திரைமுரசு

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் நிலை என்ன?- இயக்குநர் மணிரத்னம்

சில காலங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தையிலிருந்த ‘பொன்னியின் செல்வன்’ நிலை என்ன என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காற்று வெளியிடை’. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மணிரத்னம் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இறுதிகட்டப் பணிகளை முழுமையாக முடித்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைக்கவே, ஏப்ரல் 7ம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக ...

Read More »

“பயணம் ஒரு ஆசிரியரைப் போன்றது“ – குல் பனாக்

‘பயணம் ஒரு ஆசிரியரைப் போன்றது. அது நமக்கு ஏராளமான பாடங்களை கற்பிக்கிறது’’ என்கிறார், பாலிவுட் நடிகையும், தொழிலதிபருமான குல் பனாக். பயணங்கள் குறித்து அவர் மேலும் பகிரும் வி‌ஷயங்கள்… ‘‘இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும் ஒரு ராணுவக் குடும்பத்தில் பிறந்தவள் நான். இயற்கையாகவே இடம் மாறிக் கொண்டே இருக்க வேண்டியிருந்தாலும், உல்லாசப் பயணத்துக்கும் எங்கள் குடும்பம் உரிய முக்கியத்துவம் கொடுத்தது. எனக்கு கஷ்டங்கள் வரும்போதெல்லாம் அவைகளில் இருந்து தப்பிக்க நான் பயணங்களை பயன்படுத்திக் கொண்டேன். அதாவது, பரீட்சைகள், பரீட்சை முடிவுகள், நெருங்கிய தோழிகளுடன் ஏற்படும் ...

Read More »

விவசாயிகளை காப்பாற்றி தேசத்தின் வயிற்றை காப்பாற்றுங்கள் – வைரமுத்து

வறட்சி நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் டில்லியில் இரண்டு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சியினர் அவர்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் கூட சிலதினங்களுக்கு முன்னர் டில்லி சென்று விவசாயிகளை சந்தித்து பேசினர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வரும் வேளையில், கவிஞர் வைரமுத்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்விபரம் வருமாறு.. ‛‛தமிழக விவசாயிகள், ஜந்தர் மந்தர் வெயிலில் ...

Read More »

இரவோடு இரவாக நடிகர்கள் கட்சி துவக்கம்!

ரஜினியை நேற்று சந்தித்த மலேஷிய பிரதமர், நடிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அரசியல் கட்சித் துவங்கினால், தான் முழு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். இதையடுத்து, நேற்று இரவோடு இரவாக, கமல், சரோஜா தேவி, பொன் வண்ணன், சரத்குமார், சிவகுமார், நாசர், விஷால், ராதாரவி, சுஹாசினி, மீனா, சிம்பு, சினேகா, கோவை சரளா, விவேக், வடிவேலு உட்பட பல நடிகர்கள் கூடி, ஆலோசனை நடத்தினர். கட்சியின் பெயர், சிவாஜி, எம்.ஜி.ஆர்., சாவித்ரி, பத்மினி ஆகிய பெயர்களின் சாயல் வரும் வகையில் அமைய வேண்டும் என ஆசைப்பட்டனர். ...

Read More »

குவாலியர் மகாராணியின் வாழ்க்கை வரலாறு

குவாலியர் மகாராணி விஜய ராஜே சிந்தியாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா எழுதிய நூலை தழுவி தயாரிக்கப்பட்ட சினிமாப் படத்தின் டிரெயிலரை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டார். மத்தியப் பிரதேசம் மாநிலத்துக்கு உட்பட்ட குவாலியர் நகரம் வெள்ளையர் ஆட்சிக் காலத்திற்கு முன்னர் குவாலியர் என்ற சுயாட்சி பெற்ற பிரதேசமாக விளங்கி வந்தது. 15-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இந்தப் பகுதியை ஆண்டுவந்த மன்னர்கள் வம்சத்தின் கடைசி மகாராணியாக விளங்கிய ராஜமாதா விஜய ராஜே சிந்தியா, நாடு சுதந்திரம் ...

