கொரோனா ஆபத்து நீங்கிய பின் என்ன செய்யலாம் – காஜல் யோசனை

இந்தியாவில் கொரோனா ஆபத்து நீங்கிய பின் என்ன செய்யலாம் என நடிகை காஜல் அகர்வால் யோசனை கூறியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தன் கோர முகத்தை காட்டி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவால் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த ஊரடங்கால் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால், வணிகர்கள் இழப்பிலிருந்து மீள ஐடியா கொடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது: கொரோனா ஆபத்து முற்றிலும் நீங்கிய பிறகு நாட்டுக்காக நாம் சிலவற்றை செய்ய வேண்டும். அது என்னவெனில், நம் விடுமுறையை உள்நாட்டில் களிக்கலாம்.
காஜல் அகர்வால்
உள்ளூர் உணவகங்களில் சாப்பிடலாம். நம் நாட்டில் விளையும் காய்கறி மற்றும் பழங்களை வாங்கலாம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆடை மற்றும் காலணிகளை வாங்கி அணியலாம். இது நம் நாட்டு வணிகர்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு ஒருவருக்கொருவர் உதவினால் நாடு மென்மேலும் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.