திரைமுரசு

‘‘எனக்கு வந்த மிரட்டல்கள்’’ ! – பார்வதி

சென்னையில் ஒரு நாள், பூ, மரியான், உத்தமவில்லன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ள பார்வதி மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமூக பிரச்சினைகள் குறித்து துணிச்சலாக பேசி வருகிறார். திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்த்ததை கண்டித்தார். பார்வதிக்கு ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் மிரட்டல்கள் வந்தன. கற்பழித்து விடுவதாகவும் பயமுறுத்தினார்கள். இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பார்வதி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பார்வதி கூறியதாவது:– ‘‘சமூக வலைத்தளத்தில் ...

Read More »

“பெண் குழந்தை சாமிக்குச் சமம்” – விஜய் சேதுபதி

‘பெண் குழந்தை சாமிக்குச் சமம்’ என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. சென்னை, அயனாவரத்தில் 12 சிறுமி 22 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திரைத்துறையைச் சார்ந்த பலரும் இதுகுறித்து வேதனை தெரிவித்துவரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். “இதுபோன்ற சம்பவங்கள் பெண்ணுக்கு  நடந்தாலே தாங்க முடியாது, குழந்தை அது. எவனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையே… கொடூரமா கொலை பண்ணாலுமே பத்தாதுனு தோணுது. தண்டனை வலுவாக இருக்க வேண்டும், பயமுறுத்த வேண்டும். உட்கார்ந்து ...

Read More »

நடிகராக அறிமுகமாகும் இசையமைப்பாளர்!

மலையாளத்தில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் கோபி சுந்தர், நடிகராக அறிமுகமாகிறார். ‘உஸ்தாத் ஹோட்டல்’,‘5 சுந்தரிகள்’, ‘ரிங் மாஸ்டர்’, ‘ஹெவ் ஓல்டு ஆர் யூ’,‘பெங்களூரு டேஸ்’,‘சார்லி’,‘புலிமுருகன்’ உள்ளிட்ட பல மலையாளப் படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்தவர் கோபி சுந்தர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களுக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்திருக்கிறார். இசையமைப்பாளர்கள் நாயகனாக அறிமுகமாகும் காலமிது. அதில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் கோபி சுந்தர். ஹரி கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘டோல் கேட்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இதில் இவரோடு நடிக்கவிருப்பவர்கள் தேர்வு ...

Read More »

மக்களுக்காகத் தொடர்ந்து பாடிக்கொண்டே இருப்பேன்!- செந்தில் கணேஷ்

‘மக்களுக்காகத் தொடர்ந்து பாடிக்கொண்டே இருப்பேன்’ என ‘சூப்பர் சிங்கர் 6’ பட்டம் வென்ற மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ் ‘இந்து தமிழ்’ இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில், மக்கள் இசைக் கலைஞரான செந்தில் கணேஷ் பட்டத்தை வென்றுள்ளார். ஸ்ரீகாந்த், அனிருத், மாளவிகா, ஷக்தி, ரக்‌ஷிதா, செந்தில் கணேஷ் என 6 போர் பங்குகொண்ட இறுதிப் போட்டியில், முதல் பரிசை செந்தில் கணேஷும், இரண்டாவது பரிசை ரக்‌ஷிதாவும், மூன்றாவது பரிசை மாளவிகாவும் பெற்றுள்ளனர். ...

Read More »

கடைக்குட்டி சிங்கம்!- விமர்சனம்

80களிலும் 90களிலும் குடும்பம் என்ற அமைப்பைப் போற்றும் சினிமாக்கள் வரிசைகட்டி வெளிவந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு படத்திலும் ஒரு பாத்திரம் தியாகியாக இருக்கும். ஆனால், தமிழ் சினிமாவை சமீப காலமாக நகைச்சுவைப் படங்களும் பேய்ப் படங்களும் பிடித்து ஆட்டியதில் இந்த வகைப் படங்கள் இல்லாமலேயே போயின. இந்தப் படத்தின் மூலம் அந்த கடந்த காலத்திற்குள் கூட்டிச் செல்கிறார் பாண்டிராஜ். திரைப்படம் கடைக்குட்டி சிங்கம் நடிகர்கள் கார்த்தி, சாயிஷா, அர்த்தனா பினு, பிரியா பவானி, சத்யராஜ், சூரி, பொன் வண்ணன், விஜி, பானுப்ரியா, இளவரசு, சந்துரு, சரவணன் இசை ...

Read More »

வைரமுத்துவை வாழ்த்துவோம்! – இன்று வைரமுத்து பிறந்தநாள்!

திறமை இருந்தால் ஜெயிக்கலாம். ஆனால் திறமை மட்டுமே போதுமா என்ன? உழைப்பும் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பும் வெற்றிக்கு மிக மிக அவசியம். உழைத்தால் ஜெயிக்கலாம் என்பதற்கான உதாரணங்களில் முக்கியமானவர் கவிப்பேரரசு வைரமுத்து. உழைப்பு, ஜெயித்தல் என்றெல்லாம் ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். ஆனால் வடுகப்பட்டிக்காரரின் வெற்றிக்கு இன்னொரு காரணமும் உண்டு. சொல்லவேண்டும். சொல்வதைத் தெளிவாகச் சொல்லவேண்டும். அதிலும் புதுமையாகவும் நளினமாகவும் சொல்லவேண்டும். இந்தப் பாட்டரசன் வைரமுத்துவின் பேனா, நவீன மையால் நிரப்பப்பட்டு நிரப்பப்பட்டு, காலி செய்யப்பட்டு, நிரப்பிக்கொண்டே இருக்கிற உழைப்புத் தேனி அவருடையது! ...

Read More »

தாய்லாந்து குகை சிறுவர்கள் மீட்பு: தயாராகிறது ஹாலிவுட் திரைப்படம்!

உலகையே மெய்சிலிர்க்க வைத்த தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் விரைவில் ஹாலிவுட் திரைப்படமாகிறது. நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தத்ரூபமாக படமாக்க ஹாலிவுட் வட்டாரம் தயாராகி வருகிறது. தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் மியான்மர் எல்லையில் தாம் லுவாங் என்ற குகையில் உள்ளது. சுமார் 10 கி.மீ நீளமுடைய இந்த குகை ஆசியாவிலேயே மிகப்பெரிய குகையாகும். ‘வைல்டு போர்’ என்ற கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த, 11 வயது முதல் 16 வயது கொண்ட சிறுவர்கள் கடந்த 23-ம் திகதி இந்தக் குகைக்கு சென்றனர். ...

Read More »

`நான் பெற்ற அன்பு எல்லையில்லாதது!’-புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சோனாலி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் `காதலர் தினம்` பட நாயகி சோனாலி பிந்த்ரே, தன் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில், `உங்களது ஆதரவால் நான் தனியாக இல்லை’ எனப் பதிவிட்டுள்ளார். புற்றுநோயின் பிடியிலிருந்து நடிகை மனீஷா கொய்ராலா மீண்டு வந்த நிலையில், சோனாலி பிந்த்ரேவும் புற்றுநோயின் பிடியில் சிக்கியிருப்பது பாலிவுட் நடிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அமெரிக்கா, நியூயார்க் நகரில் சிகிச்சை பெற்று வரும் அவர், தன் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில்,`நம்முள் மறைந்திருக்கும் அந்தவலிமையை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் வரை நாம் எப்படி வலுவாக இருக்கிறோம் ...

Read More »

ஆவணப்பட இயக்குநர் திவ்யாபாரதியைக் கைது செய்ய இடைக்கால தடை!

ஆவணப்பட இயக்குநர் திவ்யாபாரதியை ஜூலை 16-ம்திகதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை தொடரும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் அதில், “கக்கூஸ் படம் மற்றும் பல்வேறு ஆவண, குறும்படங்களை இயக்கியுள்ளேன். தற்போது ஒகி புயல் பற்றிய `ஒருத்தரும் வரேல’ என்ற ஆவணப்படம் எடுத்துவருகிறேன். இதன் டீசரை வெளியிட்டுள்ளேன். இந்நிலையில், எனது வீட்டுக்குப் காவல் துறை வந்து துன்புறுத்துகின்றனர். மேலும் படம் தொடர்பான ஆவணங்களைக் கேட்டு துன்புறுத்தி வருகிறார்கள். ...

Read More »

மதன் கார்க்கி உச்சத்தை எவ்வாறு தொட்டார்? வைரமுத்து

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு கவிப்பேரசு வைரமுத்து தன் அனுபவத்தை சுவாரஸ்யமாக விவரித்தார். தஞ்சாவூர் பாரத் கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றிய வைரமுத்து, “என் முதல் மகன் மிகவும் நன்றாகப் படிப்பான். அவன் 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுப்பான். என் இரண்டாவது மகன் ஓரளவுக்குப் படிப்பான். 65 – 75 மதிப்பெண் வாங்குவது வழக்கம். ஆனால், ஒரு முறை இரண்டு பாடங்களில் அவன் தேர்ச்சி பெறவில்லை. நான் மிகவும் மன வேதனை அடைந்தேன். என் மனைவி பி.ஹெச்.டி முடித்தவர். நான் முதுகலை முடித்தவன். ...

Read More »