திரைமுரசு

மன அழுத்தம் குறைய பாடகர்கள் எடுத்த புதிய முயற்சி

மன அழுத்தத்தில் இருந்து மக்கள் விடுபட பாடகர்கள் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்கள். இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கபட்டு வருகிறது. அதையும் மீறி சிலர் வெளியே சுற்றுவதால் அவர்கள் மூலம் கொரோனா பரவலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. நடிகர்-நடிகைகள் கொரோனா விழிப்புணர்வு காணொளி  வெளியிட்டு மக்களை வீட்டில் இருக்கும்படி வற்புறுத்தி வருகிறார்கள். கொரோனா தடுப்பு பணிகளில் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், மருத்துவ ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். களத்தில் பணியாற்றும் ...

Read More »

அபிராமி எடுத்த திடீர் முடிவு

பிக்பாஸ் மற்றும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து புகழ் பெற்ற அபிராமி திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் அபிராமி. அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். இவர் சமூக வலைத்தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தார். அவரது பெயரில் போலி டுவிட்டர் கணக்குள், டிக்டாக் கணக்குகள் பெருகிவிட்ட காரணத்தால் சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: நான் இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் இருக்கிறேன். ஏனென்றால் இங்கு எனக்கு அதிகாரப்பூர்வ ...

Read More »

ஊரடங்கை மீறினாரா பார்வதி

தமிழில் பூ, மரியான், உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி ஊரடங்கை மீறியதாக கூறப்படுகிறது. தமிழில் பூ, மரியான், உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை பார்வதி, கடந்த செவ்வாய்கிழமை தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி நண்பர்களுடன் அவர் காரில் ஊர் சுற்றிய படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அதில் என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற அதாறு அதாறு பாடலுக்கு அவரும், அவரது நண்பர்களும் காருக்குள்ளேயே நடனமாடுகின்றனர். போதிய சமூக இடைவெளியையும் ...

Read More »

வித்தியாசமான முயற்சியில் களமிறங்கிய ரகுல் பிரீத் சிங்

தமிழ் தெலுங்கில் பிரபலமான நடிகை ரகுல் பிரீத் சிங் வித்தியாசமான முயற்சியில் கொரோனா நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். நடிகர்கள் நடிகைகள் பலரும் கொரோனா நிவாரண நிதி திரட்டி வருகிறார்கள். ஆனால் நடிகை ரகுல் பிரீத் சிங் வித்தியாசமான முறையில் கொரோனா நிவாரண நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் ஒரு யூ-டியூப் சேனலை ஆரம்பித்துள்ளார். அதில் கிடைக்கும் தொகையை அப்படியே பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்க அவர் முடிவு செய்துள்ளார். தனது இந்த முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ...

Read More »

அத்தியாவசிய பொருட்களை பதுக்காதீர்கள் – அமிதாப்பச்சன் வேண்டுகோள்

அத்தியாவசிய பொருட்களை பதுக்காதீர்கள் என்று நடிகர் அமிதாப்பச்சன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப் பாடுகள் ஏற்படக்கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் கவனமாக இருக்கின்றன. அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளன. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பதுக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:- பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவை ஏற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு ...

Read More »

தனிமைப்படுத்திக் கொள்வதை அவமானமாக எண்ண வேண்டாம் – திரிஷா

வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் கொரோனா பரவலை தடுக்க தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சொல்வதை அவமானமாக எண்ண வேண்டாம் என திரிஷா அறிவுரை கூறியுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், உயிர்ப்பலிகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. கொரோனாவால் பாதித்தவர்கள் இருந்த பகுதிகளை சுற்றிலும் தடுப்புகள் அமைத்துள்ளனர். டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால், அந்த மாநாட்டில் ...

Read More »

1 லட்சம் பேருக்கு உணவு – ஹிருத்திக் ரோஷன் உதவிக்கரம்

பிரபல தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 1 லட்சம் பேருக்கு உணவு வழங்க பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஏற்பாடு செய்துள்ளார். கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான ஏழைகள், தினக்கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றோர் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவும் முயற்சியில் அரசுகள் ஈடுபட்டு உள்ளன. தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் உணவு, மளிகை பொருட்கள் வழங்கி வருகிறார்கள். நடிகர்-நடிகைகளும் தங்கள் வீடுகளை சுற்றி வசிக்கும் ஏழைகளுக்கு, தேடி சென்று உணவு வழங்குகிறார்கள். இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ...

Read More »

கொரோனா ஆபத்து நீங்கிய பின் என்ன செய்யலாம் – காஜல் யோசனை

இந்தியாவில் கொரோனா ஆபத்து நீங்கிய பின் என்ன செய்யலாம் என நடிகை காஜல் அகர்வால் யோசனை கூறியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தன் கோர முகத்தை காட்டி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவால் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த ஊரடங்கால் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால், வணிகர்கள் இழப்பிலிருந்து மீள ஐடியா கொடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் ...

Read More »

வீட்டிலிருந்தே துல்கர் சல்மான் இயக்கத்தில் நடித்த மம்முட்டி

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மம்முட்டி, தனது மகன் துல்கர் சல்மான் இயக்கத்தில் நடித்துள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கொறோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் ‘ஃபேமிலி’ எனும் குறும்படம் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ...

Read More »

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி வழங்கிய ராகவா லாரன்ஸ்

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி நிதியுதவி வழங்கி இருப்பதாக கூறியுள்ளார். கொரோனா நிவாரண நிதிக்கு பலரும் நிதி கொடுத்து வருகிறார்கள். நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கியுள்ளார். மேலும் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சமும், நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சமும், ஏழை மக்களுக்கு  ரூ.75 லட்சமும் வழங்கியுள்ளார்.

Read More »