பிரிந்து வாழும் அப்பா கமல்ஹாசன், அம்மா சரிகாவை சேர்த்து வைக்காதது ஏன்? என்று அவர்களின் மூத்த மகள் சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். அவர் தனது பெற்றோர்களின் வாழ்க்கை பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான பாகம் என்றால் அது என்னுடைய அப்பா கமல்ஹாசன் மற்றும் அம்மா சரிகா தான். பொதுவாக அப்பா அம்மா பிரிந்து வாழ்ந்தால் மற்றவர்களுக்கு வேண்டுமானால் செய்தியாக இருக்கலாம். ஆனால் வீட்டில் ...
Read More »திரைமுரசு
தூய்மையான மனித உறவுகளுக்காகத்தான் நானும் கோலியும் வாழ்கிறோம்: அனுஷ்கா சர்மா
விராட் கோலியையும் தன்னையும் யாரென்றே தெரியாமல் ஒரு குடும்பம் இருந்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் அனுஷ்கா சர்மா. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது விராட் கோலியையும், தன்னையும் யாரென்றே தெரியாத ஒரு குடும்பம் இருந்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் அனுஷ்கா சர்மா. இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் அனுஷ்கா சர்மா கூறியிருப்பதாவது: ”இன்று, எங்கள் 8.5 கிலோ மீட்டர் மலையேற்றப் பயணத்தின்போது, ...
Read More »புத்தகம் வெளியிடும் ஆண்ட்ரியாவுக்கு மீண்டும் மிரட்டல்?
தமிழில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஆண்ட்ரியா எழுதிய புக்கை வெளியிடாமல் தடுக்க மிரட்டல் விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, உத்தம வில்லன், துப்பறிவாளன், வடசென்னை உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியா சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சியொன்றில் பேசும்போது, “திருமணமான ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்றும் இப்போது ஆயுர்வேத சிகிச்சை பெற்று மீண்டு வந்து இருக்கிறேன் என்றும் கூறினார். ...
Read More »ஐஸ்கிரீம் புகைப்படம் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா!
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஐஸ்கிரீம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் டெல்லி காற்று மாசுவால் கவலைப்பட்டு முகத்தில் முகமூடி அணிந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதில் “காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் எப்படி வாழமுடியும். காற்று சுத்திகரிப்பும் முகமூடியும் நமக்கு தேவையாக இருக்கிறது. வீடு இல்லாதவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. “புகைப்பிடிக்கும் உங்கள் வாய்க்கு முகமூடி போட்டது சரியான செயல்தான். காற்று மாசு ...
Read More »நடிகராக அறிமுகமாகும் அலெக்ஸாண்டர் பாபு!
இணையத்தில் கலக்கி வரும் அலெக்ஸாண்டர் பாபு, மாதவன் நடிக்கவுள்ள படத்தில் காமெடியனாக நடிக்க ஒப்பந்தமானார். அமோசன் ப்ரைமில் ‘அலெக்ஸ் இன் வுண்டர்லேண்ட்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அலெக்ஸாண்டர் பாபு. மேலும், யூடியூப் பக்கத்தில் தனியாக சேனல் ஒன்றும் நடத்தி வருகிறார். இவர் தனியாகச் செய்யும் காமெடி நிகழ்ச்சிகள் யாவுமே இணையத்தில் மிகவும் பிரபலம். தற்போது புதுமுக இயக்குநர் திலீப் இயக்கத்தில் மாதவன் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். ‘ராக்கெட்டரி’ படத்தின் பணிகள் அனைத்தையும் மாதவன் முடித்தவுடன் இப்புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது. இந்தப் ...
Read More »28 ஆண்டுகளுக்கு பின் தமிழில் அமலா!
நடிகை அமலா அக்கினேனி 28 ஆண்டுகளுக்கு பின் நேரடி தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதி படத்துக்கு பிறகு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக சர்வானந்த் நடிக்க, அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் தயாரித்து வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சர்வானந்துடன் கதாநாயகியாக ரிதுவர்மா நடிக்கிறார். இவர்களுடன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அமலா அக்கினேனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். 1991-ல் பாசில் இயக்கத்தில் ...
Read More »விஷாலுக்கு புது ஜோடியை கண்டுபிடித்த மிஷ்கின்!
துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக விஷாலுக்கு புது ஜோடியை தேடி கண்டுபிடித்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். விஷால்-மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் தயாராகும் என்று சமீபத்தில் அறிவித்தனர். இந்த படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்தது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் போலீஸ் உளவாளி கதாபாத்திரத்தில் நடித்த துப்பறிவாளன் படம் 2017-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடித்து இருந்தார். பிரசன்னா, வினய், வின்சென்ட் அசோகன், ஆண்ட்ரியா, சிம்ரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர். விஷால்-மிஷ்கின் ...
Read More »ஜி.என்.ஆர்.குமாரவேலன் – அருண் விஜய் இணையும் சினம்!
ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படத்துக்கு ‘சினம்’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ‘மாஃபியா’ படத்தை முடித்துக் கொடுத்தார் அருண் விஜய். இதனைத் தொடர்ந்து ‘பாக்ஸர்’ படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆனால், அதன் படப்பிடிப்பு தாமதமாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து ஜி.என்.ஆர் குமாரவேலன் இயக்கத்தில் உருவான படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் அருண் விஜய். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கியது. நாயகியாக பல்லக் லால் வாணி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில் அருண் விஜய் காவல்துறை ...
Read More »அஜித்துக்காக காத்திருக்கும் இயக்குனர்கள்!
வினோத் இயக்கும் தல 60 படத்திற்கு பின் அஜித்தை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின் வினோத் இயக்கத்திலேயே இரண்டாவது முறையாக அஜித் தொடர்ந்து நடிக்கிறார். அந்த படத்திற்கான பூஜை போடப்பட்டு அன்றே படத்திற்கு வலிமை என்று பெயரிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு குழு அறிவித்துவிட்டனர். இந்த படத்தை தொடர்ந்து அஜித் யாருடன் இணைவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. இந்த நேரத்தில் அஜித்தை வைத்து படம் இயக்க ஏ.ஆர்.முருகதாஸ், கார்த்திக் நரேன், புஷ்கர்-காயத்ரி, சிறுத்தை ...
Read More »தொலைக்காட்சி தொடராகும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பாக உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது வாழ்க்கை வரலாற்றை ‘நெஞ்சுக்கு நீதி’ எனும் தலைப்பில் ஏற்கனவே புத்தக வடிவில் வெளியிட்டுள்ளார். இதுவரை 6 பாகங்கள் வெளியாகியுள்ளது. குழந்தை பருவம் முதல் தனது அரசியல் வாழ்க்கை வரை தான் கடந்து வந்த பாதைகளை கருணாநிதி அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பாக உள்ளது. ‘நெஞ்சுக்கு நீதி’ என பெயரிடப்பட்டுள்ள அந்த தொடர் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal