அவுஸ்திரேலியமுரசு

சோதனை செய்வதையும் தடுப்பூசி போடுவதையும் அதிகரிக்க அழைப்பு

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 452 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றுள்ளவர்களில் 50 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளார்கள்.  தொற்றுக்குள்ளாகுபவர்களில் 70 சதவீதத்தினர் 40 வயதிற்குட்பட்டவர்கள்.  வயது எழுபதுகளிலுள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பெண் ஒருவர் இறந்துள்ளார். Lennox Head பகுதி கழிவு நீர் சோதனையில் Covid-19 கூறுகள் கண்டறியப்பட்டதால், அந்தப் பகுதியில் குடியிருப்பவர்கள் Covid சோதனை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Premier Gladys Berejiklian அழைப்பு விடுத்துள்ளார்.

Read More »

ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்ட புதைபடிமம் – மிகப்பெரிய பறக்கும் வகை பல்லியினம்

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறக்கும் வகையைச் சேர்ந்த மிகப்பெரும் பல்லியினம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த   பறக்கும் வகையைச் சேர்ந்த மிகப்பெரும் பல்லியினம்  என்று கண்டறியப்பட்டுள்ளது. குயின்ஸ்லேண்டில் கடந்த 2011ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இதன் புதைபடிமத்தை ஆய்வு செய்த அறிஞர்கள், இதற்கு “தபுங்கக்கா ஷவி” என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இவை சுமார் 7 மீட்டர் நீளமுள்ள இறக்கைகளுடனும், 1 மீட்டருக்கு கூடுதலான நீளமுடைய கூர்மையான 40 பற்களுடன் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ...

Read More »

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் ஒரு வார கால ஊரடங்கு அமல்

ஆஸ்திரேலியாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் முதல் அலையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா தற்போது 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குவின்ஸ்லாந்து ஆகிய மாகாணங்களை டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆக்கிரமித்துள்ளது. முக்கியமாக, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னியில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. அங்கு தொடர்ந்து 7-வது வாரமாக ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் ...

Read More »

சிட்னி வாழ் தனி நபர்களும் தனிமைப்படுத்தல் விதிகளும்

சிட்னி பெரு நகரில் தனியாக வாழ்பவர்கள் விருந்தாளி ஒருவரை மட்டும் வீட்டிற்கு வர அனுமதிக்க முடியும். ஜூலை 31ஆம் தேதி, சனிக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் இந்தக் கட்டுப்பாடு, தனியாக வாழும் ஒருவர் தன்னைப் பார்க்க வருவதற்காக ஒருவர் பெயரைப் பரிந்துரைக்க முடியும். அவர் குடும்ப அங்கத்தவராகவோ அல்லது நண்பராகவோ இருக்கலாம். ஆனால், பரிந்துரைத்து அனுமதி பெற்ற பின்னர், அவரை மாற்ற முடியாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் முடக்க நிலையை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடித்திருப்பதாக NSW மாநில அரசு ...

Read More »

‘பாலியல் தொழில் குற்றமல்ல’- விக்டோரியாவில் சட்டம் கொண்டுவரப்படுகிறது!

பாலியல் தொழிலில் ஈடுபடுவது ஒரு குற்றச்செயல் அல்ல என்பதாக விக்டோரியாவில் சட்டமாற்றம் விரைவில் நடைமுறைக்கு வரும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன்படி விக்டோரியாவின் ஏனைய தொழில்துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு இருக்கும் உரிமைகள் பாலியல் தொழிலாளர்களுக்கும் கிடைக்கவுள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கான சட்டங்களில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருதல், பாலியல் தொழில் குறித்த பார்வையை மாற்றுதல், பாலியல் தொழிலாளர்களுக்கான சுகாதார மற்றும் நீதித்துறை சேவைகளை மேம்படுத்தல் போன்ற பணிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும் என விக்டோரிய அரசு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாலியல் தொழில் ...

Read More »

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் ஒரு வார கால ஊரடங்கு அமல்

ஆஸ்திரேலியாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் முதல் அலையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா தற்போது 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குவின்ஸ்லாந்து ஆகிய மாகாணங்களை டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆக்கிரமித்துள்ளது. முக்கியமாக, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னியில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. அங்கு தொடர்ந்து 7-வது வாரமாக ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் ...

Read More »

பிரியா-நடேஸ் மகள் தருணிகா தொடர்பான முறையீட்டை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டநிலையில் தற்போது பெர்த்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா சார்பிலான மேன்முறையீடொன்றை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. பிரியா, நடேஸ் மற்றும் இவர்களது மூத்த மகள் கோபிகா ஆகியோரது விசா விண்ணப்பங்கள் மற்றும் மேற்முறையீடுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ள பின்னணியில், நான்கு வயதுச் சிறுமி தருணிகாவின் அகதிதஞ்ச விண்ணப்பத்திற்கு procedural fairness-பிரிசீலனை சார்ந்த நியாயத்தன்மை காண்பிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது. மேலும் தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இவ்விசாரணை முடியும் ...

Read More »

நியூசவுத்…. புதிதாக 344 பேருக்கு தொற்று

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 344 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இருவர் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்கள் 30 வயதுகளிலுள்ளவர் மற்றும் 90 வயதுகளிலுள்ள ஒருவர் எனவும் இவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து கடந்த ஜுன் மாதம் NSW மாநிலத்தில் ஏற்பட்ட கோவிட் பரவல் காரணமாக மரணமடைந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 344 பேரில் ஆகக்குறைந்தது 65 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர். இந்தப்பின்னணியில் Dubbo ...

Read More »

ஆஸ்திரேலிய பிரதமருக்கு குறையும் மக்களின் ஆதரவு: கருத்துக்கணிப்பில் தகவல்

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து குறைந்துவருவதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் கரோனா அபாயம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவருவதாலும் தடுப்பூசி விநியோகத்தில் சுணக்கம் ஏற்பட்டதன் காரணமாகவும் மக்கள் கோபமாக உள்ளனர் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பத்திரிகையின் சார்பாக நியூஸ்போல் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், “47 சதவிகித மக்கள் மட்டுமே ஸ்காட் மாரிசனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். டந்தாண்டு ஜனவரி மாதம் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்திரேலியா திணறியபோது, மாரிசனக்கு எதிராக கடும் விமர்சனங்கள் ...

Read More »

தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு பணம் வழங்கலாமா?

அவுஸ் ரேலியாவில் மக்கள் எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்க, தடுப்பூசி போடுபவர்களுக்குப் பணம் வழங்கலாம் என்ற யோசனையை labor கட்சி முன்வைத்துள்ளது. தடுப்பூசி போடுபவர்களுக்கு 300 டொலர்கள் வழங்கலாம் என்ற அந்த யோசனை மக்களை அவமதிப்பு செய்வதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் விவரித்துள்ளார் ஆனால், தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த அரசு அமைத்துள்ள செயற் குழுவின் தலைவர், இராணுவ அதிகாரி, இந்த யோசனையை ஆதரிக்கிறார்.

Read More »