நடிகை மனிஷா கொய்ரலா 1991 ஆம் ஆண்டு திரைத் துறைக்குள் நுழைந்து உச்சம் கண்டவர் 2010 ஆம் ஆண்டு இவர் தனது கணவரைப் பிரிந்த பின்னர் தனிமையாக இருந்தார். இந்த நிலையில் மனிஷா கொய்ரலாவுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
இதற்காக அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்ற பின்னர் இவர் குணமடைந்தார். அதன் பிறகு புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் அனுபவங்களை மனிஷா கொய்ரலா புத்தமாக எழுதியுள்ளார்.
இதில் புற்றுநோய்க்கு ஆளானது, அமெரிக்காவில் சிகிச்சை பெற்றது, அப்போது ஏற்பட்ட வேதனைகள், ஏமாற்றம், நோயில் இருந்து மீண்டது, அதன்பிறகு புதிய வாழ்க்கையை தொடங்கியது போன்ற விபரங்களை மனிஷா கொய்ராலா குறிப்பிட்டுள்ளார்.
”புற்றுநோய் எனக்கு எப்படி புதிய வாழ்க்கையைக் கொடுத்தது” என்ற தலைப்பில் எழுதியுள்ள இந்தப் புத்தகம் தற்போது வெளியாகி உள்ளது.