Read More »

இயக்குனர் மனிஷ் ஹரிசங்கர் அக்ஷராவை பாராட்டியுள்ளார்

லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா படத்தில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் பெண்ணாக நடித்துள்ளார் அக்ஷரா ஹாஸன். தனுஷின் ஷமிதாப் படம் மூலம் நடிகையானவர் உலக நாயகனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன். அவர் நடித்துள்ள லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா படம் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் மனிஷ் ஹரிசங்கர் அக்ஷராவை பாராட்டியுள்ளார்.

Read More »

வடசென்னை படத்தில் விஜய் சேதுபதி விலகியது உறுதியானது

வடசென்னை படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக கூறப்பட்ட செய்தி தற்போது உறுதியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தில் விஜய் சேதுபதி விலகிவிட்டதாக பேச்சு அடிபட்டது. ஒருதரப்பில் இந்த செய்தி பொய் என்று கூறப்பட்டாலும், மறுபக்கம் இது வெறும் வதந்திதான் என்று கூறப்பட்டது. இந்நிலையில், விஜய் சேதுபதி ‘வடசென்னை’ படத்தில் விலகிவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விலகியதற்கு யாருடனும் எந்த மனஸ்தாபம் இல்லை ...

Read More »

வாழ்க்கையில் நிறைய சர்ச்சைகளை சந்தித்தவர்தான் கமல்ஹாசன்

எனது தந்தை(கமல்ஹாசனின்) எதையும் யோசித்தே பேசுவார். வாழ்க்கையில் இதுபோல் நிறைய சர்ச்சைகளை அவர் சந்தித்து இருக்கிறார் என்று அக்‌ஷராஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்த கேள்வியொன்றுக்கு மகாபாரதத்தை மேற்கோள் காட்டி பதில் அளித்து இருந்தார். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்துக்களின் கலாசாரத்தை அவர் கொச்சைப்படுத்தி இருப்பதாகவும் குற்றம்சாட்டின. கமல்ஹாசன் மீது வள்ளியூர், கும்பகோணம் கோர்ட்டுகளில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. பெங்களூருவிலும் பிரணவந்தா என்ற சாமியார் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ...

Read More »

சமுத்திரகனி படத்திலிருந்து வெளியேறிய வரலட்சுமி

வரலட்சுமி சரத்குமார், சமுத்திரகனி இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகும் படத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார். சமுத்திரகனி நடித்து, இயக்கி, தயாரித்து வெளிவந்த ‘அப்பா’ படம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தை மலையாளத்திலும் சமுத்திரகனி ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மலையாளத்தில் இப்படத்திற்கு ‘ஆகாச மிட்டாயீ’ என்று பெயர் வைத்துள்ளனர். சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், இப்படத்தில் இருந்து வரலட்சுமி திடீரென விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, வரலட்சுமியே தனது ...

Read More »

மகாபாரதத்தை அவமதித்தாக கமல் மீது பெங்களூரிலும் வழக்கு

மகாபாரதத்தை அவமதித்ததாக தமிழகத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், கர்நாடகத்திலும் அவருககு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு மகாபாரதத்தை மேற்கோள் காட்டி விளக்கமளித்தார். கமல்ஹாசனின் இந்த விளக்கம் மகாபாரதத்தை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக இந்து அமைப்புகள் அவருக்கு எதிராக போர்க்கொடி எழுப்பின. இதைத்தொடர்ந்து, வள்ளியூர், கும்பகோணம் ஆகிய நீதிமன்றங்களில் கமல்ஹாசன் மீது மகாபாரதத்தை அவமதித்ததாக இந்து அமைப்பினர் புகார் மனு அளித்தனர். இந்த மனு மீதான விசாரணையை ...

Read More »