மனைவி உறவை ...

Read More »

மெரினா புரட்சி படத்துக்கு மீண்டும் தடை!

ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘மெரினா புரட்சி’ படத்திற்கு மீண்டும் தடை விதித்துள்ளார்கள். ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் ‘மெரினா புரட்சி’ என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த மத்திய திரைப்பட தணிக்கை குழு படத்துக்கு அனுமதி கொடுக்காமல் மறுசீரமைப்பு குழுவுக்கு அனுப்பியது. தற்போது படத்தை பார்த்த நடிகை கௌதமி தலைமையிலான மறு சீரமைப்பு குழு எந்த காரணமும் சொல்லாமல் மெரினா புரட்சி படத்துக்கு மீண்டும் தடை விதித்துள்ளனர். மறு சீரமைப்பு குழு மறுப்பு தெரிவித்தால் டெல்லி ...

Read More »

சமந்தாவுடன் நடிப்பது கடினமாக இருக்கிறது! – நாக சைதன்யா

நடிகை சமந்தாவுடன் நடிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது என்று அவரின் கணவரும் நடிகருமான நாக சைதன்யா கூறியிருக்கிறார். திருமணத்திற்குப் பின் சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்தாலும் முதன்முறையாக தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்கிறார். சிவா நிர்வானா இயக்கத்தில் உருவாகும் இந்த படம் குறித்து நாக சைதன்யா சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார். “இருவரும் இணைந்து பணியாற்றுவதால் ஒரே நேரத்தில் வீட்டிற்கு செல்கிறோம். ஆனால் காலையில் எனக்கு முன்பாகவே சமந்தா சென்றுவிடுவார். அதிக நேரங்களை நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் செலவிடுகிறோம். இந்த படத்தில் நாங்கள் ...

Read More »

சர்கார்!

தன் ஓட்டு கள்ள ஓட்டாகப் போடப்பட்ட கோபத்தில் வாக்களிக்கும் உரிமைக்காகப் போராடும் இளைஞன், ஆட்சியில் அமர உள்ள கட்சியையே அசைத்துப் பார்த்தால் அதுவே ‘சர்கார்’. கார்ப்பரேட் உலகின் நம்பர் ஒன்னாக வலம் வருபவர் ஜி.எல். சிஇஓ சுந்தர் ராமசாமி (விஜய்). இவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து சென்னை வருகிறார். விஜய்யின் வாக்கு இன்னொருவரால் கள்ள ஓட்டாகப் போடப்பட்டது தெரிந்ததும் அந்தத் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கச் சொல்லி நீதிமன்றம் செல்கிறார். 49 (பி) பிரிவின் படி விஜய் வாக்களிக்கலாம் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் வாக்குச்சாவடி ...

Read More »

சமூக திரில்லர் படமாக உருவாகும் புளூவேல்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலரையும் பயமுறுத்திய புளூவேல் விளையாட்டு தற்போது சமூக திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளூவேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி கொடுக்கக்கூடிய சூழ்நிலை தான் நிலவுகிறது. இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு பல செயல்களை செய்கிறார்கள். இதில் ஒன்று தான் ‘புளூவேல்’ விளையாட்டு. ஆனால், இந்த விளையாட்டால் தங்கள் ...

Read More »

25 வயது வரை தற்கொலை எண்ணம் என்னை வாட்டியது!-ஏ.ஆர். ரஹ்மான்

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் தனது 25 வயது வரை தற்கொலை எண்ணம் தன்னை வாட்டியதாக தெரிவித்தார். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் தன்னையும் தற்கொலை எண்ணம் வாட்டியதாக தெரிவித்தார். “எனது 25 வயது வரை, தற்கொலை எண்ணம் எனக்குள் எழுந்ததுண்டு. அவ்வப்போது நம்மில் பலரும், நாம் சிறப்பானவன் கிடையாது என நினைக்கிறோம். நான் என் தந்தையை இழந்ததால் இவ்வாறு உணர்ந்திருக்கிறேன்.. அதன்பின் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. “அவை எல்லாமும் செயலற்று போனதாக இருந்தது. என் தந்தையும் இறந்து விட்டதால், நான் அதிக ...

Read More »