நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி நிதியுதவி வழங்கி இருப்பதாக கூறியுள்ளார்.
கொரோனா நிவாரண நிதிக்கு பலரும் நிதி கொடுத்து வருகிறார்கள். நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கியுள்ளார்.
மேலும் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சமும், நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சமும், ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சமும் வழங்கியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal